19 November 2015

ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி :)

கண்ணுக்கு குளிர்ச்சி அவள் !

ஊட்டியிலும்  இல்லை 
நகரும் பூந்தோட்டம் .....
ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி !


உறவிலேயே கட்டிக்கிட்டதால் ....!

              ''உறவிலே திருமணம் ,பின்னாலே பிரச்சினைன்னு  நான் சொல்லும் போது கேட்கலே ,இப்ப பாருங்க ...மூக்கே இல்லாமே உங்களுக்கு பிள்ளைப் பிறந்து இருக்கான் !''
            ''பின்னாலே பிரச்சினை வரும் என்றால் ஃபைல்ஸ் வரும்னு நினைச்சேன் ,முன்னாலே  இப்படி பிரச்சினை  வரும்னு நினைக்கலே ,டாக்டர் !''

'டாஸ்மாக்'கை மூடினா இவருக்கு லாபம் !

                       ''குற்ற எண்ணிக்கை குறையுங்கிற நோக்கத்திலே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
                   ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''


'மூணு வருசத்திலே டிகிரி வாங்கியது அந்த காலம் !

'                               ''உங்க பையன் மூணு வருச படிப்பை வெற்றிக்கரமா  முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலை ஏதும் தேடுறானா ?''
                  ''அட நீங்க வேற ,அவன் படிச்சு  முடிச்சது prekg ,Lkg ,Ukg தான் !''
---------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி.......

கேட்காத காதும் கேட்கும் !


-----------------------------------------------------------------------------------------------------------
                        அப்பாவுக்கு  காது  எப்படி கேட்க ஆரம்பித்தது  என்பதை, நாளைக்கு நீங்க தெரிஞ்சுக்குங்கலாமே !

21 comments:

  1. பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா...?


    இதுக்குத்தான் முன்ன...பின்ன யோச்கிக்கணுங்கிறது...!


    மாமூல் ஏட்டு மாமூலா சொல்லறதுதானே!


    K.G. இந்தப் படிப்பு என்ன விலை... இந்தப் பள்ளி சொல்லும் விலை...!


    குரங்கிலிருந்து பிறந்ததை மீண்டும் மனிதக் குரங்கிற்கு நினைவு படுத்துனீர்கள்...!

    த.ம.1








    ReplyDelete
    Replies
    1. இத்தனை நாளா ரசிச்சிக்கிட்டு இருந்தார் ,இப்போதான் பறிக்க நேரம் வந்திருக்கு :)

      இப்போ புரியுது :)

      ருசி கண்ட பூனை அப்படித்தான் சொல்லும் :)

      பலராலும் தா(வா )ங்க முடியா விலையா இருக்கே :)

      டார்வின் தத்துவம்தானே பரிணாம உண்மை :)

      Delete
  2. ஸ்கூட்டி கவிதையை ரசித்தேன். செவிடு, எப்படி சரியாயிற்று?

    ReplyDelete
    Replies
    1. கத்தியின்றி,ரத்தமின்றி நடந்த ,அந்த அதிசயத்தைக் காண நாளைவரைக் காத்திருக்கலாமே :)

      Delete
  3. ஸ்கூட்டி அழகைத் தானே :)

    ReplyDelete
  4. ஸ்கூட்டி பியூட்டி!!!!!

    ஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி...கதையின் முடிவு தெரிகின்றதே...ஏற்கனவே நீங்கள் வெளியிட்டதோ

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட்டியை விட பியூட்டி அருமை :)

      சரியாக ஊகித்து விட்டீர்களே இரண்டையும் :)

      Delete
  5. Replies
    1. மூணு வருசப் படிப்பு ,சரிதானே :)

      Delete
  6. அருமையான ஜோக்குகள்! பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஏட்டு ஏகாம்பரம் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ,சொல்லுங்க ஜி :)

      Delete
  7. 01. கவிதை சாரி கவிதா ஸூப்பர் ஜி
    02. கணக்கு தவறிடுச்சே...
    03. எல்லாம் உள் நோக்கம்தான்
    04. அடடே.. வாழ்த்துகள்
    05. நாளைக்குமா.... நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்க ரசனையே ரசனை:)
      ஆனால் மூளியானது உண்மை :)
      சுயநலமின்றி இருக்குமா ,உள் நோக்கத்தில்:)
      வெயிட்டான படிப்புதான் இல்லையா :)
      நாளை கடைசி நாள் :)

      Delete
  8. ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி!
    எரிபொருளுக்காய்
    என் பணம் இரையாகிறதே!

    ReplyDelete
    Replies
    1. இப்படி நினைப்பு வந்தால் ,உங்களுக்கு வயது கூடி விட்டது என்று அர்த்தம் :)

      Delete
  9. ரசித்தேன். அப்பாவுக்குக் காது கேட்கும் வைபவம் நல்ல சஸ்பென்ஸ்! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இன்று, அந்த வைபவத்துக்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    இரசிக்க வைக்கும் நகைச்சுவை.. வாழ்த்துக்கள் ஜி த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்பாவின் காதுநாளை கேட்க ஆரம்பித்து விடும் ,வந்து நல்லதா நாலு வார்த்தைச் சொல்லுங்க ஜி :)

      Delete
  11. ஸ்கூட்டியில் ஸ்வீட்டி..... ம்ம்ம். நடத்துங்க!

    காது என்ன ஆச்சு எனத் தெரிந்து கொள்ள இன்னும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தொடர்வதை எப்படி கவனிக்காமல் விட்டேனோ தெரியவில்லை :)

      Delete