6 September 2016

என்று தீருமோ இந்த செல்பி மோகம் :)

பேய் எந்த மொழியில் பேசும் :)
            ''நான் புளியமரத்துப் பேய் ,நீ  மட்டும்  எப்படி ஆங்கிலம்  பேசுறே   ?''
            ''நான் 'பட்ட 'மரத்துப் பேய் ஆச்சே !''

என்று தீருமோ  இந்த செல்பி மோகம் :)
        ''என்னங்க சொல்றீங்க ,என்னை மாதிரியே என் பொண்ணுமா?''
        ''ஆமா ,கண்ணாடியில்  நீ அடிக்கடி பார்த்துக்கிற மாதிரி ,உன் பொண்ணு செல்பியில் பார்த்துக்கிறாளே !''

தூங்கு மூஞ்சி மரம்னா  தப்பாவே ஏன் நினைக்கணும் ?  
              ''தூங்கு மூஞ்சி மரத்தை, உதாரணமாய்  எடுத்துகிட்டு வேலை செய்யணும்னு  வங்கி மேலாளர் சொல்றாரே ,ஏன் ?''
              ''அந்த மரத்தின் இலைகள் பகல்லே தூங்காதாமே ?''

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?
            ''அவங்களை ,ஏன் மனமொத்த  தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ?''
            ''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் ,காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 

 என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !
         நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
        ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
        24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி, 30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
        உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?

25 comments:

  1. 'பட்ட 'மரத்துக்கே இந்தப் பாடுன்னா... பச்ச மரத்துக்கு உன்ன பாடோ...?!

    கண்ணாட்டிக்கு கண்ணாடி... அது அந்தக் காலம்... பொண்ணாட்டிக்கு செல்பி... இது இந்தக் காலம்... நாட்டி கேள்...!

    ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்...’ நாங்கள் தூங்கு மூஞ்சி மறத் தமிழர்கள்...!

    கல்யாணம்தான் கட்டிக்கிட்டபின் ஓடிப்போன தம்பதி‘வர்’களோ...? ஹலோ... ஹலோ...!

    சங்கர் நீ எதிலையுமே பஸ்ட்... பேரைப் பாருங்க... ‘ஜெய்’ ஜேம்ஸ் பாண்ட்...! ஜெயில் வார்டன் எல்லாம் தோஸ்து... ‘காவல்காரர்கள் நமது நண்பர்கள்’ன்னு சொன்னீங்க...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. அதுவும் காய்த்து தொங்குற மரம் என்றால சொல்லவே வேண்டாம் :)

      நாட்டி கேள் ஜாக்கிரதை ,பின்னாடி பாதாளம் இருந்திடப் போவுது :)

      ஓ ,டாஸ்மாக் தமிழனா ?தூங்கு தூங்கு ,பக்கத்திலே ஓடுற சாக்கடை நாற்றம் தெரியவா போவுது ,நல்லா தூங்கு :)

      பதிவில் இருந்து ஓடியிருக்கலாம் ,ரெண்டு பேரும் தம்பதிவர்கள் பொழப்பு நாறிடுமே :)

      ஜெய் ஆஞ்சநேயா சொல்லாமலே சிறையில் இருந்து பறந்து இருப்பானோ :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    தம சுற்றிக் கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. த ம சுற்றிக் கொண்டே இருந்தாலும் அதோட வேலையை சரியாய் செய்திருக்கிறது :)

      Delete
  3. //''ஆமா ,கண்ணாடியில் நீ அடிக்கடி பார்த்துக்கிற மாதிரி ,உன் பொண்ணு செல்பியில் பார்த்துக்கிறாளே !''//

    செல்ஃபியில் பாய் ஃபிரண்டுகளைத்தானே பார்ப்பா?!

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாலும் தப்பா?என்ன நியாயம்யா இது :)

      Delete
  4. Replies
    1. எப்போ வர்றதா உத்தேசம் ,புத்தகக் கண்காட்சிக்கு :)

      Delete
  5. ரசித்தேன்.

    த.ம... வோட்டு பட்டனை அழுத்தியாச்சு..... விழுந்தா சரி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க போட்டு விழாமல் போனதா சரித்திரமே இல்லை ம்:)

      Delete
  6. Replies
    1. செல்பியில் பார்த்ததுதானே :)

      Delete
  7. புளிய மரத்துப் பேய் புரிகிறார்போல் இருக்கிறது பட்டமரம் என்றால் ....?
    என்றும் கண்ணாடி இன்று செல்ஃபி
    எங்கள் ஊரில் தூங்கு மூஞ்சிமரத்தின் அடியில் மக்கள் தூங்குவார்கள் பார்த்திருக்கிறேன்
    சான்ஸே இல்லை. வலைப்பூவில் எல்லோரும் அறிமுகங்களே பலரும் அறியாத முகங்களே
    பிடிபட்டு விட்டான் அல்லவா. ஜேம்ஸ் பாண்ட் ஏதோ குற்றவாளி என்னும் நினைப்போ

    ReplyDelete
    Replies
    1. 'பட்ட'ம் வாங்கியதால் ஆங்கிலம் பேசும் மரம் :)
      போட்டோஜெனிக் ஃபேஸ் தெரிவது கண்ணாடியில் மிஸ்ஸிங் :)
      அறிந்த முகமோ ,அறியாத முகமோ ,புரிந்து கொண்டு நடந்தால் சரி:)
      கள்ளன் பெருசா ,காப்பான் பெருசா ...ஞாபகம் வருதே :)











      Delete
  8. ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் தோற்கடித்தாரா

    ஜேம்ஸ்பாண்டை ஜெய்சங்கர் தோற்கடித்தாரா

    தொழில் நுட்ப வளர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. என்ன வளர்ச்சி என்றாலும் கருப்பு ஆடுகள் இருக்கும் வரை கஷ்டம்தான் :)

      Delete
  9. இன்று இதுவரை பதிவு போடவில்லையா? ஏன்?

    ReplyDelete
    Replies
    1. bsnl சாமிக்கு என்ன கோபமோ ?வரம் தரவில்லை :)

      Delete
  10. அம்மா காலத்தில் செல்பி இருந்திருந்தால்..அவுகளும் செல்ஃபிலதான் பாத்து இருப்பாங்க........

    ReplyDelete
    Replies
    1. அது குல்பி காலம் ,இது செல்பி காலமாச்சே :)

      Delete
  11. மனமொத்த தம்பதி 'வர் 'களை உங்களுக்கு தெரியும்தானே :)

    ReplyDelete
  12. அனைத்தையும் ரசித்தோம் ஜி!!!! அதிலும் பேய் பேசும் மொழி அருமை!!

    ReplyDelete
    Replies
    1. அது ஆங்கிலப் பேயாச்சே :)

      Delete
  13. ரசித்தேன் ஜி... ஆங்கிலப் பேய் கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. எக்சார்சிஸ்ட் படத்தில் வந்த பேயாய் இருக்குமோ :)

      Delete