10 November 2015

தண்டம்னு மனைவி சொல்லுறதும் சரிதானா :)

  எல்லோராலும் 'தியானத்தில் 'மிதக்க முடியுமா :)        
          
         ''தியானம் செய்யும் போது ஃபேனை ஏன் ஆப் பண்ணிக்கனும்னு 

சொல்றீங்க ?''
       
      ''அந்தரத்தில் மிதந்து அடி பட்டுறக் கூடாதுன்னுதான் !''



பேப்பர்  ஜூஸ் நல்லாவாயிருக்கும் ?     
                      
              ''உங்க உடம்பு தேற 'சுவரொட்டி 'யை நல்லா அரைச்சுக் 

கொடுக்கணும்னு உங்க மனைவிகிட்டே சொன்னேன் ,அதுக்கென்ன 

இப்போ ?''
  
         ''கொஞ்சம் விளக்கமா ,சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரல்னு 

சொல்லி இருக்கக் கூடாதா ,டாக்டர் ?''

ஏற்கனவே மனைவி தண்டம்னு சொல்லுவா ...!

              ''அவருக்கு காந்தீயக் கொள்கையிலே ஈடுபாடு 

அதிகமாச்சு  சரி ,தண்டாயுதபாணிங்கிற பெயரை ஏன் 

தண்டபாணின்னு மாத்திக்கணும்?''
              

          ''ஆயுத பாணியா  இருக்க பிடிக்கலையாம் !''

கு ..க ..என்றாலும் ஜனத்தொகை குறையலேயே!

           ''பொறந்ததும் குவாகுவான்னு அழ வேண்டிய 

  குழந்தை ஏன் குகாகுகா ன்னு அழுவுது ?'' 

              ''ஆறாவதா பொறந்த குழந்தை ஆச்சே !

அப்பனுக்கு குடும்ப கட்டுப்பாட்டைஞாபகப்படுத்துது!'' 



ரஜினியின் ஜப்பானிய ரசிகை தமிழக மருமகளானார்!

நமக்கு ஜப்பானிய புருஸ்லி ஜெட்லியை பிடிக்கும் ...
ஜப்பான் பெண் என்ஜீனியர்  'தனே அபே 'வுக்கு பிடிச்சதெல்லாம் நம்மூர் இட்லி தானாம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பிடிச்சதாலோ என்னவோ ....
அவர் மனசுலேயும் எப்போ வரும் ,எப்படி வரும் தெரியாமல் இருந்த காதல் நிச்சயமாய் வந்தேவிட்டது ...

ரஜினியின் சங்கர் சலீம் 'சைமன் 'கேரக்டரை விரும்பி இருப்பாரோ என்னவோ ...
நம்ம ஊர் ஆண்டனி பிரகாஸ்மேல் காதல் மலர்ந்திருக்கிறது ...
 நான்காண்டுக்கு முன் கன்னியாகுமரிக்கு வந்தாராம் தனே அபே ...
நட்சத்திர ஹோட்டலில் ரூமை உடனே தராமல் காக்க வைத்ததால் வெறுப்பாகி வரவேற்பாளரிடம் வாக்குவாதம் செய்கையில் ...
அப்போது நம்ம ஆண்டனி பிரகாஸ் பிரகாசமாய் 
பிரவேசித்து உள்ளார் ...
உடனே தனே அபேவுக்கு அட்டகாசமாய் உடனே அறை தயார் செய்து கொடுத்துள்ளார் ...
அவரின் கனிவான பேச்சும் ,உபசரிப்பிலும்  மயங்கி விட்டாராம் தனே அபே ...
அதுவும் ஒரே ஒருநாள் பழக்கத்தில் ...
ஜப்பானுக்கு சென்ற பின்னும் செல் ,இ மெயில் மூலமும் தொடர்ந்த நட்பு ,காதலாகி விட்டதாம்...
இதற்காகவே தான் பணி புரியும்  கார் கம்பெனியின் டெல்லி கிளைக்கு  மாறுதலாகி வந்துள்ளார் ...
கன்னியாகுமரியிலும் ,டெல்லியிலும் மாறி மாறி கடலைப் போட்டுக் கொண்டு இருந்தார்களாம் ...
கடலைப் போட்டது  போர் அடித்து  ...
இருவீட்டார் சம்மதத்துடன் கன்னியாகுமரியில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளார்கள் ...
நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ...
இந்த இருவரின் காதல் நாடு விட்டு நாடு தாண்டி இருப்பதை நினைக்கும் போது ...
நாமென்ன நினைப்பது ?...
நம்ம ஊர் கலாசாரக் காவலர்கள் தான் நினைத்துப் பார்க்கணும் ! 
கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா ?
           ''என்னங்க , தூங்குறப்போ கண்ணாடியை ஏன் மாட்டிக்கிறீங்க  ?''
             ''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''

26 comments:

  1. ரசித்தேன் ஜி...

