20 September 2016

எப்பவுமே துணை வருவாளா துணைவி :)

பச்சோந்தி சின்னம் கொடுத்தாலும் பொருந்தும் :)        
            ''வரப் போற தேர்தல்லே சுயேட்சையா போட்டியிடப் போற அவருக்கு ,குரங்கு சின்னம் கொடுக்கலாம்னு ஏன் சொல்றே ?''
           ''எல்லாக் கட்சிகளுக்கும் தாவினவர் தானே அவர் !''

முன்னோர் சொன்னது அர்த்தமுள்ளது :)      
         ''இமய மலைக்கு போயிட்டு வந்தீங்களே ,என்ன தெரிஞ்சிகிட்டீங்க ?''
          ''அந்த  உயரத்திலும் தவளை இருக்கே ,நம்மாளுங்க 'கிணற்றுத் தவளையாய் இருக்காதே 'ன்னு  சொன்னது  சரிதான் !''

நொந்து நூடுல்ஸ் ஆனவர்,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமே:)      
                   ''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம்விற்கலைன்னு எப்படி சொல்றே ?''
           ''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''
எப்பவுமே  துணை வருவாளா துணைவி  :)
          ''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
         ''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியை விட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதியின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

30 comments:

  1. குரங்குகள் போலே கட்சிகளின் மேலே தாவித்திரிந்தோமே... வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே...! திடிர்னு ஏன் சோதனை போடுறீங்க... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...!

    'கிணற்றுத் தவளையாய் இருக்காதே'ன்னு சொன்னதத் தெரிஞ்சுக்கிட்டு... இமயமலை போகாமல் எனது உயிர் போகாதுன்னு... இமய மலைக்கு போயிடுச்சோ...?!

    ‘ஆசை... தோசை... புது தில்லி அப்பளம்... வடை...!’ “கடை விரித்தேன் கொள்வாரில்லை”எனச் சொல்ல வேண்டிய அவசியம் வராது...!

    சனியன் பிடிச்சிடப் போவுதுன்னு கவலையா...?!

    கிரிமிலேயரின் வருமான உச்சவரம்பை உயர்த்தினாலும்... நாடெங்கும் கிரிமினல்கள்... நாலு பேர் மட்டும் நல்லவர்கள்... அந்த நாலு பேருக்கு நன்றி...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. குரங்காய் இருந்த மனிதனின் நெஞ்சில் குழப்பம் ஏதுமில்லை :)

      இப்படியுமா மேலே போக நினைக்கிறது :)

      வர்றவுக புத்தகம் வாங்காட்டியும் அப்பளம் சாப்பிடாம போக மாட்டாங்களே :)

      சனியன் போனால்தானே சந்தோஷம்:)

      உள்ளே இருக்க வேண்டிய கிரிமினல்கள் வெளியே சுதந்திரமாய் :)

      Delete
  2. Replies
    1. டெல்லி அப்பளம் சுவையாய் இருக்குதா :)

      Delete
  3. Replies
    1. குற்றவாளியை விட மோசமானவன் தப்பிக்க விடுபவன் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லைதானே :)

      Delete
  4. தேர்தல் சின்னம் மட்டுமல்ல! அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஏன் இன்னும் அறிமுகப் படுத்தவில்லை :)

      Delete
  5. கட்சியில் சேர்ந்தவருக்கு ஒரு கட்சி.சுயேட்சைக்கு பல கட்சிகள்
    இருந்தாலும் இமயமலைத் தவளையாய் இருக்க வேண்டுமோ
    அப்பள ஸ்டாலில் விற்பனை செய்பவர் பெண்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரோ
    சனிப்பிணம் படித்த நினைவு
    காந்தஹார் விமானக் கடத்தலில் பலரைக் காப்பாற்ற ஒருவரை விடுதலை செய்ததே அரசு.

    ReplyDelete
    Replies
    1. இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடுதானே :)
      எதிலும் உச்சம் தொடுவதுதானே சிறப்பு :)
      புத்தகக் கடையில்பெ ண்களைப் போட்டாலும் விற்க மாட்டேங்குதே :)
      பழைய பிணம்தான் :)
      அரசு அப்படி செய்தால் ,அரசுத் துறைகள் கிரிமினல்களை தப்ப விடுவதும் தொடருதே :)

      Delete
  6. துணையாக வருவதற்க்கு தானே துணைவி.......??????

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக மேலோகத்துகுமா வர முடியும் :)

      Delete
  7. துணையாக வருவதற்க்கு தானே துணைவி.......??????

    ReplyDelete
    Replies
    1. தனிக் கட்டை ,அதான் இவ்வளவு தைரியமாய் சொல்றீங்க :)

      Delete
  8. இமயமலையில் எத்தனையோ நல்ல விவரங்கள் இருக்க தவளை மட்டும் கண்ணில் பட்டதோ ?

    ReplyDelete
    Replies
    1. பட்டதால்தானே ,கிணற்றுத் தவளையாய் இராதேங்கிற ஞானம் வந்தது :)

      Delete
  9. வணக்கம் ஜி !

    குரங்குச் சின்னம் , சனிப்பிணம் அருமை ஜி
    தொடர வாழ்த்துகள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சனியன் குரங்கு என்றெல்லாம் சொல்ல முடியாதுதானே :)

      Delete
  10. உடனடி லாபம் ,டெல்லி அப்பள ஸ்டாலில்தானே :)

    ReplyDelete
  11. அனைத்தும் அருமை ஐயா.ஐந்தாவது கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றாக அமைந்தது.இன்றைய சட்டத்தில் ஓட்டை இருப்பது தெளிவாக புரிகிறது ஐயா.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  12. இவ்வளவு ஓட்டை இருந்தும் சட்டம் ஒரு இருட்டறை என்கிறார்களே ,அந்த ஓட்டை வழியே வெளிச்சம் வராதா :)

    ReplyDelete
  13. டெல்லி அப்பளம் நன்றாக இருந்தது, சுவைக்க அல்ல ரசிக்க

    ReplyDelete
    Replies
    1. எந்த எண்ணையில் போட்ட அப்பளமோ ? யோசிச்சுத் தான் வாங்கணும் :)

      Delete
  14. வெளிச்சம் வரும் ஆனால் அதற்கும் பணம் தர வேண்டுமே..!! இன்றைய அரசும் அரசியலும் இதை தான் எதிர்ப்பார்கின்றது ஐயா.

    ReplyDelete
  15. இந்த ஓட்டைகள்... காசால் அடைக்கப் பட வேண்டியவை போலிருக்கே :)

    ReplyDelete
  16. ஆம் ஐயா.வேறு வழியில்லையே..???

    ReplyDelete
  17. லஞ்சம் தவிர் ,நெஞ்சம் நிமிர் என்ற கொள்கையைக் கடைப் பிடிப்போர் எண்ணிக்கை அதிகமானால் வலி பிறக்கும் :)

    ReplyDelete
  18. ம் ம் கட்டாயம் பிறக்கும் ஐயா.

    ReplyDelete
  19. பிறக்கும் ,ஆனால் எப்போ பிறக்கும்னுதான் தெரியலே :)

    ReplyDelete
  20. பின்னூட்டத் தொடர் பதில்களையும்தானா :)

    ReplyDelete