22 November 2015

படித்தால் மட்டும் போதுமா :)

 பிடித்ததை தருவது நல்லதுதானே !

           ''என்ன சொல்கிறீர்கள்  அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''
              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா ?

          ''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு வைப்பார்னு சொல்றியே ,ஏன்?''
           ''சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடர் எழுதியவர் ஆச்சே !''


எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் eye !
நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே  பற்றிக் 

'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?

  
நேற்றைய ,சீரியஸ் கதையின் தொடர்ச்சி .......

படித்தால் மட்டும் போதுமா ?


22 comments:

  1. நட்புறவை நாடியா... நல்ல வேளை... ! வெள்ளை புறாவிற்கு வேலையில்லாமல் பண்ணிவிட்டார்களா...? சரி...அடித்து குழம்பில் போடுங்கள்... உடம்பாவது தேறட்டும்...!


    போடா போடா புண்ணாக்கு... போடாதே புலிகேசி தப்பு கணக்கு...!


    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை... தந்து விட்டேன் என்னை... கண் சிவந்து இதழ் வெளுக்கும்...காதல்!


    படிக்காத மேதைதாதான்... மாப்பிள்ள தம்பிய மன்னிச்சு மரு... மகனாவாவது ஏத்துக்கங்க... இல்லாட்டி நடக்கிறதே வேற...!

    த.ம.1




    ReplyDelete
    Replies
    1. புறா எதுவும் கிடைக்காமல் போனாதால் சேனையுடன் வருகிறார் :)
      தப்பு கணக்கு தாமதமாய் புரிந்து என்ன செய்ய :)
      சிந்தித்தால் வந்த காதலும் போய்விடும் :)
      மிரட்டல் பலிக்குமான்னு தெரியலே :)

      Delete
  2. Replies
    1. சேனை வறுவல் சுவைதானே :)

      Delete
  3. Replies
    1. காதல் கணக்கு சரிதானா :)

      Delete
  4. சீரியஸ் கதையும் நன்று. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. நீங்களே சொல்லுங்க ,படித்தால் மட்டும் போதுமா :)

      Delete
  6. படித்தால் மட்டும் போதுமா..?.பின்னே....ஓட்டும் கருத்துரையும் வழங்க வேண்டும் எனக்கு தெரியுமே....!!!!

    ReplyDelete
    Replies
    1. வோட்டு போடுவது சிக்கலா இருக்கே :)

      Delete
  7. ஜோக்ஸ் சிறப்பு! கதை அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சிறப்புக்கும் ,அருமைக்கும் நன்றி :)

      Delete
  8. 01. எதையும் பக்குவமாக சொல்லணும்
    02. ஸூப்பர் தலைப்பூ
    03. கொல்லும் வியாதிதான் ஜி
    04. இப்பத்தான் புரிந்ததா ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு கலைதானே :)
      பூவை தலையில் சூடுவதுதானே முறை :)
      அனுபவம் பேசுதோ :)
      ஒரே நேரத்தில் எல்லோருக்கும் புரியாதே :)

      Delete
  9. பாடம் கற்றுக் கொண்ட சோக்காளி!
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. கததுக்க வேண்டியது ,இன்னும் நிறைய இருக்கே :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    வரும் படை வெள்ளைக் கொடி படைபோல...
    மற்றவைகளை இரசித்தேன் ஜி த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனனருக்குத்தான் புரியவில்லை :)

      Delete
  11. ஓ... அந்த சேனை இல்லையா?!!

    பாவம் வடிவேலு.

    அப்போ எவ்வளவு நான்கு விழிகள் கலக்கின்றன? எவ்வளவு தொற்றுநோய் வரவ்ண்டும்?!!!

    படித்தால் மட்டும் போதுமா படித்த நினைவு இருக்கிறது.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல சேனைதானே :)

      பாடம் படித்த வடிவேலு :)

      நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே :)

      மறக்க முடியலே ,அப்படித்தானே :)

      Delete