23 September 2016

சன்னி லியோன், குழந்தை மாதிரி என்பது உண்மைதானே :)

டேட்ஸ் தள்ளிப் போனவங்க 'டேட்ஸ்' சாப்பிட்டால் ....:)          
        ''அந்த லேடி டாக்டர் , போலி  மருத்துவர் போலிருக்கா,ஏன் ?''
         ''தினசரி இரண்டு பேரீச்சம் பழம்  சாப்பிட்டா, பையன்  பிறக்க அதிக வாய்ப்பிருக்குன்னு சொல்றாரே !'' 

புதிய மருத்துவக் காது காப்பீட்டு திட்டம் போலிருக்கு :)                             
        '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''
         ''ஆமா , ஹேர்கட்டிங் செய்யும்போது காது அறுந்தா,  எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''
ஜோடி தேடும் தலைவர் !
           ''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''
          ''இன்னொரு கால் செருப்பும் வரட்டும்னுதான் !''

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :)            
         ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
         ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !
          "அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
          "நான் சொல்ற எதைத்தான் உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?
எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
ஆனால் ,அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !
அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !

32 comments:

  1. ''அந்த லேடி டாக்டர் , போலி மருத்துவர் போலிருக்கா,ஏன் ?''
    ''தினசரி இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டா, பையன் பிறக்க அதிக வாய்ப்பிருக்குன்னு சொல்றாரே !''

    "கொட்டையோடவா டாக்டர்!"

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தேகம் உங்களுக்கு ஏன் வந்தது ?சீட்லஸ் என்றால் டாக்டரே (?) சொல்லியிருப்பாரே :)

      Delete
  2. ////கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :) /// பகவான் ஜீ அடிக்கடி அழகர் கோவிலுக்கு போவார் போல இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,பைனாகூலர் இல்லாமல் கஷ்டமாக உள்ளது :)

      Delete

  3. ////கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :) /// பகவான் ஜீ உங்களுக்கு கோயில் கோபுரத்தை பார்க்க தடைன்னா எனக்கு கோயிலுக்கு போறதுக்கே எங்க வூட்டம்மா தடை போட்டு இருக்காங்க காரணம் இங்கேதான் பெண்கள் அழகாக சேலை கட்டி வருகிறார்களாம் அதை பார்த்த எனக்கும் மூடு வந்துடுதுன்னு தடை போட்டு இருக்காங்க பகவான் ஜீ நம்மை போல ஆண்களின் நிலைமையை பார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. சேலைக் கட்டிட்டு வந்தா உங்களுக்கு ஏன் மூடு வருது :)பிட்டரான உங்க நிலைமைக்கு என் நிலைமை பெட்டர் போலிருக்கே :)

      Delete
  4. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் - ஒரு பகுத்தறிவு ஜோக்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி தரிசனம் செய்தால் புண்ணியமா :)

      Delete
  5. Replies
    1. முதலில் .நன்றி :)

      Delete
  6. நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு, போதி மரம் என்பது அரசமரம் ஆகும். ஆலமரம் இல்லை. இந்த குழப்பம் அடிக்கடி எல்லோருக்கும் வருவதுதான். ஒரு அரசன் (சித்தார்த்தன்) இந்த மரத்தின் கீழ் இருந்து ஞானம் பெற்றதால் இந்த மரம் அரசமரம் என்று பெயர் பெற்றது. அதனால் பௌத்தம் நாட்டில் பரவி இருந்தபோது ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் ஒரு புத்தர் சிலையை வைத்து மக்கள் வணங்கி வந்தனர். இந்துத்வா தீவிரமடைந்ததும், இந்த சிலைகள் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் நம்நாட்டில் அரசமரத்து பிள்ளையாரை அதிகம் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு சரித்திர விளக்கம் தந்ததற்கு , இரண்டாவது நன்றி !
      ஒரு சந்தேகம் ...சித்தார்த்தன் ஞானம் பெறுவதற்கு முன் அரச மரத்துக்கு என்ன பெயரோ :)

      Delete
  7. ஜி! ரசித்தேன் அனைத்தையும்!

