8 November 2015

இரண்டாம் கல்யாணம் பண்ணிக்க காரணமா இது :)

                       ''சொல்றேன்னு தப்பா நினைக்காதே ,உன் கணவர் மேல் ஒரு கண்ணாவே இரு !''
          ''உங்க நெருங்கிய நண்பரைப் பற்றி ,நீங்களே ஏன் இப்படிச் சொல்றீங்க ?''
           ''நம்ம ஊர்லே புதுசா திறக்கப்பட்ட கல்யாண மகால் எப்படின்னு கேட்டா ,எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் போலிருக்குன்னு சொல்றானே !''

பழசை மறக்காத உழைப்பாளி :)
          ''அந்த டீ மாஸ்டர் ,முன்பு  கிளினிக்லே வேலைப் பார்த்தவரான்னு  ஏன் கேட்கிறீங்க ?''
          ''இங்கே சரியாக 105 டிகிரி  சூடான டீ ,காப்பி கிடைக்கும்னு சொல்றாரே !''

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா ?

            ''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''
          ''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியது :)

தம்பதிகள் சண்டைதெருவுக்கு  வரக் கூடாது என்பார்கள் ...
நாகர்கோவில் அருகே ஒரு தம்பதியினரின் சண்டை ரயில் தண்டவாளத்திற்கே வந்த அதிசயம் நடந்துள்ளது ...
பிறந்த ஊர் பிராந்தநேரி என்பதாலோ என்னவோ 
பிராந்தியே கதியாய் இருந்த  சர்வருக்கு மூன்று குழந்தைகளாம் ...
சம்பாதித்தது  மூக்கு முட்ட குடிப்பதற்கே அவருக்கு போதாதாம் ...
திருந்தாத ஜென்மத்தோடு வாழப் பிடிக்காமல் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டாராம் மனைவி ...
வெளிநாட்டில் சம்பாதித்ததை  பிள்ளைகளுக்கே கொடுத்தாளாம் ...
தண்ணி அடிக்க காசு கேட்டால் தராமல் திட்ட வேறு செய்தாளாம் ...
மதிக்காத மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்து ...
ரயில் தண்டவாளத்தில் இரண்டு பாறாங்கல்லை வைத்துள்ளார் ...
நல்லவேளையாக இஞ்சின் டிரைவர் பாறாங்கல்லை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார் ...
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது  ...
போலீசிடம் மாட்டிக் கொண்ட சர்வர் கூறியது பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியது ...
ரயிலை கவிழ்த்தது நான்தான் என்று தெரிந்தாலாவது பயந்து மனைவி பணம் தருவாள் என்பதற்காகத்தானாம் !
வண்டவாளம் தண்டவாளம் ஏறியது என்பது இவனுக்குத் தான்  மிகவும் பொருந்தும் !
வாலிப வயது பேசுது:)
          ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது .அதனாலே 

விட்டுட்டேன்!''
            
           ''எதை?''

           ''கோவிலுக்குப்  போவதைதான் !''


25 comments:

  1. முதல் மூன்றுக்கும் பின்னர் ஐந்தாவதுக்கும் சிரித்தேன். அடுத்த விஷயம் கோபம் வரவழைத்தது.

    ReplyDelete
    Replies
    1. கோபம் வந்ததில் தவறேயில்லை ,சிரிக்காமல் கூட இருந்திடலாம் :)

      Delete
  2. எ கண்ணில்ல.. கண்ணில்ல... சொல்றப்பவே யோசிக்காம விட்டுட்டேன்... கண்ணு இல்லன்னு சொல்றாருண்ணு...! கண்ணத் தொறக்கணும் சாமி... கையப் பிடிக்கனும் சாமி...!


    இதுதான் ‘டிகிரி’ காப்பியா...? மாஸ்டர் முன்பு கிளினிக்லே வேலைப் பார்த்தவருனால கிளாஸ நல்லா கிளின் பண்ணுவாரு...!


    ஏற்கனவே ஒரு கிட்னிய வித்திட்டாரு... இன்னும் ஒரே ஒரு கிட்னிதா இருக்கு... இதையும் சீக்கிரம் வித்திட்டா... கடைய மூடிடலாங்கிறாரு...!


