23 November 2015

மனைவியின் குரலுக்கு மரியாதை:)

  மகளின் வருத்தம் நியாயம்தானே ?       
      
            ''இங்கிலீஷ்  தெரியலைன்னா சும்மா இருங்கப்பா !''
        
           ''நான் என்னா தப்பா  சொல்லிட்டேன் ?''

          '' நான் அபார்ட்மெண்டுக்கு குடி போனதை ,அபார்சனுக்கு 
போயிட்டதா சொல்லி இருக்கீங்களே !''

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்கு கேடு ?

               ''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
            ''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

தலைவருக்கு பிடித்த ராகம் !

           ''தலைவரை பேட்டி கண்ட நிருபர்கள் எல்லாம் எதுக்கு சிரிக்கிறாங்க ?''
              
          'ராகத்தில்  தனக்கு அதிகம் பிடித்தது செஞ் 'சுருட்டி'ன்னு  சொன்னாராம் !''


தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி!

பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம் 
பிறகு சவமாய் போவதால்!

 மனைவியின் குரலுக்கு மரியாதை!
             ''என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே இருந்து நீக்கிட்டாங்க!''

            ''நம்பவே முடியலேயே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம் இருக்கா?''




14 comments:

  1. ராகமும் மரியாதையும் ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. ராக மரியாதை என்று சொல்லலாமா :)

      Delete
  2. பழச நெனச்சு சொல்லிட்டேம்மா...ஐ ஆம் வெரி சரிம்மா...!

    அதுக்காக நீ கண்ணத் திறக்கணுமா...? சதிலீலாவதியா இருக்கப் போறாங்க...!


    “செஞ்‘சு’ சுருட்டி” ட்டுப் போகட்டும்...!


    நீங்க ஜனத்தொகைய பெருக்கப் பாக்குறீங்க... டாக்டர்... நாட்டோட ஜனத்தொகைய குறைக்கணுமுன்னு நெனைக்கிறாரு...!


    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... வா ரெண்டு பேரும் சேர்ந்து நடுக்கத்த குறைப்போம்...!

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நடந்தது தானா :)

      இருந்து விட்டு போகட்டுமே:)

      சுருட்டச் சொல்லியா தரணும்:)

      ஜெயிக்கப் போறது யாரு :)

      நடுக்கமில்லாக் குரல் என்றால் இன்னும் எப்படியிருக்கும் :)

      Delete
  3. ஹா.... ஹா.... ஹா....

    அடப்பாவி மக்கா...

    ஹா... ஹா... ஹா.. அப்போ 'பெட்டி' ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லே!

    தத்துவம்!

    நடுங்க வைக்கும் குரல் நடுங்கியதா... குளிரோ!

    தம சரியாகி விட்டதோ... வேகமாக வோட்டுப் போட முடிகிறதே..

    ReplyDelete
    Replies
    1. பெட்டி பொருத்தம் என்றாலும் திருத்தியாச்சு :)
      குளிர் காய்ச்சல் வர வைத்த குரலே குளிரில் நடுங்குமா :)
      தம ,என்னமோ நடக்குது ,மர்மமாய் இருக்குது :)

      Delete
  4. Replies
    1. மருமகள் சொல்வதை ரசிக்க முடியுதா :)

      Delete
  5. மகளின் வருத்தம் நியாயம்தானே ? -----நியாயம்தான்...

    ReplyDelete
    Replies
    1. மகளின் மட்டுமல்ல ,மருமகளின் வருத்தமும் நியாயமே :)

      Delete
  6. ஹாஹாஹா! அட்டகாசமான சிரிப்புக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்க சிரிப்பிலேயும் நடுக்கம் தெரியுதே :)

      Delete
  7. 01. ஹாஹாஹா ஸூப்பர் ஜி
    02. இந்தப்பாசம் கடைசிவரை வேணும்
    03. பொருத்தமானதே....
    04. அடடே ஸூப்பர்
    05. அனுபவசாலிக்குத் தெரியும்

    ReplyDelete
  8. வணக்கம்
    ஜி
    எல்லாம் அருமை இரசித்தேன் அதில் இராகம் செம கிட்......த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete