1 September 2016

புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ :)

 இங்கிலீசில் பேசினால்தான் இன்ஸ்பெக்டரா  :)           
           ''தமிழ் பட வில்லன்கள் எல்லாருக்கும் படிப்பறிவு  அதிகமா ,ஏன் ?''
          ''போலீஸ் இன்ஸ்பெக்டர்  'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்'ன்னு ஆங்கிலத்தில்  சொன்னதும்  புரிஞ்சிக்கிறாங்களே !''

காதுக்கு கம்மல் ,சுவருக்கு இது சரிதானே :)
         ''நாட்காட்டின்னா  , செவ்வகமா இருக்கும் ,நீங்க ஏன் அதை கம்மல் மாதிரி டிஸைன் செய்து இருக்கீஙக ?''
         ''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு சொல்றாங்க ,அந்த காதுக்கு  பொருத்தமா இருக்கட்டும்னுதான்  !''
புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ :)
        ''ஞாபகமா, பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
        ''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''

34 comments:

  1. இங்க லூசா பேசினாதான் இன்ஸ்பெக்டர்

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு என்ன லூஸ் மோகன் பிறந்த தினமா ?நீங்களும் ,லூசுன்னு சொல்றீங்க ,அடுத்த வர்ற மதுரைத் தமிழனும் லூசுன்னு சொல்றாரே:)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நான்தான் லூசாயிட்டேனா ?இந்த அதிகாலையில் தூக்கம் கலைந்து விட்டதே :)

      Delete

  3. திருடனை பிடிக்கும் போது அவன் தமிழன தெலுங்கணா மலையாளியா ஹிந்திகாரணா என்று இன்ஸ்பெக்டருக்கு தெரியாது அதனால் பொது மொழியில் யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' என்று சொன்னா திருடங்க புரிஞ்சு கொள்வார்கள் போல

    ReplyDelete
    Replies
    1. விசாரிக்கமல் கை விலங்கை மாட்டுவாரா ?சரி ,விசாரிக்கவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் 'மாமூலா' பேசியிருப்பாரே !அப்போ ,மாமு எந்த ஊர் ,மஞ்சி வாடா ,மலையாளம் பறைஞ்சா,அந்தா கானூனா,ஏடு குண்டல வாடாவான்னு தெரிந்து இருக்குமே :)

      Delete
  4. உங்கள் வலைதளம் வரும் போதெல்லாம் நினைச்சுகுவேன் இந்த பகவான் ஜீ ஏன் எல்லோரையும் எப்பவும் லூசாக இருங்க என்று சொல்லிட்டே இருக்கிறார் என்று

    புரியலைன்னா உங்க தளத்தின் ஹெட்டரில் போட்டு இருப்பதை படிச்சு பாருங்கள் சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க என்று சொல்லுவதை அப்படி செய்தால் பார்க்கிறவங்க நம்மை லூசாகத்தானே நினைத்து கொள்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. 'இருங்க'ன்னு போட்டிருக்கேனே ,சந்தோசப் படுங்க !சில நேரங்களில் irnga என்று டைப்பித்து விடுகிறேன் ,அது தமிழில் 'இறங்க 'என்றாகி விடுகிறது !ஜோக்காளியைப் பார்க்க வந்தால் சாகச் சொல்றாரே என்று யாரும் நினைத்துவிடக் கூடாதுன்னு என்பதற்காக ஜாக்கிரதையாய் இறக்கிறேன் ,அடச்சீ , இருக்கிறேன் :)

      Delete
    2. அதே போல முக நூலில் பிறந்தநாள் வாழ்த்துகள் டைப்பும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன். தப்பித்தவறி P விட்டுப் போச்சுன்னு வைங்க.. அர்த்தமே மாறிடும்! இவனை எல்லாம் எவன் வாழ்த்துச் சொல்லச் சொன்னது என்று தோன்றி விடும்.

      Delete
    3. சரியாகச் சொன்னீர்கள் :)

      Delete
  5. ஆமாம், இந்த வசனம் இதுவரை இந்தத் தமிழ்ப் படத்திலும் தமிழில் வந்ததில்லை, இல்லை?

    என்ன ஒரு குறியீடு!

