15 November 2015

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா :)

 சொல்வது எளிது ,செய்வது அரிது !

          ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
         ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''

கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்?

              ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ? ''
             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''



திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் ?

             ''திருப்பத்தூர்தான்  அவர் சர்வீசிலே உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''
                    ''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா ?

கற்பழிக்கப் படும் போது ...
அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு பெண்கேட்டால்...ஒரே  ஒரு வார்த்தைச் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார்  இப்போது , கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...
இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...
'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக' அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...
உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?
இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...
பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...
பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !

24 comments:

  1. சிங்கம் ஒன்னா வந்தா பரவாயில்லை... சிங்கம் ரெண்டுல்ல வருதுன்னுல்ல சொல்றாங்க... ! அதையும் பாத்துப் பிடிச்சு வலையில அடைக்க முடியுமான்னு பாப்போம்...! கொசு மாதரி கூட்டமா வந்தா... ? டெங்குல்ல வருது... இதுக்கு சிங்கமே பரவாயில்லை... ம்...ம்...சிங்கத்த அதன் குகையிலயே சந்திக்க வேண்டியதுதான்...விதி வலியது!


    ‘அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம்’ என்று அலிபாபா 40 திருடர்கள் குகையை திறக்கும் மந்திரச்சொல்லை சொல்லி சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்திடலாமே... ! இவர்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க கொஞ்ச யோசிங்க!''


    திருப்பத்தூரான் பாடல்களைக் கேட்டிக்கிட்டு கம்பி எண்ண வேண்டியதுதானே...! மாட்டிக்கிட்டாரு...மச்சான் மாட்டிக்கிட்டாரு...!


    ‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும்’ ரெண்டுல ஒன்னத் தொடுன்னு சொன்னதால ரெண்டாவதத் தொட்டுட்டாச்சு... துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தையாம்...!

    த.ம.1






    ReplyDelete
    Replies
    1. சிங்கத்த அதன் குகையிலயே சந்திக்க வேண்டியதுதான்..ஆஹா ,இதுவல்லவா ஆண் சிங்கத்துக்கு அழகு :)
      டாக்டர் பட்டம் மட்டும் போதாது ,துணைக்கு நாலு நர்ஸும் வேண்டுமென்றால் என்ன செய்வது :)
      திரும்ப பழைய வாழ்க்கை வாழ முடியாத படி மாட்டிக்கிட்டாரு :)
      அடுத்தவரை தூக்கு மேடைக்கு அனுப்பித்தானே இவருக்கு பழக்கம்,இப்ப இவரேவா :)

      Delete
  2. திருப்பத்தூர் திருப்பம் இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாத திருப்பம்தானே :)

      Delete
  3. 1. அப்படிச் சொல்லுங்க ஜி...!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிங்கத்தை அவர் அப்படி அசிங்கப் படுத்துவதை என்னால் பொறுத்துக் கோல முடியவில்லை :)

      Delete
  4. ஜோக்காளியின் பதிவுகளால் பலர் சீக்காளியாகாமல் இருக்கிறோம்....
    சிரிச்சுத்தான்

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்தேன் ,தமிழ் நாட்டில் சீக்காளிகள் எண்ணிக்கை கணிசமாய் குறைய காரணம் ,என் பதிவுகள் என்று :)
      டாஸ்மாக் அடிமைகள் பெருக காரணம்,நிச்சயமாய் நானில்லை :)

      Delete
  5. பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல
    நாவடக்கமும் வரவேண்டும் என்பது
    உண்மையே!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொன்னா ,பொறாமையில் சொல்வதாய் சொல்கிறார்களே :)

      Delete
  6. 01. பிடிபட்டவன் செத்தான் பாவம்
    02. டாக்டரையும் திருடர்களையும் இணைக்கும் முயற்சியா ?
    03. திருப்பத்தூர் தூர் வாற விட்டுருச்சே...
    04. சிலபேர் இப்படித்தான் தலைகால் புரியமல் பேசுறாங்கே.... ஜி

    ReplyDelete
    Replies
    1. செத்தாண்டா சேகருன்னு சொல்லிக்க வேண்டியதுதான் :)
      ஒருவர் வசூலை கேட்டு பிடுங்கிறார்.இன்னொருவர் ....:)
      வாரினால் நல்லதுதானே :)
      மெத்தப் படித்த சுத்தப் பைத்தியங்களோ :)

      Delete
  7. பாதையில் இருப்பவர்கள் இப்படி பேசுவது,
    பதவியில் இருக்கிறோம்; சமாளிப்போம் என்கிற தைரியம்தான்.

    ReplyDelete
    Replies
    1. பதவி என்ன நிரந்தரமா :)

      Delete
  8. ஹாஹாஹா! கலக்கல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இப்போ கலக்கி கொண்டிருப்பவர் வசூல் ராஜாதான் :)

      Delete
  9. பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !
    உண்மை
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஜனநாயக நாட்டில் பேசக் கூட உரிமை இல்லையா என்று வேறு சொல்வார்கள் :)

      Delete
  10. பணிவும் நாவடக்கமும் இருந்த இல்லாமல் பறந்தோடிவிட்டதால்.... இப்படியான நரம்பில்லா நாக்கு இப்படி அங்குமிங்கும் அலை பாய்கிறத......

    ReplyDelete
    Replies
    1. அலைபாயும் நாக்கு அதன் பலனை அனுபவிக்கும் :)

      Delete
  11. வணக்கம்
    ஜி
    அருமையாக உள்ளது இரசித்தேன் ஜி
    த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கொசுவுக்கு பயந்து வலையில் படுப்பது ,அருமைதானா :)

      Delete
  12. Replies
    1. திருப்பத்தூரானைத் தானே :)

      Delete