இதுக்காவது பயன்படுதே பல்லாங்குழி :)
''பாட்டி இப்போ எதுக்கு பல்லாங்குழி பெட்டியைக் கேட்கிறே ,விளையாடப் போறீயா ?''
''அட நீ வேற ,காலை மாத்திரை ,இரவு மாத்திரை எதுன்னு தெரிய மாட்டேங்குது ,பிரிச்சு முன்னாடியே போட்டு வச்சுக்கலாம்னு தான்!''
கலருக்கு கேசரியே சாட்சி :)
''குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்க வாய்ப்பில்லைன்னு எப்படி உறுதியாச் சொல்றே ?
''கேசரியிலே குங்குமப் பூவை போட்டும் கேசரி கலர் சிகப்பா மாற மாடேங்குதே!''
தானாடா விட்டாலும் தசை ஆடுமோ :)
''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !''
காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)
''கண்ணு ,மூக்கு ,வாய் எல்லாம் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு பக்கமும் இருக்கு,டார்லிங் ?''
''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''
மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !
சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு
வருகை தரும் பயணிகள் கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட
மேற்கூரை மூன்று மாதத்தில் நான்கு முறை
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
(குறிப்பு ....இந்த பதிவை எழுதி மூன்று வருடம் முடிந்த பின்பும் கூட ,சென்ற வாரம் வரை 67 முறையாக கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது :)
''பாட்டி இப்போ எதுக்கு பல்லாங்குழி பெட்டியைக் கேட்கிறே ,விளையாடப் போறீயா ?''
''அட நீ வேற ,காலை மாத்திரை ,இரவு மாத்திரை எதுன்னு தெரிய மாட்டேங்குது ,பிரிச்சு முன்னாடியே போட்டு வச்சுக்கலாம்னு தான்!''
கலருக்கு கேசரியே சாட்சி :)
''குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்க வாய்ப்பில்லைன்னு எப்படி உறுதியாச் சொல்றே ?
''கேசரியிலே குங்குமப் பூவை போட்டும் கேசரி கலர் சிகப்பா மாற மாடேங்குதே!''
தானாடா விட்டாலும் தசை ஆடுமோ :)
''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !''
காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)
''கண்ணு ,மூக்கு ,வாய் எல்லாம் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு பக்கமும் இருக்கு,டார்லிங் ?''
''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''
மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !
சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு
வருகை தரும் பயணிகள் கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட
மேற்கூரை மூன்று மாதத்தில் நான்கு முறை
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
(குறிப்பு ....இந்த பதிவை எழுதி மூன்று வருடம் முடிந்த பின்பும் கூட ,சென்ற வாரம் வரை 67 முறையாக கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது :)
|
|
Tweet |
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... மாத்திரை ஞாபகம்... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...!
ReplyDeleteதிருநங்கைகளான நம்ம கேசரியிலே குங்குமப் பூவை போட்டு சாப்பிட்டா என்ன...? சாப்பிடலைன்னா என்ன...?
‘அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...’ ஏன் பாட்டுப் பாடும் போது ஒங்க ஒடம்பே நடுங்கிது... இதுக்குப் போயி பதட்டப் படுறீங்களே... என்ன ஆம்பிளை போங்க...! இதுக்குத்தான் முன் அனுபவம் வேணுங்கிறது...!
லூசாப்ப நீ...!
வைரவிழா எடுக்காமல் விட்டது பெரிய குறைதான்...! எங்கே அந்த காண்டக்டர்... அவரை காண்டக்ட் பண்ணவே முடியலையே...!
த.ம. 2
கிழவியின் கன்னத்து பள்ளம் ஞாபகம் வரலையா :)
Deleteதிருநங்கை ..கேசரி ..புரிய மாட்டேங்குதே :)
சரி ,இதுவே அனுபவமா இருக்கட்டும் :)
இதைக் கேக்கிற நீதான் லூசு :)
கான்ட்ராக்டர் லண்டன்லே போய் செட்டில் ஆயிட்டார் :)
This comment has been removed by the author.
ReplyDeleteமீண்டும் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியலே !எனக்கும் இன்னொரு விஷயம் புரியலே ...நேற்றைய அபார்ஷன் பதிவுக்கு 1187 பக்கப் பார்வை விழுந்தது ,ஆனால் ஏனோ , த ம வாசகர் பரிந்துரையில் கூட வரவில்லை :)
Delete‘மீண்டும் ஒரு காதல் கதை’- சொல்ல வரவில்லை... ஏனோ தெரியவில்லை இரண்டு முறை கமெண்ட் வெளியாகி விட்டது.
Deleteஇன்னும் வரை எனக்கு புரியவில்லை ,அதென்ன ..திருநங்கை ..கேசரி :)
Deleteபல்லாங்குழிக்கு இப்படியும் ஒரு உபயோகமா!
