16 November 2015

நாசூக்கா சொன்ன இவர், நல்ல நண்பர்தானா :)

              ''என் வீட்டிலே வெற்றிலைக் கொடி செழிப்பா படர்ந்து இருப்பதைப் பார்த்தால் அதிசயமா இருக்குதா ,ஏண்டா ?''
                ''நல்ல எண்ணம் உள்ளவர்கள் வீட்டில் மட்டும்தான் வெற்றிலைக் கொடி படரும்னு சொல்வாங்க ,அதான் !''


கிளினிக் வாசல்லே ஆட்டோ இதுக்குத்தானா ?

               ''இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா சுகப் பிரசவம் ஆகாது!''
                ''நடந்துகிட்டே இருக்கவா டாக்டர் ?''
               ''ஊஹும் ..வாசல்லே நிற்கிற ஆட்டோவிலே ஒரு மணி நேரம் சுத்திட்டு வாங்க !''

தங்க நகை HALL MARK தானா நல்லாப் பாருங்க !

                    ''HALLMARK நகைன்னு நம்பி வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
                  ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
                 ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான் அதிலே போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா ?

மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூட காணாது  போலிருக்கே ...

உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,உப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையை கேட்கும் போதே அயோடெக்சை தேடவேண்டியிருக்கிறது  ...
அயோடின் உப்பு என்றால் ஐந்நூறு ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !


                                                             
















16 comments:

  1. அதை ஏண்டா கேக்கிறாய்...? போன மாசமே வீட்ட வித்திட்டேன்...! பணம் கொஞ்சம் பாக்கி... அதை வாங்கிறதுக்கு வந்தேன்...!


    வாசல்லே நிற்கிற ஆட்டோ... ஆஸ்பத்திரியோட ஆட்டோதான்... அதில ஏறி ஊர சுத்தி வாங்க... ’பிரசவத்துக்கு இலவசம்’ -ன்னு எழுதி போட்டிருக்கு பாருங்க...!


    “மாத்துக் குறையாத தங்கம்ன்ட்டு... இப்ப இந்த பம்மாத்து வேலையெல்லாம் வேண்டாம்...!”
    “தங்கத்திலே குறையிருந்தாலும் எங்க கடையின் தரம் குறைவதுன்டோ...? வாங்க உரசிப்பார்ப்போம்...!”


    ‘உப்புபோட்டு சாப்பிடுறியா...?’ யாரும் இனி கேட்டு பிரஷர் கொடுக்க மாட்டாங்க...!


    த.ம.1.










    ReplyDelete
    Replies
    1. வீட்டை வாங்கியவரின் நல்லெண்ணம்தானா,அதுவும் சரிதான் :)

      இந்த டெலிவரிக்கு ஆட்டோ சார்ஜ் கொடுத்தால் போதுமா :)

      உரசிப் பார்த்தால் விளங்கிடும் :)

      கொடுக்கிறவரும் உப்பு சாப்பிடாமே இருக்கணும் :)

      Delete
  2. ஹஹஹ ஆட்டோ பிரசவத்திற்கு இலவசம்னு போட்டதும் அந்த ஆட்டோவே இப்போ எல்லாம் பிரசவ ஆஸ்பத்திரியாகிடுச்சாம்....

    ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூட காணாது போலிருக்கே ...// ஹஹஹ் சரிதான்.....உப்பில்லா பண்டம் குப்பையிலே மாதிரி..ஆட்சியாளர்களையும் குப்பையிலே தள்ளிவிடலாம் மக்கள்....உப்பு கரிக்கவில்லை நன்றாவே இருந்தது...ஜி

    ஹால் மார்க்- ஹால் மாஸ் ஹஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. மொபைல் டெலிவரி ஆட்டோவா:)

      முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சி போனது இதனால்தான் :)

      மோசடி இப்படியுமா :)

      Delete
  3. Replies
    1. உப்பு குறைந்தால் உடம்புக்கு நல்லது தானே ஜி :)

      Delete
  4. வெற்றிலை கொடி படர்வதில் இப்படி ஓர் ரகசியம் இருக்கிறதா? ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. மனுஷனுக்கு ஆயிரம் நம்பிக்கை ,அதில் இதுவும் ஒண்ணு:)

      Delete
  5. 01. உங்களைப்பற்றித்தான் ஊருக்கே தெரியுமே ஜி
    02. டாக்டர் செலவு மிச்சம்
    03. சரிதான்
    04. இனி உப்பில்லாமல் சாப்பிட்டு பழகணும்

    ReplyDelete
    Replies
    1. அதான் ,வெற்றிலைக் கொடி போட யோசனையாயிருக்கு :)
      ஆட்டோவில் டெலிவரி ஆச்சுன்னா பரவாயில்லை :)
      இனிமே அந்த கடைக்கு போகும் போது,கையோட ஒரு ஜூம் லென்ஸ் கொண்டு போகணும் :)
      இப்படியுமா சோதனை வரணும் :)

      Delete
  6. உங்க டூத்பேஸ்ட்-ல உப்பு இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. யாருக்குத் தெரியும் ? சோடா உப்பு கூட இருக்கலாம் :)

      Delete
  7. நண்பரின் உள் குத்தா இருக்குமோ..........

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் ,கைமாத்து கேட்டு கிடைக்காமல் போனதே:)

      Delete
  8. வாசலில் இருக்கும் ஆட்டோ - அடக் கொடுமையே...

    ReplyDelete
    Replies
    1. வலியை வரவழைக்க இப்படியும் ஒரு வழியா :)

      Delete