14 September 2016

அன்று செய்தது அபார்ஷனுக்கு உதவி ...இன்று :)

இவனுக்கு எப்படி பதில் சொல்றது :)        
         ''வெள்ளம் வரும்போது அணை போடணும் ,தெரியுதா ?''
         ''அதெப்படி  ஸார்  ,அணையைத் திறந்தால் தான்  வெள்ளமே வருது ?''

எப்படா ஸ்கூல் விடும்னு  இருப்பாங்களோ ?       
         '' நம்ம பள்ளிக்கூட மணியை ,உடனே எலெக்ட்ரிக் மணியாய்  மாற்றணுமா ,ஏன் ?''
         ''தெருவிலே ,சோன்பப்டி வண்டிக்காரன் அடிச்ச மணி சத்தத்தைக் கேட்டு எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே !''

அன்று  செய்தது அபார்ஷனுக்கு உதவி ...இன்று :)
                ''குழந்தைப் பிறக்காததற்கு  காரணம் , நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
               ''கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதை  சொல்லிப் பாரேன் !''
அழகை ரசிக்க அழகு தேவையா ?
  விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
  குத்திய முள் கேட்டது ...
  நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?

18 comments:

  1. வெள்ளம் வரக் கூடாதின்னுதான் அணை போடுறாங்களே...!

    சோன்பப்டி வாங்க ஓடியிருப்பாங்க... இன்று போய் நாளை வா... வருவாங்க...!

    கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதைப் போய் அவர்ட்ட எப்படி சொல்ல முடியும்... அதுக்கு அவரு காரணம் இல்லையே...!

    அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...நேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா... ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக் கிளியே அழகிய ராணி...அருகே வரலாமா...?! அதெப்படி நீ மட்டும் ரோஜா... ஒரே நேரத்தில் இருவரைக் காதிலிக்கிறாய்...?

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,கர்நாடகம் ஒரு சொட்டு தண்ணீரும் தமிழகத்துக்கு தரக் கூடாதுன்னு அணை கட்டுன மாதிரியிருக்கே :)
      சோன் பப்டி சோனா பப்டி பார்த்தா இப்படி சாப்பிட்ட எப்படியோ :)
      அதானே ,ஒழியத் தெரியாதவன் தலையாரி நுழைஞ்ச மாதிரி இருக்கே :)
      முள்ளுக்கும் ஆசை ரோஜா மீது :)

      Delete
  2. (மூன்றாவது) யோசனையைச் சொன்ன தோழி மிகவும் நல்லவர் போல!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்,அந்த தோழியை பாராட்டும் விதமாய், இப்போதே 646 பக்கப்பார்வைகள் விழுந்து விட்டதே :)

      Delete
  3. தோழி யப்பா சூப்பர்...வினைதான்..ஹாஹா..ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. இப்படி தோழி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ,இவ்வளவு அருமையான யோசனை யார் சொல்லுவார்கள் :)

      Delete
  4. வெள்ளம் வராமல் இருக்கத்தானே அணையும் தடுப்பும்
    தினமுமா சோன்பப்டி பள்ளி விடும் நேரத்துக்கு வருகிறார்
    கல்யாணத்துக்கு முந்தைய அபார்ஷனுக்கும் கணவர் காரணமா?
    யார் வேண்டுமானாலும் ரசிக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. நம்ம பொருளாதாரத்தில் இதையெல்லாம் செய்து கொள்ள முடியுதா :)
      அவர் வரும்நேரத்தில்தான் பள்ளி முடிகிறது :)
      அப்படின்னா பிரச்சினையே இல்லையே :)
      யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம் ,எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம் :)

      Delete
  5. அனைத்தும் நன்று பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. சோன்பப்டி சுவையாய் இருந்ததா :)

      Delete
  6. Replies
    1. சூடு ஆறிய சோன்பப்டியை இவ்வளவு லேட்டா வந்து ரசிக்கிறீங்களே ஜி :)

      Delete
  7. வணக்கம் ஜி !

    அபார்சன் மேட்டர அபாரம் ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் மறக்க முடியாதாச்சே :)

      Delete
  8. வணக்கம் ஜி !

    அபார்சன் மேட்டர அபாரம் ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நீங்கள் தந்த சீருக்கு நன்றி சீராளன் ஜி :)

      Delete
  9. அனைத்தும் அருமை... ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. த ம ஆறு ,ஏழு ஆகியிருந்தால் எனக்கு அருமையான ஆறுதலைத் தந்து இருக்குமே ஜி :)

      Delete