3 September 2016

சாப்பிட்டால் போகுமா ,படித்தால் போகுமா சுகர் :)

              ''என்ன சொல்றீங்க ,முப்பது நாவல் படிச்சும் சுகர் குறையலையா ?''
              ''சுகருக்கு நாவல் நல்லதுன்னு  நீங்கதானே சொன்னீங்க டாக்டர் !''  

கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)           
           ''என்னடி சொல்றே ,குண்டான உன்னை உன் வீட்டுக்காரர் கிண்டல் பண்றாரா ,எப்படி ?''
           ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னே சொல்றாரே !''
இவர்  நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆவாரா :)
      ''டாக்டர் ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு !''
       ''எது ?''
       ''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே !''

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அதுதானே :) 
           ''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
          ''என்னாச்சு ?''
          ''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்கார் !''

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை :)
     காவல் இல்லையென்றால் ...
     காய்ச்ச மரம்கூட கல்லடி படும் 
     கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

30 comments:

  1. Replies
    1. பெண்ணைப் பெற்ற புண்ணியவான்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்தானே இது :)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நீக்கி இருப்பதைப் பார்த்தால் ,கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி என்று சொல்லத் தோன்றுகிறதே :)

      Delete
  3. தமிழ்க்கடவுளுக்கு விளங்கிய ‘சுட்ட பழம்... சுடாத பழம்...’ ஔவை பாட்டிக்கே விளங்கவில்லை...! நா+அல் பழம் சாப்பிடச் சொல்ல வேண்டும்...! நல்ல புரியும்படியா... நவ்வாப்பழம் சாப்பிடச் சொல்ல வேண்டியதுதானே...!

    அழகுடைய ரூபாவதியான என்னை இப்ப குண்டாக்கி மேளம் கொட்ட விட்டுட்டீங்களே...! கல்யாணத்துக்கு முன்னாடி நான் நயன்தாரா மாதிரி இருந்தேனாக்கும்... இப்ப ஸ்ரீ பிரியா மாதிரி ஆயிட்டேனே...! அப்ப ரூபா வந்தது... இப்ப ரூபா அவதிதான்...!

    யோவ்... நர்ஸ்தான் என்னோட வொய்ப்...! வேலைக்காரிய வச்சுருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லுப் போட்டு சொல்லிடக்கூடாதில்ல... அதான்... நானே கட்டிக்கிட்டேன்...!

    அவரு பேரக் கேக்கலையா... ‘தன்கட்சி சுவாமிநாதான்...!’

    கன்னிப்பெண் கண்ணடி பட்டால்கூட பரவாயில்லை... மறத் தமிழச்சி மரத்தாலே அடிவாங்கியே ஆவி போகுதே...! யாரங்கே... யாரடா அங்கே... புலியை முறத்தால் விரட்டிய புறநானூற்றுப் பெண்ணைக் கூப்பிடுங்க...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. டாக்டரும் சொல்ல மாட்டார் ,இவரும் நாவல்னா பழமா ,புத்தகமான்னு கேட்க மாட்டார் ,சுகர் எப்படி குறையும் :)

      உண்டானதால் குண்டாயிட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே :)

      நல்ல காரியம் பண்ணினீங்க டாக்டர் ,இந்த ஒண்ணோட உங்க திருவிளையாடலை நிறுத்திக்குங்க :)

      அதான் இவ்வளவு கொள்கைப் பிடிப்போட இருக்காரா :)

      புலியை விரட்டுறது இருக்கட்டும் ,ரசம் வைக்க புளியைக் கரைக்கத் தெரியுமான்னு கேளுங்க :)

      Delete
  4. முதல் இரண்டு ஜோக்ஸ் முதலிடம்!

    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டில் முதலிடம் நாவலா,அழகு தேவதையா :)

      Delete
  5. தம 5

    ஶ்ரீராம் சொன்னது போல ....1, 2 அசத்தல்

    அவங்களோட கட்சிக் கொடியாவது நினைவு இருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. நினைவு இருந்தால் ஏன் போன முறை தலைக்கீழா பறக்கவிடப் போகிறார் :)

      Delete
  6. Replies
    1. ரூப அவதியையுமா :)

      Delete
  7. Replies
    1. சுகருக்கு நாவல் நல்லது என்பதையும்தானே :)

      Delete
  8. Replies
    1. நீங்க எதுக்கு சிரிக்கிறீங்கன்னு தெரியலையே :)

      Delete
  9. நாவல் பழம் என்று சொல்லாமல் நாவல் என்று சொன்னது டாடக்டர்ர்ரின் தொழில் ரகசியமோ...???????

    ReplyDelete
    Replies
    1. ரகசியத்தை டாக்டர்தான் சொல்லவில்லை ,நோயாளி யோசிக்க வேண்டாமா ?படித்தால் மட்டும் போதுமாவென்று:)

      Delete
  10. மிகவும் ரசித்தேன்.
    மணவையாரின் பின்னூட்ட ஜோக்குகளும் அருமை

    ReplyDelete
    Replies
    1. உகாண்டா என்றால் இடி அமீன் தான் ஞாபகத்துக்கு வருவார் ,இனி நீங்கள்தான் வருவீர்கள் சிவகுமாரன் ஜி !
      மணவையாரின் பின்னூட்டம் என்றும் மணக்கும் மல்லிகை :)

      Delete
  11. வார்த்தை விளையாட்டு ஜோக்ஸ் சூப்பர்! ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நாவலும் ,ரூபாவதியும் என்னை அறியாமலே ஜோடி சேர்ந்து விட்டது :)

      Delete
  12. வார்தைகளில் சடுகுடு விளையாட்டு நன்று

    ReplyDelete
    Replies
    1. இந்த சடுகுடு விளையாட்டில் வென்றது ,ரூபாவதிதானே:)

      Delete
  13. // ''சுகருக்கு நாவல் நல்லதுன்னு //

    இவர் படிச்ச நாவல்களில்கூட நாவல் பழம் வரவில்லை போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அப்படி வந்திருந்தால் சுகர் காணாமலே போயிருக்கக்கூடும் :)

      Delete
  14. முதல் ஜோக் புரியவில்லை. பின்னூட்டங்களைப் பார்த்ததும் ஓரளவு புரிகிறமாதிரி தெரியுது
    குழந்தை பெற்றதனாலோ
    வேறு எப்படிச் சொல்கிறார்
    அரசியல் வாதிகளுக்குத் தெரிந்த கொடி அதுதானே
    கண்ணடி பட்டால் சீக்கிரம் திருமணம் ஆகலாம்

    ReplyDelete
    Replies
    1. அப்பவும் புரியுற மாதிரிதான் தெரியுதா :)
      உண்டானதால் குண்டானதால் என்று கூட சொல்லலாம் :)
      பெயரை சொல்லியே அழைப்பதால் ,மணவையாரின் சந்தேகம் எல்லோருக்கும் வருகிறது :)
      தேசியக் கொடிக்கும்,காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் இருக்கிறார்கள் :)
      உங்க தீர்க்கதரிசனம் வெல்லட்டும் :)

      Delete
  15. நாவல், ரூப அவதி சூப்பர்....அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. நாவல் ருசியே தனிதானே :)

      Delete