மிருகங்களால் தொந்தரவு வரக் கூடாதுன்னு இந்த ஆசனமா :)
''புலித் தோல் மற்ற மிருகங்களுக்கு கிலியைக் கொடுக்கும்னு ஏன் சொல்றே ?''
''அதனால்தானே , முனிவர்கள் அது மேலே உட்கார்ந்து தவம் இருக்காங்க !''
கடவுளுக்கே பொறுக்காது என்பது சரிதான் :)
''என்னடி சொல்றே ,' வரம் தா ' ன்னு நான் பாடுறதைக் கேட்டு கடவுள் நிச்சயம் வருவாரா ?''
'' இனி வாய் திறந்து பாடமாட்டேன் என்று, உன்னிடம் சத்தியம் வாங்கிட்டு போக வந்துதானே ஆகணும் !''
கடைக்காரர் செய்தது சரிதானே :)
''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு ஏன் சொன்னார் ?''
'' ஜெராக்ஸ்சில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் ,தப்பா ?''
மனைவியை வாடி ,போடின்னு ஏன் சொல்லக்கூடாது :)
''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
''சரி ,சொல்லிட்டுப் போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''
வாழ்க்கைத் தத்துவமே இதிலிருக்கு :)
உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவை !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீரும்
கடந்த பின் மகிழ்ச்சியும் வருதே !

|
|
Tweet |
ரசித்தேன்.
ReplyDeleteத.ம. +1
புலித் தோலுக்கு இப்படி காரணம் இருக்குமா :)
Deleteரசித்தேன் ஜி. கடைசித் தத்துவம் ஜோர்!
ReplyDeleteவெங்காயம் உரிக்கிற வேலை மட்டும்தானே உங்களுக்கு?
Deleteநான்,அதை உரிக்கும் போது தோணுனதாச்சே :)
Deleteசாப்பிட வேறு யாரையும் கூப்பிடவா முடியும் :)
Deleteஅனைத்தும் அருமை. தம1
ReplyDeleteநீங்கள் ஆரம்பித்த தம ஒன்றுடன் ,பதினொன்னு ஆனபிறகும் பத்து என்றே காட்டுகிறதே !இதென்ன ஜோக்காளிக்கு வந்த சோதனை அய்யா :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
வரம் தர வேண்டிய கடவுள் ,வரம் வாங்க வருவாரா :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteத ம 5
பத்தோடு ஒண்ணு பதினொன்னு என்பார்கள் ,த ம பதினொன்னு ஆக ஏன் மறுக்கிறது :)
Deleteபுலித் தோல் போர்த்திய பசுன்னு மாத்தியும் சொல்ல முடியாது... அதனால் புலித் தோல் போர்த்திய முனிவன்னு சொல்ல வேண்டியதுதான்...!
ReplyDelete‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா...‘ பாட வரம் தான்னு பாட வேண்டியதுதானே...!
மிஸ்டேக்கான காப்பிக்கு காசு கொடுத்தார்ன்னு ஒரு அவப் பேரு வந்திடக் கூடாதில்ல...!
‘போடா போடி...’ இதான் இப்ப பேஷன்... எடுபட்ட பய ஒனக்கு இதெல்லாம் தெரியாது...!
கண்ணீரும், கம்பலையுமாக...இருக்கிறது எனக்கு பிடிக்கலை... துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...!
த.ம. 6
இவரை யாரும் நெருங்க முடியாது , ஆனால் இவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நெருங்குவார் ,அப்படித்தானே :)
Deleteவரத்தை இப்படியே கேட்டுற வேண்டியதுதான் :)
அந்த அவப் பேருக்கு நாண்டுகிட்டு சாக வேண்டியதான் :)
போக போகத்தானே தெரியும் :)
துன்பம் போச்சேன்னு அழுவாதீங்க :)
1) இப்போ புலி வரணுமா.. கிலி வரணுமா?..
ReplyDelete2) வரமும் வேண்டாம்.. சுரமும் வேண்டாம்..ன்னு ஓடிப் போய்ட்டார்..ன்னா!?..
3) காப்பியில மிஸ்டேக்..ன்னா டீ..க்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான்!..
4) ஏதோ இப்படியாவது கூப்பிடுகிறாளே..ன்னு சந்தோஷந்தான் மிச்சம்..
5) வெங்காயத் தத்துவம்.. ஆகா!..
இரண்டுமே வர வேண்டாம் ,ஆளைவிட்டால் போதும் :)
Deleteவரும் நேரத்தில் அபஸ்வரமாய் பாடாம இருக்கச் சொல்லிடுவோமா :)
டீ யும் சரியில்லேன்னா பனங்கற்கண்டு பாலா :)
கூப்பிடவில்லை என்றால் இவரும் விட்டுவிடுவாரா :)
கண்ணில் நீரை வரவழைக்குதா :)
ரசித்தேன்... ரசித்தேன்... ரசித்தேன் ஜி.
ReplyDeleteநன்றி நன்றி நன்றி (கோவிக்காதீங்க ,நான் சொன்னது நினைவிருக்கா :)
Deleteரசித்தேன் முக்கியமாக கடைசியில் சொன்ன தத்துவத்தை
ReplyDeleteபெரிய வெங்காயத் தத்துவம் என்று சொல்லாமல் ரசித்தமைக்கு நன்றி :)
Deleteஅருமை... ஜெராக்ஸ் பிழையும் வெங்காய தத்துவமும் அருமையோ அருமை !
ReplyDeleteஎனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html
ஜெராக்ஸ், வெங்காயம் இரண்டிலும் பிழை இல்லைதானே :)
Deleteவணக்கம் ஜி !
ReplyDeleteஇறுதிக் கடி இனிமை !
தொடர வாழ்த்துகள்
தம +1
இனிமை ,பழசுக்கு மிளகாய் கடி போலவா :)
Delete,சொல்லிட்டுப் போடான்னு அவுகளே சொல்லும்போது ......
ReplyDeleteஇனிமே எந்தக் கோர்ட்டுக்கு போகமுடியும் :)
Deleteசுவைத்தேன்!
ReplyDeleteவரம் தா பாடலும் இனிமைதானே :)
Deleteரசித்தோம் ஜி அனைத்தும்.....இணையம் இல்லை....மொபைலில் இருந்து...
ReplyDeleteஇணையம் இப்போது இல்லையா ,இனி எப்போதும் இல்லையா :)
Deleteரசித்தோம் ஜி அனைத்தும்.....இணையம் இல்லை....மொபைலில் இருந்து...
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ,மொய்யை மறந்துடாதீங்க :)
Deleteவெங்காயத்தில் தத்துவமும், ஜெராக்ஸில் நகைச்சுவை தேன் கலந்துள்ளது
ReplyDeleteதத்துவமும் நகைச்சுவையாய் இருந்தால் நல்லதுதானே :)
Delete
ReplyDeleteகடவுளுக்கே பொறுக்காது...//
கடவுளைத் திட்டுகிற நம் போன்றவர்களிடமும் சத்தியம் வாங்கக் அவர் வருவார்தானே?
வந்தால் அவருக்கு நல்லது ,வராவிட்டால் நமக்கு நல்லது :)
Delete