இந்த லாஜிக் சரிதானே :)
''பரமேஸ்ங்கிற உன் நல்ல பெயரை எதுக்கு 'பராங்குசம் 'னு மாற்றிக்கப் போறே ?''
''நல்ல பெயர் ஞாபகம் வர மாட்டேங்குதுன்னு யாரும் சொல்லக் கூடாதில்லே !''
ஜோதிடம்தான் , வங்கி வேலைக்கு அடிப்படையா :)
'' வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன் ?''
''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப் பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''
எழுத்தாளரை , மனைவி இப்படியா அவமானப் படுத்துவது :)
''பாத்திரக் கடைக்கு மனைவியோட ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு குத்திக் காட்டுறாளே !''
கல்யாண மொய் ,மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே:)
''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு ..மொய் செய்யாமல் முப்பது வாழ்த்து தந்தி வந்தது ...நான் அவர்களுக்கு இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''
டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் :)
'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

|
|
Tweet |
01. வாயிலும், காதிலும் நுழைவது கொஞ்சம் கஷ்டம்தான் ஜி
ReplyDelete02. அப்படீனாக்கா.... ஒருபயலுக்கும் கொடுக்க மாட்டாரே...
03. நீங்க எல்லோரையும் குத்திக்காட்டுவது போல இருக்கே... ஜி
04. கஷ்டம்தான்...
05. மருத்துவர் கணக்குல புலியோ...
அந்த கால வில்லன் mrr வாசுவுக்கு ஒரு படத்தில் பராங்குசம் என்று பெயர் ,அதனால் அந்த பெயரே பிடிக்காமல் போனது :)
Deleteஜோதிடமே புரூடா .எப்படி வொர்க் அவுட் ஆகும் :)
என் எழுத்துக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம் :)
நம்ம மொய்க கணக்குதான் அமுலில் இருக்கே :)
அதுவும் நல்லதுதானே :)
‘ஈஸ்வரா அல்லா தேரே நாம்...!’
ReplyDeleteஜாதகப் பள்ளியை ஆரம்பித்தால்... ரொம்ப சாதகமா இருக்குமுன்னு சொல்லுங்க...!
பெண் புத்தி ‘பின்’ புத்தின்னு குத்திக்காட்டியாச்சில்ல...!
மனசுக்குள்ள... இருபது வாழ்த்துத் தந்திச் செலவாவது மிச்சமுன்னு சந்தோசப்படுறீங்கதானே...!
எல்லாவற்றையும் வயிறுதானே அரைக்கிறது...! ஆறு வேளையும் என்றாலும்... அரை வயிறுதான்...! அரை வயிறே... அரை...!
த.ம. 3
பகவானின் பதிவுடன் மணவையாரும் பின்னூட்டமும் அதற்குத் தங்களின் பதிலும் கண்டு ரசித்து நெடுநாட்கள் ஆகின்றன.
Deleteஇனித் தொடர்கிறேன்.
நன்றி
பராங்குசம் ...எனக்கு மட்டும்தான் பிடிக்கலையா ,உங்களுக்குமா :)
Deleteஊரிலே நிறைய பேர் பிழைப்பை ஒட்டிக்கிட்டுதானே இருக்காக :)
குத்துவதிலும் ஒரு அர்த்தம் இருக்கே :)
அடடா ,இது யோசிக்காம போனாரே :)
அறைப்பதுக்கு முன்னால் நொறுங்கத் தின்பது நல்லது ,நூறாண்டு வாழ :)
மணவையாரின் மொழிக்கு மறுமொழி கூற எனக்கும் ,நீண்ட நேர இடைவெளி ஆகிறது !ரசிக்கும் படியாய் உடன் வர முயற்சிக்கிறேன் :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteபராங்குசத்தையுமா :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம சுற்றிக் கொண்டே இருக்கிறது
மீண்டும் வருகிறேன்
சுற்றிச் சுற்றி வந்து வாக்களித்தமைக்கு நன்றி :)
Deleteரசித்தேன். சில முன்பே படித்தவை போல இருக்கிறது. மீள் பதிவோ?
ReplyDeleteநீல நிறத்தில் உள்ளது மட்டுமே லேட்டஸ்ட் ,மற்றவை ,கடந்த ஆண்டுகளில் இதே நாளில் வந்த பதிவுகளே :)
Deleteமுன்பே படித்ததுபோல் இருப்பது எனக்கு மட்டுமல்ல.
ReplyDeleteவெங்கட் ஜீக்கு சொன்னதைப் படித்துப் பாருங்க :)
Deleteஎல்லாமே நன்றாக இருக்கிறது. எழுத்தாளரின் நிலைதான் மோசம்
ReplyDeleteஎழுத்தாளரின் நிலை இங்கு எப்பவுமே மோசம்தான் :)
Deleteஇரசித்தேன்! தேன்!இனிமை!
ReplyDeleteமூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவதும் இனிமையா :)
Deleteகடன் கேட்டு போறவங்களுக்கும் ஜோதிடம் தெரிஞ்சா இந்த அதிகாரி தருவானா...மாட்டனா ன்னு தெரிஞ்சுக்கலாமே....
ReplyDeleteஜோதிடத்தின் கோளாறே ,இருவருக்கும் உறுதியான நிலையைச் சொல்ல முடியாத்துதான்:)
Deleteஅனைத்தையும் ரசித்தேன் நண்பரே!
ReplyDeleteத ம 10
அந்த எழுத்தாளர் அளவுக்கு உங்க நிலைமை மோசமில்லை ,அப்படித்தானே :)
Deleteசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
ReplyDeleteபக்கம் பக்கமா எழுதி
பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு
என் வீட்டாளும்
என்னைக் குத்திக் காட்டுறாளே!
பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள பொதுவான நிலைதானே இது :)
Deleteஒரு பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு மனைவி குத்திக் காட்டுவதை ரசிக்க முடியுதா :)
ReplyDelete''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப் பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''//
ReplyDeleteஜோதிடர்களுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்க்கும்போது இதுவும் நடக்கலாம்!
அப்படி கண்டுபிடிக்க முடிந்தால் பரவாயில்லை ,ஆனால் ஜோதிடம் பொய்க்குதே:)
Delete