    இது இங்க அடிக்கடி நடக்குமுங்க!

    ReplyDelete
    Replies
    1. சும்மா சொன்னாலும் பரவாயில்லை 'மிஸ்டர் நாகலிங்கம் ,யூ ஆர் அண்டர் அரெஸ்ட் 'என்று ரொம்ப மரியாதையோடு சொல்வார் :)

      காதுக்கு மரியாதையோ :)

      தோலோடு சேர்ந்து கத்தியும் குப்பைக்கு போய்விடும் ,இல்லையா :)

      Delete
  6. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னதா நினைச்சு ஒரே ஒரு வசனம் பேச விடமாட்டீங்களே...! 'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' அதான் புரிஞ்சு அண்டர்ல வில்லன் பார்க்கிறாரோ...? என்னா வில்லத்தனம்...? கம்பி எண்ண கணக்கு பண்ணத் தெரியனுமுல்ல...!

    காதோடுதான் நான் பேசுவேன்...! அது என்ன கம்மலா...? நா கூட கரப்பான் பூச்சியாக்குன்னு பாத்தேன்...!

    தோல்கண்டார்... தோலே கண்டார்...! இதுக்குத்தான் ‘சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி...’ன்னு பாடாதேன்னா கேக்கனும்...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அண்டர்லே இப்படியொரு விளையாட்டு வேற நடக்குதா :)

      நாகரீகம் ,கரப்பான் பூச்சி மாடலைக் கூட தேடும் :)

      கிழிஞ்சது போங்க ,பாட்டு வேறயா ?கிழங்கைப் பிதுக்கி எடுத்து விடுவார் போலிருக்கே :)

      Delete
  7. Replies
    1. சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு சொல்றது ,உண்மைதானே :)

      Delete
  8. தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''
    எல்லாம் நல்ல ரசனை
    ரசித்தேன் சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. தனக்கு தேவையில்லை என்றால்தான் இப்படி மறதி வரும் :)

      Delete
  9. Replies
    1. நம்ம பேட்டை ரௌடி கபாலிக்கு 'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' என்றால் புரியுமா :)

      Delete
  10. உருளைக்கிழங்கு நல்ல நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. சுவையாய் மட்டுமே இருந்த உருளைக் கிழங்கு ,இன்று நகைச்சுவையும் ஆகிவிட்டது :)

      Delete
  11. Replies
    1. தமிழ்ப் பட வில்லன்கலின் ஆங்கில அறிவையுமா :)

      Delete
  12. மறதி எப்படியெல்லாம் வேடிக்கை காட்டுது....

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் இந்த வேலையைத் தரக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அப்படி செய்திருப்பாரா :)

      Delete
  13. இன்ஸ்பெக்டரின் ஆங்கிலம் போல் போலீசிடம் விவேக் ஆங்கிலத்தில் பேசித் தப்பிப்பது போல் ஒரு சீன் எந்தப் படத்திலேயோ வரும்...

    உருளைக் கிழங்கை ரசித்தோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. இக்கட்டான நேரத்தில் ஆங்கிலம் ,உண்மையில் கை கொடுக்கும் :)

      Delete
  14. இந்த யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மற்றும் கோர்டில் தட்ஸால் யுவர் ஆனர் என்பதும் சகஜமாகக் கேட்பதே புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ....
    அதுதான்சுவரெல்லாம் கம்மல்களோ
    தோலையும் கிழங்கையும் பிரிக்கமுடிந்தல் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ர்தானே

    ReplyDelete
    Replies
    1. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படுபவர்களுக்கு ,இந்த வார்த்தைகள் பழகிப் போயிருக்குமோ :)

      சில கிழங்குகள் பிரியாமல் மக்கர் பண்ணும் ,அதை சொல்ல வந்த உங்களுக்கும் தமிழ் மக்கர் பண்ணுதா :)

      Delete
  15. அந்த ச்ச்ச்ச்ச் கள் தெரியாமல் டைப்பினது

    ReplyDelete
    Replies
    1. ச்ச்களை தெரியாமல் டைப்பினால் பரவாயில்லை .....:)

      Delete
  16. Replies
    1. சுவருக்கு காலண்டர் கம்மல் அருமைதானே :)

      Delete