26 September 2016

அந்தப்புரத்தை மறந்த அரசருக்கு அரசியின் ஆணை:)

             '' அரசர்  இரவு நகர்வலம்  செல்வது அரசியாருக்குப்  பிடிக்கலே போலிருக்கா .ஏன் ?''
              ''சமச்சீர்  க'ல'விக் கொள்கையை அரசர் முதலில் கடைப்பிடிக்கட்டும் என்று  சொல்கிறாரே !''


பணத் தேவைக்கு இதையா செய்வது  :)
             ''வங்கிக்கு போய் ஒரு முழப் பூவுக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்டீங்களாமே ,ஏன் ?''
            ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவை  வைக்கலாம்னு சொல்றாங்களே !''
தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
            ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை :)
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டுவரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ? மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமேல்:)
காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ..இனி ..
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?

28 comments:

  1. மிக ரசித்தேன் சகோதரா.
    அவுஸ்திரேலியா பயணத்தால் 20 நாட்கள் விடுமுறையில்.

    ReplyDelete
    Replies
    1. ஆஸியில் நடந்த உங்களின் தங்கை மகன் பிரதீபன்சாந்தினி, தம்பதிகளுக்கு எனது நல்லாசிகள் :)

      Delete
  2. அரசர் நகர்வலம் செல்வது அதற்காகவா என்ன?!!

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அரசியாரின் சந்தேகமும் அதுதான் :)

      Delete
  3. Replies
    1. என்ன இது அநியாயம்,அரசருக்கு வந்த சோதனையும் அருமைதானா:)

      Delete
  4. ‘அந்தப்புரம் இந்தப்புரம்தான்...விழிதாலாட்ட பிள்ளைத்தமிழ் சொல்லித்தருவேன்...’சமச்சீர் கலவிக் கொள்கையை அரசர் கடைபிடிக்கத்தான் நினைக்கிறார்... முடியலையாம்...‘சொல்லுதல் யார்க்கும் எளிய...’என்று சொல்லிவிட்டு... அதான் அரசர் இரவு நகர்வலம் செல்கிறார்...!

    ‘பொன்னை வைத்த இடத்தினிலே... பூவை வைத்து பார்ப்பதற்கு... அண்ணன் இன்றி யாரும் உண்டோ?’ அந்த அண்ணனும் இல்லை... நான் என்ன செய்வேன்...? என்ன செய்வேன்...? என் காதில் பூவை வைத்து விட்டுப்போ...!

    ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை தலைவலி ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...’ பாட்டுதான் ஞாபகம் வருது...! இரட்டைத் தலைவலி வராது... எனக்கு ஒரே மனைவிதான்...!

    “ ‘பல்’லாக்குடன் போனேன் ஊர்வலமாக... பாதியிலே திரும்பி வந்தேன் பல்செட்டில்லா தனிமரமாக”

    சொல்லாதே யாரும் கேட்டால்...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அரண்மனைக்கு வெளியிலும்,ஒரு அந்தப்புரத்தை செட்டப் செய்தால் எப்படி முடியும் :)

      பூவைக் கூட வைக்காத மல்லையாக்களுக்கு வேண்டுமானால் கடன் தருவார்களோ :)

      இரட்டைத் தலைவலிக்கு ஒரு மனைவி போதாதா :)

      டிரஸ் செட் போனாலும் வாங்கி விடலாம் ,பல் செட் போனால் வாங்கவா முடியும் :)

      உளறுவாயன் ,யாரும் கேட்காமலே சொல்லிடுவானே :)

      Delete
  5. பல் செட் போச்சா அதுக்குதான் வாயை திறக்கப் படாது

    ReplyDelete
    Replies
    1. போன பிறகு வாயைத் திறக்கவே முடியலே ,கூச்சமாயிருக்காம்:)

      Delete
  6. பல்லு வழியாச் சொல்லுப் போகும்னா
    கண்டுபிடிப்புக்குப் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. சொல்லு மண்டையில் ஏறினால் சரி :)

      Delete
  7. 01. அதிலிருந்து மன்னர் சமச்சீர்கல்வி தொடங்க நினைத்திருக்கலாம்.
    02. மேனேஜர் காதில் சுத்திடாமல்,
    03. டபுள் சார்ஜ் செய்யலாமே...
    04. புருசனை விட்டுட்டு வரலையே....
    05. பழமொழி ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. படிக்க வேண்டும் புதிய பாடம் என்று பள்ளியறையைத் தேர்ந்தெடுத்தால் சரிதானே :)
      வங்கி மேலாளர்கள் அப்படித்தான் மல்லையாக்களுக்கு லோன் தருகிறார்கள் :)
      அது மூணாவது தலைவலி ஆயிடுமே :)
      விட்டுட்டு வந்தால் அவர் முதலில் வீடு வந்து சேர்ந்திருப்பார் :)
      புது மொழி ஆகிவிட்டது :)

      Delete
  8. அரசரின் நகர் வலத்துக்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம்
    வங்கியாளரின் காதில் பூ வைக்க முயறசியா
    தலைவலி கணவனுக்கா மனைவிக்கா
    ஆற்று வெள்ளம் அவரையே அடித்துப் போயிருந்தால் கணவரையே விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம்
    செய்தியை எங்கள் ப்ளாகில் படிக்க வில்லையே

    ReplyDelete
    Replies
    1. இல்லைதான் ,கலவி என்பது கல்வி என்றே தெரிவதால் மாற்றம் செய்து விட்டேன் :)
      அரசே அதுதானே அவர்களுக்கு செய்கிறது :)
      மாத்திரை தனித் தனியாவா இருக்கு :)
      நல்ல காரியம் நடக்காமல் போய் விட்டதே :)
      அதில் வரும் ,ஆனால் வராது :)

      Delete
  9. Replies
    1. பூவை வைக்கலாமா ,கூடாதா :)

      Delete
  10. அரசியாரின் வேண்டுகோள் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வேண்டுகோளைக் கவனித்துப் பார்த்தீர்கள்தானே :)

      Delete
  11. Replies
    1. பூ போகஸில் சரியா வந்திருக்கா :)

      Delete
  12. அந்தப்புரரத்தை மறந்த அரசரும் இருந்தாரு...அந்த நாட்டுல.....!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. யோக்கியமாய் இருந்த அரசர்கள் எத்தனை பேர் என்று யாருக்குத் தெரியும் :)

      Delete
  13. அரசர் நகர் வலம் வித்தியாசமாக இருக்கே......

    பல் செட் போனா அவ்வளவுதான் ...

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நகர் வலம் போறேன்னு அவர் வாழ்க்கையை நரக வலம் ஆக்கிக் கொள்கிறாரே :)

      உடனடி பல் செட்டுக்கு எங்கே போறது :)

      Delete
  14. பொன்னை வைக்கும்
    இரட்டை தலைவலி
    நகர்வலம்....

    எல்லாமே ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவுக்கு இரட்டைத் தலைவலியைக் கொடுத்திருக்குமா :)

      Delete