17 April 2014

இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே !

''என்னங்க ,அமாவாசை அதுவுமா ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
''ஏன் ?''
''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதுங்க ,அதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியாப் போயிருக்குமே !

''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
''அதஏன் கேக்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''

'சிரி'கவிதை!லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது ?


ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !







29 comments:

  1. Replies
    1. தமிழ் மணத்தில் இணைத்து,கருத்துரை தந்ததற்கும் நன்றி ஜி !

      Delete
  2. மனதும் எந்திரமாகி விட்டது...?!

    ReplyDelete
    Replies
    1. பணம் என்றால் மனம் பாசம் மறந்து எந்திரமாகித்தான் விடுகிறது !
      நன்றி

      Delete
  3. Replies
    1. மூணுக்கும் ஒரே ம் தானா ?
      நன்றி

      Delete
  4. காக்காவுக்கு நெய்ச்சோறு வைக்கட்டும்!..
    நாளைக்கு - இவங்களும் இந்த மாதிரி
    கட்டைச்சுவர் மேல உக்கார வேணுமில்லே!..

    ReplyDelete
    Replies
    1. அது எங்கே இப்போ நினைவுக்கு வருது ?மாமியாரைக் கிண்டல் பண்றதும் குறையலயே !
      நன்றி

      Delete
  5. சுவையோ சுவை நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. சுவையோ சுவைன்னு நீங்க ஆரம்பித்ததும் ஏதோ ஊறுகாயைத் தான் சொல்லப் போறீங்களோன்னு நினைச்சுட்டேன் !
      நன்றி

      Delete
  6. இந்த அம்மா ஒரு காலத்தில மாமியாராகி என்னென்ன பாடு படப் போகிறாவோ
    கிண்டலப் பாரு :)))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி வசைப் பாடிட்டு நெய்ச்சோறு வைத்தாலும் புண்ணியம் இல்லையே !
      நன்றி

      Delete
  7. மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மாமியாரை மருமகள் மறக்காமல் இருப்பதைத்தானே சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  8. அமாவாசையா அல்லது அம்மா வசையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாம் ,புருசனின் அம்மாவை வசைப் பாடுவதால் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. மாமியார் போய் பல வருசமாச்சு ,ஆனாலும் மருமகளுக்கு அந்த கர்கர் குரல் மட்டும் கேட்டுட்டே இருக்கும் போலிருக்கு !
      நன்றி

      Delete
  10. எல்லாமே அனுபவ உண்மையாய் இருக்கிறது ஜீ

    ReplyDelete
    Replies
    1. காணாத ஒன்று கனவில் கூட வர வாய்ப்பில்லையே !
      நன்றி

      Delete
  11. போன வருடத்திய ஜோக்குக்குத்தான் முதல் மதிப்பெண்! ஹஹ்ஹஹ்ஹா!!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய ஜோக் அடுத்த வருடம் இதே நாளில் வராமலாப் போய்விடும் ?
      நன்றி

      Delete
  12. அம்மாவை இப்படி பேசுவதால் பிள்ளைக்குக் கோபம் வராதா...?

    ReplyDelete
    Replies
    1. கோபம் வரணும்னுதானே இந்த குத்தல் பேச்சு !
      நன்றி

      Delete
  13. Replies
    1. சேமியா பாயசம் போல் எப்பவும் இனிக்கும் போல !
      நன்றி

      Delete
  14. என்னவொரு பாசம்.... இவர்களுக்கும் இவர் மருமகள் பாயசம் வைக்கும் காலம் வரலாம்!

    ReplyDelete
    Replies
    1. தலைமுறை தலைமுறையாய் இது தொடருமோ ?
      நன்றி

      Delete