5 November 2015

தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு :)

 இதை கிழவிகூட செய்வாளே :)                 
               ''இனிமே ,உங்க பொண்ணு ரெண்டே நிமிஷத்தில் சமைத்து விடுவாள்னு எப்படி உறுதியா சொல்றீங்க ?''
                  ''அதான் ,அந்த நூடுல்ஸ் மீதான தடையை நீக்கிட்டாங்களாமே!''

இவனுக்கு எதுக்கு செல்போன் ?
              ''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு  தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
             ''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே ''
 மருமகளின் 'பன்றி ' காணிக்கை ?
            ''பன்றி உருவம் பொறிச்ச தங்க காசை , நன்றி காணிக்கையா போடுறீயே ,பன்றிக்காய்ச்சல்  யாருக்கு வந்தது ?''
           
            '' போய் சேர்ந்துவிட்ட என் மாமியாருக்குத்தான் !''

தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு ?

தங்கம் கிராமுக்கு 137ரூபாய் குறைந்த போதிலும் ...
இவ்வாண்டு தீபாவளி காலத்தில் 38சதவீதம் விற்பனை சரிந்துள்ளது ...
இதற்கு காரணம் ...
பணப் பற்றாக்குறை ,பணவீக்கம் அதிகரிப்பு ,விலைவாசி உயர்வு ஆகியவைகளாம்...
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கும் வரவிடாமல் தடுக்கிறது ...
டாஸ்மாக் மதுவின் அமோக விற்பனை !
இவ்வாண்டு விற்பனை ,இலக்கை தாண்டி 
ரூபாய் 154கோடியாக உயர்ந்துள்ளதாம் ...
இது கடந்த ஆண்டைவிட 22சதவீத உயர்வாம் ...
கின்னஸ் உலக சாதனையாக இருக்கக் கூடும் ...
தங்கம் விற்பனை சரிகிறது ,டாஸ்மாக் விற்பனை கூடுகிறது என்றால் புரிகிறது ...
தமிழக மக்களிடம் தங்க வடிவில் சேமிப்பாய் மாற வேண்டிய பணம்தான் ...
டாஸ்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில்  நிரம்பி வழிகிறது !
  அணை நீர்  மட்டம்னு சொல்லப் படாது !
          ''உப்பு கரிச்சாலும் கடல்நீர் கடல்நீர்தான்னு
                                    
  ஏன்  சொல்றே ?
                         
             ''கடல்நீர் மட்டம்னு யாராவது சொல்றாங்களா!''


38 comments:

  1. ஆஹா செல்போன் தொலைந்து போனது அருமை..

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,தொலைந்து போனது அவர் செல்போன்தானே :)

      Delete
  2. வெந்த நூடுல்ஸ்ல வெந்நீர ஊத்தாதிங்க...! சும்மா அப்படியே சாப்புடுங்க... நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்...!


    பரவாயில்ல... இன்னொரு விளம்பரம் கொடுங்கன்னு...நாளிதழ்ல இருந்து கேக்கிறாங்க... செல்போன் திருடனே பரவாயில்லை...!


    மாமியார் அதான் ‘டெங்கு’க் கொசுவா வந்துட்டாங்களர்...? என்ன அழித்த ஒன்ன... ஒரு வழி பண்ணமாம போறதில்லன்னு... மறஞ்சு இருகிறாங்கதப் பாரு...!


    ஒருவேளை ஹெல்மெட் திருடனுக்குப் பயந்துதான் விற்பனை சரிந்து இருக்குமோ...?
    டாஸ்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில் நிரம்பி வழிகிறது என்பது என்னவோ உண்மைதான்... அதுக்காக எந்தப் பாட்டும் பாட முடியாதில்ல... படாதபாடு பட்டுத்தான் ஆகனும்!


    கடல்நீர் மட்டம்னு யாராவது சொன்னால் ‘சுனாமியா’ பொங்கி வந்து கொல்றதுக்கா...?

    த.ம.1


    ReplyDelete
    Replies
    1. திடீர்னு தடை என்கிறாங்க,இப்போ சரியாய் போச்சுங்கிறாங்க,எனனதான் நடக்குது இங்கே :)

      திருடன் கிட்டேயே சரண்டர் ஆகிவிடலாமா :)

      இங்கேயும் ஈ கதையா :)

      பாட முடியாது ,திண்டாட்டம் ஆடலாம் :)

      சொல்றதுக்கு முன்னாடியே சுனாமி வந்திடுச்சே :)

      Delete
  3. நூடுல்ஸை இந்த ளவு நம்பியிருக்கும் குடும்பமா! அட! ஆனால் தடையை எல்லா இடங்களிலும் நீக்கவில்லை போயிருக்கே!

    ஆஹா.... புத்திசாலி.

    ஆஹா... என்னவொரு மருமகள்!

    அடுத்த ரெண்டுக்கும் என் பதில் "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...."

