30 April 2014

கஞ்சப்பிசினாறி கணவனால் மனைவிபடும் கஷ்டம் !

''மேடம் ,கடைக்கு வர்ற எல்லோரும் புதுசா வந்த பற்பசையைத்தான் கேட்பாங்க ,நீங்க மட்டும் ஏன் பழைய சரக்கை கேட்கிறீங்க ?''
''அதையேன் கேக்குறீங்க ...எதை வாங்கினாலும் ,அதோட காலாவதி தேதியான  ரெண்டு வருசத்துக்கு   சிக்கனமா பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் கட்டாயப் படுத்துறாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...



தின 'சிரி ' ஜோக்!பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு 

மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''

''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் 

மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

'சிரி'கவிதை!மழை அளவு குறைவு தரும் பாடம் ?

ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

30 comments:

  1. "//மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா//" - நல்ல யோசனை தான்.

    பொண்ணு பார்க்க போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, வெறும் ஸ்வீட் காரம் எல்லாம் சாப்பிட்டு, பொண்ணு பிடிக்கலை என்று சொல்லுபவர்களுக்கு இந்த உத்தி தான் சரி.

    ReplyDelete
    Replies
    1. அப்பவும்...பொண்ணும் சரியில்லை ,ஸ்வீட் காரமும் சரியில்லைன்னு நொட்டை சொல்லிட்டு போவாங்களே !
      நன்றி

      Delete
  2. ஸ்வீட் யோசனை நல்ல யோசனை

    ReplyDelete
    Replies
    1. பொண்ணு பிடிக்கலைன்னுஅவங்க நாசூக்காச் சொல்ல நாமளே வழிபண்ணித் தர்ற மாதிரி இருக்கும் பரவாயில்லையா ?
      நன்றி

      Delete
  3. மூன்றுமே ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்லாமல் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. நிகண்டுவில் இணைந்த பின்னும் விட மாட்டேன் என்கிறது கருப்பு !
      நன்றி

      Delete
  5. இரண்டாவது ஹா... ஹ... ஹா... ஹ...

    ReplyDelete
    Replies
    1. நல்லதும் நினைக்க முடியலே ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  6. 100கிராம் பேஸ்ட்டில் எக்ஸ்பைரி டேட் இரண்டு வருசம்னு போட்டிருக்கு..அந்த பேஸ்ட்டை ரெண்டு வருஷம் பயன் படுத்தணும்னா ...டெய்லி மூடியை திறந்து வைத்து மூடலாம் !
    நன்றி

    ReplyDelete
  7. இதைப்பார்த்த பிறகுதான் ஜோக் புரிந்தது!

    ReplyDelete
  8. சிக்கனமா பயன்படுத்தணும்னு
    இப்படி நெருக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. பேஸ்ட் தீர்ந்த பிறகு நெருக்கினாலும் ,பிதுக்கினாலும் காற்றுதானே வரும் ?
      நன்றி

      Delete
  9. இப்பத்தான் புரியுது. செல பேர் நாள் பூரா நியூஸ்பேபர கைலவச்சிக்கிட்டே ஒக்கந்துருப்பாங்க.

    கொஞ்ச நாளா மதவாதி மோதிக்கு வக்காலத்து வாங்கியே நேரம் போய்ருச்சு. அதுதான் இந்தப் பக்கம் வரமுடியல.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. ஆமா ,அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் படிக்கணும்னு தானே தேதி போட்டிருக்கு !

      ஓ..அந்த மோடி மஸ்தான் வேலையை வேற செய்றீங்களா ?
      நன்றி

      Delete
  10. நானொரு டியூப் லைட்! முதல் ஜோக் இரண்டு தரம் படிச்சதும்தான் புரிஞ்சுது! இரண்டாவது ஜோக் : பாவம்! 3வதும் ஓகே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை புரிஞ்சதே,ஒருவேளை எனக்குதான் ஒரே தடவையில் புரியற மாதிரி சொல்லத் தெரியலையோ ?
      நன்றி

      Delete
  11. என்னமோ தெரியல. போன வருசம் நீங்க போட்ட ஜோக்குங்கதான் சூப்பரா இருக்கு. அப்போல்லாம் ரொம்ப ஃபார்ம்ல இருந்துருக்கீங்க போல. இன்னைய ஜோக் எனக்கு புரியலீங்க. நாந்தான் ட்யூல் லைட்டாய்ட்டேனோ :))

    ReplyDelete
    Replies
    1. ஓல்ட் இஸ் கோல்ட் சொல்றதுலேயும் அர்த்தமிருக்கே ...நீங்க ட்யுப்லைட் ஆகலே ,எனக்குத்தான் பல்பு கொடுக்கத் தெரியலே !
      நன்றி

      Delete
  12. ஒட்டு மொத்தமா.. ஏன் மழை பெய்யலேன்னு.. இப்பத்தான் புரியுது!..

    ReplyDelete
    Replies
    1. நமக்கு புரிஞ்சதாலோ என்னவோ இங்கே மதுரையில் இரண்டு மணி நேரம் சரியான மழை !
      நன்றி

      Delete
  13. அந்த நல்லவர் நானாக ஏன் இருக்க கூடாது?

    ReplyDelete
    Replies
    1. இங்கே மழைக் கொட்டி தீர்த்து விட்டதால் நானொரு நல்லவன் இருக்கேன்னு நிரூபணம் ஆயிடுச்சு ,உங்க ஊர்லே மழைப் பெய்து இருந்தால் நீங்களும் நல்லவரே !
      நன்றி

      Delete
  14. நிறைய யோசிக்கிறீங்க! நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு ஜோக் எழுத! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. 'தளிர்'க் கரத்தை நினைத்தால் எனக்கே கற்பனை பொங்கி வடியுது ,உங்களுக்கு சொல்லணுமாசுரேஷ் ஜி ?அதான் கலக்குறீங்களே !
      நன்றி

      Delete