5 September 2016

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)

 எதுக்கு நேரம் அதிகமாகும் :)           
               ''நான்  டிரஸ் சேஞ்ச்  பண்ணிக்கிட்டு வெளியே  கிளம்புற  நேரத்திலே காப்பி கேட்கிறீங்களே  ..இப்போ பாலைக் கொதிக்க வைச்சா ,பால் 'ஆடை கட்டி' கொதிப்பதற்குள்  போதும் போதும் என்றாகி விடுமே  !''
                  ''நீ 'ஆடைகட்டி ' வருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடுமே !''

 மன நோயாளிகளின் எண்ணிக்கை கூட இவரும்தானே காரணம்  :)
                  ''மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான தொண்டு அமைப்பை தொடங்கி உள்ளாராமே ,அந்த நடிகை ?''
                  ''விசுவாசமுள்ள நடிகை ,தன் ரசிகர்களுக்காக  நல்ல காரியம் பண்ணியிருக்காரே !''

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)
           ''குலம் கோத்திரம்  தெரியக்கூடாதுன்னு ஜாதகம்  பார்க்காம கல்யாணம் பண்ணியும் புண்ணியமில்லாமப்  போச்சா ,ஏன் ?''
           ''வீட்டிலே எனக்கு தினசரி அர்ச்சனை நடந்துகிட்டுதானே இருக்கு ?''

சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !
             ''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
            ''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''


திருமணம் நிற்க வலுவான காரணம் வேணும் !
       அந்நிய செலாவணியை குறைப்பதற்கு ...
       பெட்ரோல் நிலையங்களை இரவு மூடிவிடலாம் என்று
       திருவாய் மலர்ந்து இருக்கிறார் பெட்ரோலிய மந்திரி !
       அவர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார்           ...
       ஏனென்றால்  ...
       சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா என்ற பழமொழி 
       செம்மொழித்  தமிழில் மட்டும்தானே இருக்கிறது ?

20 comments:

  1. ‘பால் ஆடை கட்டி கொதிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும்... ஆமா... ஒங்களுக்கு ஆடை இல்லாத பால்தானே பிடிக்கும்...!’

    தான் செய்த பாவத்திற்குத் தானேதான் பிராயசித்தம் தேட வேண்டுமாம்...!

    ஒங்க அப்பா ஒனக்கு ‘அர்ச்சனா’ன்னு பேரு வச்சசு இதுக்குத்தானா...?!

    அதான் ஒங்க கடையில காரம் மொதல்ல தீர்ந்து போகுதா...?!

    ‘டாஸ்மாக்’ கடையை இரண்டு மணி நேரம் கழித்துத் திறப்பதால் நம்ம செலாவணி ஒன்னும் குறையலை... கூடுதுன்னு... எந்த களவாணி சொன்னது...?’

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. யாரோ தப்பா சொல்லியிருக்காங்க ,ஆடை இல்லாத பால் மட்டுமே பிடிக்குமென்று :)

      பிராயச்சித்தம் செய்துட்டா புண்ணியவதி ஆயிடுவாங்களா:)

      இது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியாம போச்சே :)

      வித்து தீர்ந்து போகலைன்னு சந்தேகப் படுறீங்களா:)

      எப்படி குறையும் ,பாதி கதவை திறந்துகிட்டு வியாபாரம் நடக்கத்தானே செய்யுது :)

      Delete
  2. Replies
    1. நடிகை ,தன் ரசிகர்களுக்காக செய்த நல்ல காரியம் சரிதானே :)

      Delete
  3. ரசித்தேன்.

    நேற்றிரவு பதினோரு மணிக்குப் போன கரண்ட் இன்னும் வரவில்லை. ஸோலார் போட்டிருப்பதால் லிமிட்டெட் ஆக்ஸஸ் மட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மின்மிகை மாநிலத்திலா இந்த கொடுமை :)

      Delete
  4. முற்றும் சிரிப்பு!

    ReplyDelete
    Replies
    1. நான் முற்றும் போடுவதாக இல்லை அய்யா :)

      Delete
  5. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யலாம் தானே :::)

      Delete
  6. 'விசுவாசமுள்ள நடிகை.....

    நல்ல மனசுக்காரியும்கூட!


    ReplyDelete
    Replies
    1. ரசிகர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறார் :)

      Delete
  7. கோயில்களில் அர்ச்சனை இல்லாமல் வழிபாடு செய்வதில்லையே........

    ReplyDelete
    Replies
    1. அர்ச்சனை செய்யாவிட்டால் வழிபாடு நடத்தக் கூடாதென்று யார் தடுத்தார்கள் ?அருள் பாலிக்க மாட்டேனென்று எந்த தெய்வமும் கூறியதா ?இதெல்லாம் ஒரு பிசினஸ் :)

      Delete
  8. மனைவி ஆடை கட்டி வருவதற்குள் பால் ஆடைகட்டி கொதித்து விடுமே
    நடிகையும் அவர்களுள் ஒருவராமே
    சொல்லித் தெரியப்படுத்தாத குலம் கோத்திரம் பற்றியா அர்ச்சனை
    சர்க்கரை வியாதி உள்ளவர் விற்பது சர்க்கரைப் பண்டங்களை மட்டுமா
    வேறு மொழிகளிலும் அதற்கு ஈடான சொல் வழக்குகள் இருக்கலாம்


    ReplyDelete
    Replies
    1. கொதித்து விடுமா ?பால் கோவாவே கிண்டி விடலாம் :)
      சுற்றி இருக்கிறவங்க அப்படித்தான் ஆக்கிப்பிட்டாங்க :)
      இது சூடம் காட்டாத அர்ச்சனை :)
      அவருக்கு ஸ்வீட் போடுற வேலைதான் தருவதாய் இருக்கார் :)
      இல்லாமல் போகாது ,மந்திரிக்கு தெரியாமல் போய் விட்டதே :)

      Delete
  9. ஜாதகம் இருந்தால் சாதகமா இருக்குமா ஜி :)

    ReplyDelete
  10. ஆடை கட்டி....அஹ்ஹஹ்ஹ நல்ல வார்த்தை விளையாடல்...அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆடை கட்டி என்று அங்கலாய்க்கும் அவருக்கு. ஆடை கட்டாமல் விளையாடத்தான் பிடிக்கும் போலிருக்கே :)

      Delete