    ReplyDelete
    Replies
    1. புதிய மருத்துவக் காது காப்பீட்டுத் திட்டம் அருமைதானே :)

      Delete
  8. ‘ஈச்சை மரத்து இன்பச் சோலையில்... இறைவன் தந்தான் அந்தப் பையனை...’ பாட வேண்டியதுதான் பையா... பையா...!

    ஹேர்கட்டிங் செய்யும்போது இனி தூங்கி விழுந்தா இனி இப்படித்தான்...இதுக்கு நான் பொறுப்பல்ல... “அய்யோ... காதை வெட்டிவிட்டான்... காதை வெட்டிவிட்டான்”னு கத்தக்கூடாது...!

    ‘உறுப்பு அறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்; செருப்பறுந்து போனதற்கோ சிந்தை கலங்குவேன்...’- என்று பாட பாட்டுக் கோட்டையா...? இல்லை... இல்லை... அவர் பெரியார் வழியில் செல்பவரோ...!

    ‘இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்...!’

    ‘சொன்னபடி கேளு மக்கர் பன்னாதே... என்னுடைய ஆளு இடைஞ்சல் பன்னாதே...!’

    எல்லாம் ஞான சூன்யமாகிவிட்டதே...!

    பதி பக்தி இதுதானோ...?!

    த.ம. 3




    ReplyDelete
    Replies
    1. இம்புட்டு ஈஸியா ,ஆண் பிள்ளைப் பெற்றுக் கொள்வது :)

      அப்படி காட்டினாலும் அவங்க காதில் ஏறாது :)

      இப்படி சொல்ல பெரியாருக்கு மட்டுமே துணிச்சல் வரும் :)

      நல்ல பவுண்டேசன் தான் :)

      சொல்வதை எல்லாம் கேட்டு மண்டை ஆட்ட ,மனைவி என்ன 'மாட்டுப்' பெண்ணா :)

      சூன்யம் உணர்ந்தால் ஞானம் வரும் என்கிறார்களே .பொய்யா :)

      பதி பக்தி இல்லை ,பிரிக்கையில் இருந்த ஆதி புத்தி :)

      Delete
  9. Replies
    1. காது வெட்டுவதையுமா :)

      Delete
  10. புதிய மருத்துவக் காதுக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்கிறேன்.
    ஆனால்,
    வெட்டின காதை
    ஒட்டப் பசை இல்லையாமே!

    ReplyDelete
    Replies
    1. எச்சியைத் தொட்டு ஓட்ட வேண்டியதுதானே :)

      Delete
  11. லேடி டாக்டர்....
    கோபுர தரிசனம்...
    மருத்துவ காப்பீடு...
    அப்புறம்
    பச்சைக் குழந்தை...
    ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றையும் ரசீத்தீர்கள் சரி ,இன்னொரு நல்ல காரியத்தையும் செய்து இருக்கலாமே :)

      Delete
  12. ஜி அனைத்தையும் ரசித்தோம்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு த ம வோட்டு போடக் கூடாதா :)

      Delete
  13. நண்பர்க்கு பேத்தி பொறந்தப்போ...அந்த பேத்திக்கு துணி எடுத்துப்போனதாக ஞாபகம் வருதே....

    ReplyDelete
    Replies
    1. இப்போ எதுக்கு அந்த ஞாபகம் வருது :)

      Delete
  14. எல்லா ஜோக்குகளும் ரசிக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இப்படி நீங்க ஒரே வரியில் சொல்லப் படாது :)

      Delete
  15. ரசித்தேன்! வாழ்த்துக்கள்ஜி!

    ReplyDelete
    Replies
    1. டேட்ஸ் தள்ளிப் போனவங்க வாழ்த்துங்க ,பையன் பொறப்பான் :)

      Delete
  16. Replies
    1. உங்களை மாதிரியே நானும்நேற்றைய பதிவு வரைக்கும் மறுமொழி கூறி அப் டேட் பண்ணிட்டேன் ஜி :)

      Delete