13 March 2016

தீரவே தீராதோ சேலை மோகம் :)

                  ''என்னங்க ,ஆன் லைன்லே  நான் ஆர்டர் செய்த சேலை வந்திருக்கு ,அதை ஏன் இவ்வளவு ஆச்சரியமாப் பார்க்கிறீங்க ?''
                  ''ஏழு கடை ஏறி இறங்கி ,நூறு சேலையைத் தடவி ,கசக்கி ,விரலாலே கீறிப் பார்த்து வாங்கிறது தானே உன் வழக்கம் ?நீ எப்படி ஆர்டர்  பண்ணினே ?''
மருமகன் அப்பாவின்னா இப்படியும் ஏமாற்றலாமா :)                   
           ''ஏம்மா ,மாப்பிள்ளைக்கு  நான் போட்டது பித்தளை மோதிரம்னு  ,இன்னுமா  அவர் கண்டு பிடிக்கலே ?''
                   '' அவர்தான்  உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !''
ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா :)
               ''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா  பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
               ''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ  நினைக்கிறதையே  கண்டுபிடிக்க  முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது  ?''
நடிகர்கள் சொல்வதும் 'டூப்பு 'தானா :)
              ''அந்த நடிகர், அடுத்த படத்தில் நடிப்பதற்கு  உயிரோட இருப்பாரான்னு தெரியலியா ,ஏன் ?''
              ''இப்ப நடிக்கிற படத்திலேயே 'உயிரைக் கொடுத்து ' நடிச்சுகிட்டு இருக்காராமே !''
யாருக்கு பதவி கிடைக்கும் :)
'லக்கும் 'இருந்து  ...
பல்லக்கும்  தூக்கத் தெரிஞ்சா போதும் ..
பதவி கிடைத்து விடும் அரசியலில் !

23 comments:

  1. லக்கு பல்லக்கு....
    உயிரைக் கொடுத்து நடிப்பு
    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தை விளையாட்டை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  2. Replies
    1. 01. காலம் மாறும் போது நாமலும் மாறித்தான் ஆகணும்.
      02. உலகமும் தெரியலை, உலோகமும் தெரியலையா ?
      03. உண்மைதானே..
      04. டூப் மாஸ்டர் இல்லையா ?
      05. எனக்கு ரெண்டுமே இல்லையே... ஜி

      Delete
    2. த ம வாக்கு தலையைச் சுற்ற வைக்குதா :)

      Delete
    3. காலம் மாறினாலும் சேலை எடுப்பது மட்டும் மாறவே மாறாதே :)
      இரண்டுமேதான் :)
      தன்னை உணர்வதே கஷ்டம் :)
      அழுவதுக்குமா டூப் :)
      அதுக்கு சந்தோசம் இல்லே படணும்:)

      Delete
  3. ஆன் லைன்னால ஆண்கள் பிழைத்தார்கள்... அத்துடன் ஆன் லைன்காரனும்தான்...! ஆன் லைன்காரன் ஆஃப் ஆகாமல் இருந்தால் நல்லது...! காச வாங்கி பையில போட்டுட்டு போன இடம் தெரியலைன்னே அலையவிடாம இருந்தாச் சரி...!

    அதைப்பத்தி எல்லாம் கவலைப்படுற மாதிரி தெரியல... திருதிருன்னு... திருநங்கை மாதிரியே முழிச்சிட்டே இருக்காரு...!

    நான்கூடத்தான் இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு நெனச்சேன்...!

    தப்பாச் சொல்றீங்க.... உயிர எடுத்து நடிக்கிறாரு... ‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு...’ இந்தப் பாட்டப் பாடி நடிக்கனும்... அதுக்காக நம்ப முடியாதத எல்லாம் பேசி ரொம்பத்தான் ஓவரா நடிக்காதிங்க...!

    பல்லக்கும் தூக்க யாரையும் காணாம்... பல்லக்கில் ஏறத்தான் ஆட்கள் இருக்கிறார்கள்...! பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக...!

    த.ம. 2






    ReplyDelete
    Replies
    1. காசு விஷயத்தில் பரவாயில்லை ,டெலிவரிக்கு பின்தான் காசு :)

      திருநங்கையைப் பற்றி ஏளனமா எடை போடாதீங்க:)

      நீங்க பால் ஊற்றிப் பார்த்தீங்களா :)

      இப்போ பலபேர் நடிப்பு அப்படித்தான் இருக்கு :)

      பல்லாக்கு வாங்குவதை விட ஏற நினைப்பவர்களே அதிகம் என்று தெரிந்தும் வாங்க நினைக்கலாமா :)

      Delete
  4. ரசித்தேன் பாஸ் எல்லாவற்றையும்.

    ReplyDelete
    Replies
    1. என் தாமத நிலை அறிந்து சுருக்கமாய் கருது சொன்ன உங்களுக்கு நன்றி ஜி :)

      Delete
  5. லக்கு... பல்லக்கு!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது தொண்டர்களுக்கான தத்துவம் :)

      Delete
  6. Replies
    1. படமும் அருமைதானே :)

      Delete
  7. லக்கு பல்லக்கு...சூப்பர்.

    (உ)லோகம் தெரியாத மாப்பிள்ளை பாவம்...







    ReplyDelete
    Replies
    1. லக்குள்ளார் பல்லக்கு ஏறுவார் :)

      மாப்பிள்ளை கடைசி வரைக்கும் இப்படியேவா இருந்திடுவார் :)

      Delete
  8. ஆமா....எப்படி ஆர்டர் பண்ணினாங்க..... ?''

    ReplyDelete
    Replies
    1. பார்க்காமலே இவ்வளவு சீக்கிரமாவா சந்தேகம் தீர்ந்துடுச்சு :)

      Delete
  9. ''என்னங்க ,ஆன் லைன்லே  நான் ஆர்டர் செய்த சேலை வந்திருக்கு ,அதை ஏன் இவ்வளவு ஆச்சரியமாப் பார்க்கிறீங்க ?''
                      ''ஏழு கடை ஏறி இறங்கி ,நூறு சேலையைத் தடவி ,கசக்கி ,விரலாலே கீறிப் பார்த்து வாங்கிறது தானே உன் வழக்கம் ?நீ எப்படி ஆர்டர்  பண்ணினே ?''


    இதான் நண்பரே யோசிக்கணும்
    எத்தனையோ கடை ஏறி இறங்கினாலும்
    வராத திருப்தி இதில் எப்படி....????
    ஒரு வேளை புருசன்காரனோட ஒரு மாத சம்பளம்
    இதன் விலையோ..

    ReplyDelete
    Replies
    1. பெண்ணோட மனசிலே உள்ளதை புரிஞ்சிக்கவே முடியாது என்பது உண்மைதானே :)

      Delete
  10. ஜி நேற்றைய கருத்தை பார்த்தீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. பார்க்காமல் இருப்பேனா ?தாமதம் ஆனதுக்கு மன்னியுங்கள் ஜி :)

      Delete
  11. ஆன் லைன் சேலையால்,உங்க தொழிலுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையா ஜி :)

    ReplyDelete