ReplyDeleteஆமாம்... ஆமாம்..
அடப்பாவி மக்கா!
அது சரி..
அது ஒரு தொடர்கதை!
இன்று மீண்டும் மின்னல்வேகத்தில் தம வாக்கு! என்ன ஆச்சர்யம்!
தேவைதானே கண்டுபிடிப்பின் தாய் :)
Deleteகே சரி சரிதானா :)
மோசம் பண்ணிட்டீயே :)
லூசு பயலுக்கு புரிய மாட்டேங்குதே :)
சிந்துபாத் கதை என்று சொல்லுங்கள் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
பல்லாங்குழி ஐடியா அருமைதானே :)
Deleteரெண்டு காது பதில கேட்ட.பின்..டார்லிங்க்..அடுத்து என்ன சொன்னாரு....?
ReplyDeleteஇந்த காதுலே வாங்கி அந்த காது வழியா விட்டு விட்டதாய் கேள்வி :)
Deleteஎந்தக் குழியில் எந்த மாத்திரை என்பதில் சந்தேகம் வராதா
ReplyDeleteகேசரியும் குங்குமப் பூவும் கலந்தாலும் அவை அவற்றின் நிறங்களை இழக்காது என்பது புரியாதா
அவருக்கு அது முதலிரவு அல்லவே
கண்ணு மூக்கு வாய் இவற்றை ஒரே சமயம் பார்த்துக் கொஞ்சலாம் ஆனால் காதைக் கொஞ்ச இரு புறமும் போக பார்க்க வேண்டுமே
மூன்று வருடத்துக்கு முந்தைய பதிவா .......!
காலை மாத்திரைகளை எல்லாம் ஒரு குழியிலும் ,இரவு மாத்திரைகளை எல்லாம் இன்னொரு குழியிலும் போட்டு வைத்துக் கொண்டால் சிரமம் இருக்காதுதானே :)
Deleteபிறகேன் ,சிகப்பு குழந்தை பிறக்க குருட்டு நம்பிக்கை :)
அவருக்கு முதலிரவு அல்ல :)
இது ரொம்ப கஷ்டமான காரியம்தான் :)
இன்னும் மூன்று வருடம் போனாலும் இதே நிலைதான் அங்கே தொடரும் போலிருக்கே :)
''பாட்டி இப்போ எதுக்கு பல்லாங்குழி பெட்டியை...//
ReplyDeleteபாட்டி ரொம்பவே புத்திசாலிதான்!
பல்லு போனாலும் பாட்டிக்கு புத்தி மழுங்கலே :)
Deleteகணிணி செய்யாத வேலையை பல்லாங்குழி செய்யும் என்பது தற்கால இளைஞர்களுக்கு தெரியாத ஒன்று
ReplyDeleteஅபாகஸ் கண்டுபிடிப்பும் இந்த அடிப்படையில் தானே :)
Delete''எனக்கு அனுபவமாகிப் போச்சி...//
ReplyDeleteஇந்த ஜோக் வரியைக் குறிப்பிடாமல். “ஐயய்யோ...!” என்று கருத்து எழுதிவிட்டேன் அதனால் நீக்கம் [Delete] செய்தேன்.
நல்ல வேளை,ஐயய்யோ,ஐயய்யோ பிடிச்சுருக்குன்னு பாடாமல் போனீங்களே :)
Deleteபல்லாங்குழி இதுக்காவது பயன்படுதே! சந்தோஷம்!
ReplyDeleteபல்லு போய், கன்னத்தில் குழி விழுந்த பாட்டியின் கண்டுபிடிப்பு அருமைதானே :)
Deleteஅனைத்தும் ரசித்தோம் பல்லாங்குழி அருமை....இப்போதெல்லாம் மாத்திரைகளை காலை மாலை இரவு என்று குறிப்பிட்டு போட்டு வைக்கும் ப்ளானர் பெட்டிகள் வந்துவிட்டன...
ReplyDeleteசரியாக் சொன்னீர்கள் ,பலருக்கும் கருப்பு பெட்டி பற்றி தெரிந்த அளவுக்கு ,இந்த பிளானர் பெட்டி பற்றி இன்னும்தெ ரியவில்லை :)
Deleteரசித்தால் மட்டும் போதுமா ஜி :)
ReplyDeleteரசித்தேன். பல்லாங்குழி இப்போதும் வீட்டில் இருக்கிறது. சில சமயங்களில் என் அம்மாவும், பெண்ணும் விளையாடுவார்கள்....
ReplyDeleteத.ம. +1
இங்கே கேரம் போர்டு கூட தூசி படிந்து கிடக்கிறது ,விளையாட நேரமில்லாமல் :)
Delete