    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  2. தீபாவளிச் சிரிப்புகள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  3. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  4. அந்தர் பல்டிங்கிறது இது தானா...? தலையில இருக்கிற பேன் கீழே விழுந்திடக்கூடாதில்ல... தியானத்திலகூட எந்த உயிரையும் கொல்லக்கூடாதில்ல...! அதனாலதான் ஃபேனை ஆப் பண்ணணும்.


    சுவரொட்டி ஆடு மாடுக்குத்தானா...? பேப்பர் ரோஸ்ட் மாதரி... பேப்பர் ஜுஸ்ன்னு நெனச்சேன்...!


    தண்டபாணின்னு நிராயுதபாணியாக்கிட்டியே...!


    பின்னால் கஷ்டப்படப் போறது அதுதானே...!


    ஆண்டனி பிரகாஸ் ஜப்பான் பெண் தனே அபேக்கு அறை தயார் செய்து தாயார் ஆக்க ஆயத்த வேலைகள் செய்துவிட்டாரே...!


    கனவே இனி கலங்காதே...! கண்ணாடி மாட்டியாச்சு... கவலைவேண்டாம்...!

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஃபேன் இடித்தால் தலையில் இருக்கிற பேன் மட்டுமா அடி படும் ,பெரிய உயிருக்கு ஆபத்து இல்லையா:)

      ஆடு மாடு பேப்பர் சாப்பிட்டால் ,மனுஷன் அதோட சுவரொட்டியை சாப்பிடுறானே:)

      இனி ,அடி பலம்மா வாங்கப் போறார் :)

      இப்ப என்ன வாழுது ?GH ல் தானே பிரசவம் :)

      தந்தை ஆவதற்குள் மூணு முடிச்சு போட்டா சரிதான் :)

      எப்போ கனவு வருமோ ,அதுவரை கண்ணாடி கழறாமல் இருக்கணுமே :)

      Delete
  5. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
    அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
    இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  6. அருமை!
    த ம +
    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  7. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு வெடிகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  8. வணக்கம்
    ஜி
    படம் அட்டகாசம்... அசத்தல் பதிவு.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. 01. நல்ல யோசனைதான்
    02. ஹாஹாஹா ஸூப்பர்
    03. சுருக்கமாக... தண்டமா ?
    04. இந்தக்காலத்திலும் ஆறாவதா ?
    05. வாழ்க வளமுடன்
    06. யோசனை மஞ்சிவாடு

    ReplyDelete
    Replies
    1. மொட்டை மாடியில் தியானம் செய்து அப்படியே மேலே போகாமல் இருந்தால் சரிதான் :)
      அதை கல்குத்தி என்றும் சொல்வார்கள் :)
      வாயில் அதுதானே வரும் :)
      ஆறுதலா இருக்கட்டும்னுதான் :)
      எங்கிருந்தாலும் வாழ்க :)
      யோசனை மஞ்சிவாடுதான் ,கண்ணாடி உடையாம இருக்கணுமே :)

      Delete
  10. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Replies
    1. அன்பைப் போதிப்பவர் ஆயுதபாணியாய் இருக்கலாமா :)

      Delete
  12. எல்லாமே கலங்கலா இருந்தன...
    அட, இருங்க... கண்ணாடி மாட்டிக்கினு வறேன்.
    எல்லாமே கலக்கலா இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்தும் கலக்கலா இருக்கே :)

      Delete
  13. எல்லாமே கலக்கலாதான் இருக்கு......நண்பரே..........

    ReplyDelete
    Replies
    1. தண்ணியில் மிதப்பவர்களைக் காண முடிகிறது ,தியானத்தில் மிதப்பவர்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா :)

      Delete
  14. ரசித்தேன்....

    தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

      Delete