இவனெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளில்லை :)
''லெக்சரருக்கும் ,புரொபசருக்கும் என்ன வித்தியாசம் ?''
''பிரசங்கிக்கும் ,அதிக பிரசங்கிக்கும் உள்ள வித்தியாசம்தான் !''
பொழைக்கத் தெரிந்த நண்பன் :)
''உன்னோட திருமண அழைப்பிதழில் வங்கிக்கணக்கு எண்ணை எதுக்கு குறிப்பிட்டு இருக்கே ?''
''திருமணத்துக்கு வர முடியாட்டியும் பரவாயில்லை ,மறுமொய்யை வங்கிக் கணக்கில் போடவும்னு சொல்லி இருக்கேன் !''
பையனுக்கு இப்படியும் பாரதி நினைப்பு :)
'' பாரதி பிறந்த நாள் வந்தாலே எனக்கு என் தமிழ் வாத்தியார் ஞாபகம்தான் வரும் !''
''பாரதியாரோட கவிதைகளை அவர் அவ்வளவு அழகா சொல்லி தருவாரா ?''
''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு மகா,கவி ,பாரதின்னு பெயர் வச்சிருக்காரே !''
கல்யாணப் பொண்ணுக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)
''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே !''
மனைவியால் நொந்தவரின் கேள்வி :)
என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
என் அம்மா போனார் ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான் வருமோ ?
|
|
Tweet |
ரசித்தேன் ஜி.
ReplyDeleteமூணாவது ஜோக் போன்ற ஒன்றை தங்கள் தளத்தில் முன்னர் படித்த ஞாபகம்...
மற்றவை அருமை...
சரியாக சொன்னீங்க .மகா ,கவி .பாரதியை உங்களால் மறக்க முடியலியா :)
Deleteஅதெப்படி முடியும் ஜி... மறக்க கூடிய பெயரா அது...???????
Delete:)
Deleteலெக்சரர் பேசறது புரியாது...! புரொபசர் பேசறதெல்லாம் புரியாது...!
ReplyDeleteகழுத்தில மாலையிட்ட மங்கையாக... குழந்தைக்கு பால் கொடுத்திக்கிட்டு இருக்கிறது யாரும்மா... பல பேர் வர்ற இடம்... போற இடம்... ஒங்கள மாப்பிள மறைவா இருந்து பாலக் கொடுக்கச் சொல்றாரு... மெய்யாகவே புட்டிப் பால் கொடுத்தாலும்...!
இவரல்லவோ மகா கவி பாரதி தாசன்...!
அணைக்கிற கைதானே... அடிக்கும்...!
போனால் வராது...! சரி... போனால் போகட்டும் போடா...! இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?!
த.ம. 1
இரண்டு பேருமே தத்துவ ஆசிரியர்களோ :)
Deleteஇப்படி எல்லாம் நடக்கும்னுதானே ,அங்கங்கே தாய்ப் பால் ஊட்டும் அறையைத் திறந்து வச்சிருக்காக :)
பையன் பிறந்தா தாசன் என்றே பெயர் வைப்பாரோ :)
அணைக்கவும் வேணாம் அடிக்கவும் வேணாம் :)
இந்த பாட்டைப் பாடுற நாம என்ன நிரந்தரமா :)
என்ன ஒரு குருபக்தி!
ReplyDeleteஎன்ன ஒரு முன்யோசனை
தமிழ்ப் பற்று!
என்ன ஒரு சிந்தனை!
சேச்சே...
குருபக்தியா ,குயுக்திபுத்தியா :)
Deleteமனுஷன் காசுக்கு அலையுறான் :)
பத்மா ,ஸ்ரீ ,சிவாஜி ,கணேசன் என்று பெயர் வைத்தவரும் இருக்கார் :)
இருந்தாலும் தீ அணைப்பு வீரரை இப்படி மட்டம் தட்டுவது தப்பு :)
நமக்கு அமைந்த மாதிரி அவருக்கு அமையவில்லையே :)
அனைத்தையும் ரசித்தேன். தீயணைப்பு மட்டும் சற்றே அதிகமாக.