    பெரிய ஆள்தான்... அடுத்தாத... இரயில்வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கப் போறாராம்...! இப்ப எப்படி இரயில நிறுத்துவாருன்னு ஒரு கண் பார்த்திருவோம்ன்னு முடிவா இருக்காராம்.


    அதான் கோவிலுக்கு வெளியே நின்னுக்கிட்டு வர்ரவங்க... போரவங்க... பார்த்திக்கிட்டு இருக்கேன்... தெய்வக் குத்தம் வந்திடக்கூடாதில்ல...!

    த.ம.3


    ReplyDelete
    Replies
    1. இனிமே எங்கே கண்ணைத் திறக்கிறது ?அந்த காலமெல்லாம் முடிந்து ரொம்ப தூரம் வந்தாச்சே :)

      கிளினிக்கில் வேலை செய்தவர் கிளினிங்கிலும் கெட்டிக்காரரா :)

      அந்த நிலை வந்தால் ...கிட்னி விற்று உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக்க உலகியற்றியான் என்பாரோ :)

      தண்ணி வண்டி அப்படிக்கூட செய்யக்கூடும் :)

      ரொம்ப நல்ல புண்ணிய காரியம் பேஷா அதையே செய்யுங்கோ :)

      Delete
  3. கல்யாண ஆசை இப்படி க்கூட வருமா?...

    ReplyDelete
    Replies
    1. வராதுதான் ,வேற ஏதோ தொடர்பு இருக்கும் :)

      Delete
  4. வசதியும் வாய்ப்பும் இருக்கிறவர்...பத்து புது கல்யாண மண்டபத்தை பார்த்தாலும் கல்யாணம் பன்னிக்கலாம் போலிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. பத்தோட ஒண்ணு கூட வச்சுக்குவார் :)

      Delete
  5. ஹஹஹ முதல் மூன்றும் செம....ரசித்தோம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. நாலாவதாக வந்தவர் , வீட்டுப் பிரச்சினையை ஊர்ப் பிரச்சினை ஆக்கி விட்டாரே :)

      Delete
  6. படித்தேன். சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. போலி நோயாளியை நினைத்துதானே :)

      Delete
  7. Replies
    1. வாலிபன் எடுத்த முடிவைத்தானே :)

      Delete
  8. ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்! சர்வர் கண்டிக்கப்பட வேண்டியவர்!

    ReplyDelete
    Replies
    1. சர்வர் கொடுத்த டிப்ஸ் கொடூரமாயிருக்கே :)

      Delete
  9. 01. இவன் யோக்கியன்தானே.. ?
    02. நாளைக்கு பிரதமராக வருவாருனு சொல்ல வர்றீங்களா ? ஜி
    03. என்னமோ சட்னி விற்க வந்தவர் மாதிரி சொல்றீங்க...
    04. ஹாஹாஹா அறிவாளி
    05. தப்புனு தோணினால் விட்டுறணும்.

    ReplyDelete
    Replies
    1. பிறகேன் உங்களுக்கு சந்தேகம் :)
      விஞ்ஞானரீதியா பேசுற ஆள் பதவிக்கு வந்தால் வரட்டுமே :)
      விற்கணும்னு முடிவு பண்ணிய பிறகு சட்னியாவது ,கிட்னியாவது :)
      அதை இப்படியா நிரூபிக்கணும் :)
      நல்ல பாலிசி:)

      Delete
  10. சர்வர்...
    இப்படியும் ஒரு மனிதன்(ர்)

    ReplyDelete
    Replies
    1. பெயரில் மட்டுமா வித்தியாசம் ,செயலிலும்தான் :)

      Delete
  11. அந்த வயதில் கோவிலா முக்கியம்?சரிதான்

    ReplyDelete
    Replies
    1. வயசுக்கு தகுந்த மாதிரி முடிவுகள் மாறு படலாம் :)

      Delete
  12. வாலிப வயது பேசுவதை ரசிக்க முடியுதா :)

    ReplyDelete
  13. ரசித்தேன்.

    தண்டவாளத்தில் கல் - அந்த கல்லையே அவன் தலையில் போட! ஓட்டுனர் மட்டும் வண்டியை நிறுத்தியிராவிட்டால் பல உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் குடிப் பழக்கத்தால் வரும் வினைதானே ?சர்வர் எங்கே திருந்தப் போகிறார் :)

      Delete