    :)))))

    ReplyDelete
    Replies
    1. புரிந்துணர்வுக்கு வர வேண்டாமா :)

      அதான் ,இப்படி காரியம் செய்திருக்கிறான் :)

      காணிக்கை பிழைத்தால் அல்லவா செய்யணும் :)

      இத்தனை ம்ம்ம்ம்ம்ம் மா :)

      Delete
  4. *மொத்த குடும்பத்துக்கும் நூடுல்ஸா? விளங்குமா? :)
    *நம்பர எப்படி தொ. முடியும் மறக்கதானே முடியும் :)
    *ம ம வா :)
    *பிறந்த குழந்தைகள்தான் தங்கத்துக்கு ஆ படாது ஜி :)
    *குட் :)

    ReplyDelete
    Replies
    1. அந்த பொண்ணுக்கு து மட்டும்தானே செய்யத் தெரியும் :)
      கொடுத்து தொலைக்க முடியாதா :)
      ஆமாம் ,மருமகள் மாமியாருக்கு செய்யும் மரியாதை :)
      அம்மாவுக்கு இருக்கே :)
      குடிநீர் ஆகப்போவதை மட்டம்னு சொல்லக்கூடாது தானே:)

      Delete
  5. இப்போதெல்லாம், உங்கள் பதிவினில், ஜோக்குகளுக்கு நடுவே அடிக்கடி குறுஞ்செய்திகளைப் போடும் உங்கள் புதுமையை ரசித்தேன். தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தொடரத்தான் நினைக்கிறேன் :)

      Delete
  6. தங்கம் தமிழகப் பெண்களிற்கு என்பது
    மாற்றப் பட வேண்டும்
    உலகப் பெண்களிற்கு என்று.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்த விஷயம் ,தமிழ்நாடு டாஸ்மாக் தொடர்பு உடையதாச்சே :)

      Delete
  7. நூடுல்ஸ் எல்லா இடத்துலயும் வந்துருச்சாஅ மீண்டும்? ம்ம்

    செல்ஃபோன் நம்பர் அஹஹஹஹ்

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. தடை என்றார்கள் ,நடுவில் என்ன நடந்ததோ ?இப்போது 'மீண்டு 'ம் வந்து விட்டது :)

      Delete
  8. அனைத்தும் சி(ரி)றப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க 2in1 கருத்துரையை ரசித்தேன் :)

      Delete
  9. என்ன ஆச்சு ஜி? நாங்கள் உங்கள் தளத்திற்குப் புதியவர்கள் அல்லவே....!!!!! ஆனால் உங்கள் தளம் என்னவோ உள்ளே அனுமதிக்காமல் நாங்கள் ரோபோ அல்ல என்று நிரூபிக்கச் சொல்லியது......அஹ்ஹஹஹ ஹும் செக்கிங்க் செக்யூரிட்டி போட்டுட்டீங்களா ஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. நான் புதிதாய் மாற்றம் எதுவும் செய்யவில்லை ,நேற்று, வழிப்போக்கன் தளத்தில் நுழைய விடாமல் என்னைத் தடுத்ததும் அதே ரோபோதான் !அந்த ரோபோவை கணக்கில் எடுக்காமல் உள்ளே நுழையுங்கள் ,வரவேற்கிறேன் :)

      Delete
  10. 01. இதை நம்பலாம்தான்..
    02. அடடே அறிவாளி
    03. இது எந்த நாட்டு காசு ஜி
    04. நாடும் நாட்டு மக்களும் வளம் பெறட்டும் டும் டும் டும்
    05. உண்மையான வார்த்தை

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நிமிஷம் என்பதையா :)
      அறிவாளிக்கு செல் கிடைக்காதா :)
      மருமகள் வேண்டுதலுக்கு ஸ்பெசலாய் தயார் செய்தது :)
      மூடத்தனம் வளராமல் போனால் சரி :)
      மட்டம் என்பதுதானே :)

      Delete
  11. ஹா ஹா... நான் தங்கள் தளத்திருக்கு புதியவன் அல்ல அய்யா ஆனால் புதியவன்... ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மலைச் சித்தரே ,உங்களை மறக்க முடியுமா ?நாம் சர்ச் முன்னால் வைத்த மரக்கன்று செழிப்பாய் வளர்ந்து விட்டதா :)

      Delete
  12. Replies
    1. ஆனால் ,தமிழ் மணம் ரைட்டா இருக்கிற மாதிரி தெரியலே ,அப் டேட் ஆவதில் தாமதமாகிறதே ,கவனித்தீர்களா ஜி :)

      Delete
  13. செல் ஃபோன் ஜோக் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. இவன் ,நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப்பு வைப்பான் போலிருக்கே :)

      Delete
  14. கஜானா நிரம்பி வழிகிறது இப்போது...
    பாட்டு பாடினால், சிறைச்சாலை நி. வழியும் பிற்பாடு!

    ReplyDelete
    Replies
    1. 'கோவன்'களின் பாட்டை நிறுத்த சிறைச் சாலைகளால் முடியாது போலிருக்கே :)

      Delete
  15. சம்பாரிக்கும் காசை மட்டுமல்லாது கழுத்துகைகளில் கிடக்கும் தங்கமும் போகி இருக்கிற இடம் எதுவென்று சின்ன குழந்த கூட சொல்லுமே....

    ReplyDelete
    Replies
    1. அடடா ,இதென்ன முதலுக்கே மோசமா இருக்கே :)

      Delete
  16. நூடுல்ஸ், கடல் நிஹிர் மட்டம், பன்றிக் காய்ச்சல், டாஸ்மார்க் என எல்லமே ரசிக்க வைத்தது ஜி.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் தொடர்கதையை படிக்கணும்னு நினைச்சாலும் நேரம் கிடைக்க மாட்டேங்குதே ,சாரி குமார் ஜி :)

      Delete
  17. அனைத்தும் அருமை. ரசிக்க வைத்தீர்கள்

    ReplyDelete
    Replies
    1. செல் தொலைத்த அந்த அறிவாளியை நீங்கள் அறிவீர்களா :)

      Delete
  18. செல்போன் நன்று!

    ReplyDelete
    Replies
    1. தொலைக்காமல் இருக்கும் வரை :)

      Delete
  19. அனைத்தும் ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. மருமகளின் 'பன்றி ' காணிக்கை யையும் ரசிக்க முடிந்ததா :)

      Delete