ReplyDeleteதீயா அணைக்கணும் குமாரு என்று சொல்லத் தோணுதா :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
மனைவியால் நொந்தவரின் கேள்வி சரிதானே:)
Deleteரசித்தேன் நண்பரே!
ReplyDeleteத ம 5
பாரதி நினைவாக வைத்த பெயர்கள் அருமைதானே :)
Delete1. ஹஹ்ஹஹஹ்
ReplyDelete2. மொய் ம்ம்ம்ம் இப்படியும் ஆகலாம் தான்..
தீ"யணைப்பு" கமல் நடித்த பணம் மைக்கேல் மதன காமராஜனை நினைவுபடுத்தியது!!
கதை கேளு கதை கேளு மைக்கேல் மதன காமராஜன் கதை கேளு ..பாடல் காதிலே கேட்கிறதே :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteபொழைக்கத் தெரிந்த நண்பனைத் தானே :)
Delete1)அடிதடியும் தடியடியும்.. ஆகா.. மறக்கமுடியுமா!..
ReplyDelete2)வங்கியிலயும் போடலைன்னா.. வாசலுக்கு ஆள் அனுப்பிட வேண்டியது தான்!..
3)முக்கனி மாதிரி நல்ல பேருதான்..
4)ஏணி வெச்சி மாடிக்கு போகமாட்டார்..ன்னு என்ன நிச்சயம்?..
5) ....!?
மறக்க முடியாத இரண்டும் எதுக்கு நடந்தது :)
Deleteகையோட மைக்கையும் கொண்டு போகணும் :)
அப்படி வைக்க நமக்குதான் கொடுப்பினை இல்லை :)
மாடிக்கு அப்புறம் போகலாம் ,முதல்லே ..:)
ஆச்சரியமா இருக்கா ?புரிந்து கொள்ள முடியலியா :)
சந்தேகம் ஞாயம் தான்!
ReplyDeleteஇந்த வயசுலே வர்ற ஆசை வருவது சரிதானே :)
Deleteஇதைப்படித்தால் ப்ரொஃபெசர்களுக்குக் கோபம் வரலாம்
ReplyDeleteகாசுமேலக் கண்வையடா தாண்டவக் கோனே
பெண்கள் பெயரால் நினைவு படுத்தப்படும் தமிழாசிரியர்
அட் லீஸ்ட் அணைப்பார் என்னும் நம்பிக்கையாவது இருக்கிறதே
அதென்ன ஒரே மருமகள்...?
இதுக்கெல்லாம் கோபப் படுற நிலையைத் தாண்டி அவர்கள் போயிருப்பார்கள் :)
Deleteஅதுக்காக இப்படியுமா :)
அவர் மனைவியின் பெயர் தமிழரசியா இருக்குமோ :)
சாமபலை அணைச்சு என்ன பிரயோசனம் :)
அப்படின்னா வீட்டுக்கு ஒரே பிள்ளை இவர்தான்னு அர்த்தம் :)
மகா-கவி-பாரதி மற்றும் அனைத்தும் நன்று
ReplyDeleteபெயர் என்னவோ நல்லாத்தான் இருக்கு ,ஆனால் , அவர் மூணு பொண்ணுங்களை கரை ஏற்றப் போறாரோ :)
Deleteஇப்படித்தான் மகா கவி பாரதியை ஞாபகம் வச்சு இருக்கீங்களா? கடைசி ஜோக் கொஞ்சம் ஓவர்தான். ரொம்ப நொந்து போய்ட்டாரோ?
ReplyDeleteபத்மா ஸ்ரீ சிவா ஜியைக்கூட :)
Deleteஇல்லாட்டி அப்படி சொல்வாரா :)
கல்யாணப் பொண்ணுக்கே இப்படி சந்தேகம் வரும் போது...
ReplyDeleteவேறு யாருக்கு வரணும் :)
Deleteநெருப்பு ஜூவாலைத் தானே :)
ReplyDelete