21 November 2015

வயசுப் பொண்ணு ஆசைக்கு தடை போடலாமா :)

இந்த மாதிரி சொல்லும், நாளும் வருமோ :)

                 ''இந்த ரேஷன் கடையிலே உப்பு பாக்கெட் கட்டாயமா வாங்கியே ஆகணும்னு சொல்றாங்களே ,நியாயமா ?''

                   ''நல்ல வேளை,டாஸ்மாக்  சரக்கை வாங்கியே ஆகணும்னு சொல்லாம விட்டாங்களே சந்தோசப் படுங்க !'' 


வயசுப் பொண்ணு ஆசைக்கு தடை போடலாமா ?

             ''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை 

சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
             
             ''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு  

மரியாதை இல்லாமே என்னை கிண்டல் 

பண்ணுவாங்களே !''
---------------------------------------------------------------------------------------------------------


இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி !

              ''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் 

வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கு !''
        
          ''ஏன்?''
           
            ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை 

இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே 


போட்டுக்கிட்டு இருக்காரே!''

பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி !

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...

திராவிடத் தலைவர்களுக்காவே சொல்லப் பட்டதா?
கடந்த மூன்று தினங்களாக 'சிரி'கதை படிச்சு ரசித்தீர்கள் ,ஒரு  மாறுதலுக்கு ஒரு 'சீரியஸ் 'கதையையும் படிக்கலாமே ? 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு  மணி அய்யா சொன்ன பதிலை நாளைப் பார்க்கலாமா ?

25 comments:

  1. நகைச்சுவையில் மட்டுமின்றி சிறுகதையிலும் கலக்குறீங்க ஜி....
    என்ன சொன்னார்ன்னு பார்க்க ஆவலாய்...

    முதல் ஜோக்குக்கு எங்கள் தானைத் தலைவி சிம்பு தந்த சொம்பு நயனின் படத்தைப் போட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்... அந்தப் புள்ள என்ன பண்ணுச்சு.... லவ்வருக்கு வாங்குச்சு... அப்பனுக்கு வாங்குச்சு... அதுக்குன்னு வாங்குச்சா ஜி...

    சிரிப்புக்கள் அருமை.... மத்தாப்பூ...

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் கலக்கத்தான் ஆசை ,ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதுமானதா மாட்டேங்குதே :)

      யாருக்கு வாங்கிச்சு என்பதை ஒரு கமிஷன் போட்டு விசாரிக்க வேண்டியதுதான் :)

      Delete
  2. டாஸ்மாக் சரக்கை வாங்கியே ஆகணும்னு சொன்னா... அரிசி போல விலையில்லாமல் கொடுத்தா ரேஷன்ல ரொம்ப சந்தோசமா நிக்க மாட்டாங்க... கொடுத்தா உப்புச்சப்பில்லாம போயிடுமுன்னுதான் சொல்லல...!


    ஊதா கலர் ரிப்பனை

    ஊதா கலர் ரிப்பனை சடையிலே போட்டுக்க தடை போடாதிங்கப்பா... சாரிப்பா... இனிமே 'யார் உனக்கு அப்பர்’ன்னு கிண்டல்

    பண்ணாம கேக்கச் சொல்றேன்ம்ப்பா...!


    கல்யாண தரகர் ரெண்டையும் ஒட்டவைக்கிறதுல கெட்டிக்காரர்ன்னு சொல்லுங்க...!


    கூத்தாடி கிழக்க பாப்பான்... கூலிக்காரன் மேற்க பாப்பான்...ஆரியக் கூத்தாடி எதைப் பாப்பான்...?


    யார் காலண்டர்ல்ல... எதை ஒட்டனுமுன்னு ஒரு விவஸ்த வேணாம்... தம்பி தெரியாம செஞ்சிட்டாரு... மாப்பிள்ள நா சொல்றேன் அவர மன்னிச்சு ஏத்துக்கங்க...என்ன... நா சொல்றது?

    த.ம.2


    ReplyDelete
    Replies
    1. காசு போட்டு வாங்கினாதான் கிக்கா :)

      அப்பன் குப்பனா சுப்பனா என்று கேட்காமல் போனார்களே :)

      ஜாயின்ட் ஸ்பெசலிஸ்ட்டோ:)

      காரியத்தை மட்டுமே பார்ப்பான் ,என்னைப் போல :)

      உங்க சிபாரிசு ஏற்கப் படுமான்னு பார்ப்போம் :)

      Delete
  3. முதலில் சொன்னது நடந்தாலும் நடக்கும் ஜி...!

    ReplyDelete
    Replies
    1. குடிக்கலைன்னா ரேசன் கார்டே இல்லைஎன்பார்களோ :)

      Delete
  4. =====================================================================

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ===========================================================================


    கட்டாய குடிகாரர் திட்டம்? விற்பனை ஆகாமல் தேங்கி விட்டால் செய்தாலும் செய்வார்கள்.

    ஹா... ஹா... ஹா..

    "வெட்டி"ங் இணைக்கிறது! ஹா... ஹா... ஹா... என் இதயம் வெட்டிங்.. அதான் நனைகிறது!

    ஆம்!

    இந்தக் கதை படித்த நினைவு இருக்கிறது. இன்னொருவர் உழைப்பை மதிக்காமல்... என்று வரும். சரியா?

    தம +1

    இன்று ஏதோ தமிழ்மணம் சற்றே வேகமாய் இருப்பது போல ஒரு பாரமாய். DD யின் முயற்சிதான் காரணமோ!

    ReplyDelete
    Replies
    1. //இன்று ஏதோ தமிழ்மணம் சற்றே வேகமாய் இருப்பது போல ஒரு பாரமாய்.//

      பாரமாய் இல்லை, பிரமை!

      Delete
    2. உண்மையில் அது பிரமைதான் ,இன்னும் சரியாகவில்லை :)

      Delete
    3. குடிக்காதவர்களுக்கு புது வரி விதிக்காமல் போனால் சரிதான் :)

      கதைக் கருவை சரியாக ஞாபகம் வைத்துள்ளீர்கள் ,வாழ்த்துக்கள் ஜி :)

      Delete
  5. போகும் போக்கைப் பார்த்தால் முதல் ஜோக் வெகு விரைவில் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறேன்.
    வெல்டிங் வெட்டிங் சிரிக்க வைத்த சிரிப்பு.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் தேர்தல் வந்தால் தப்பித்தோம் :)
      திறமையான தரகர்தானே :)

      Delete
  6. 01. நல்லவேளை இன்னும் சொல்லவில்லை
    02. இதுகூட வம்பா போச்சா....
    03. அடடே கடைக்கு விளம்பரமா..
    04. இருக்கலாம்
    05. மணி ஐயா மன்னிப்பாரா....

    ReplyDelete
    Replies
    1. சொன்னாலும் ஆச்சரியப் பட வேண்டியதில்லை :)
      கொலைவெறிக் காலமா இருக்கே :)
      செய்துக் கொள்வதில் தவறில்லையே :)
      கலாம் மட்டும் விதிவிலக்கு :)
      அவர் அகராதியிலும் இல்லை என்கிறாரே :)

      Delete
  7. ஓட்டு போட முடியவில்லை ஜி ஏதும் எதிர்க்கட்சி சதியா ?

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ மல்லுக்கட்டி வோட்டைப் போட்டுள்ளீர்களே:)

      Delete
  8. அனைத்தும் டாப் கிளாஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. class என்று சரியாக சொன்னீர்கள் glass என்று சொல்லாமல் :)

      Delete
  9. சாராய மப்புல.. சாராய ராணிக்கே ஒட்டுப் போட்டால்...டாஸ்மாக் சரக்கை வாங்கியே ஆகணும்னு உத்தரவு வரும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அது கூட நடந்து விடுமோ என்று பயமாயிருக்கு :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    நல்ல காலம்... சென்னது வேண்டும் காலம் வரும்...
    உண்மைதான் அப்பன் யார் என்று கேட்பார்கள்...
    மற்றவைகளை இரசித்தேன் த.ம9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்பன் யாருன்று கேட்பது எதுக்கு ?பொண்ணு கேட்டு வரவா :)

      Delete
  11. ரசித்தேன்.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெல்டிங்காரர் ,நன்றாய் பற்ற வைத்து இருக்கிறாரா :)

      Delete