4 November 2015

இது, ஸ்வேதா மேனனுக்கு அன்று வந்த சோதனை :)

  மெண்டல்களா  இவர்கள் :)
                   ''தலையிலே ஏண்டா ரப்பரை வைத்து தேய்ச்சிகிட்டு  இருக்கே ?""
                   ''தேவை இல்லாதவைகளை அழிச்சி கிட்டுருக்கேண்டா !''


படிச்சிட்டு தண்டவாளத்தில் தலையைக் கொடுக்காதீங்க !           
             ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
             ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''

ஜாக்கிங் நல்லது வாக்கிங்கை விட !

               '' வாக்கிங் பதிலா ஜாக்கிங் போகணும்னு ஏன் சொல்றீங்க டாக்டர் ?''
             ''நீங்க தானே  'பொடி'நடை நடந்தாலே தும்மலா வருதுன்னு சொன்னீங்க !''

நடிகை ஸ்வேதா மேனனுக்கு அன்று வந்த சோதனை !

களிமண்ணு என்ற மலையாளப் படத்தில் ...
தன் உண்மையான பிரசவக்காட்சியை காட்டிய ஸ்வேதா மேனனை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள் ...
எந்த நடிகையுமே செய்யத் தயங்கும் கேரக்டரை தயங்காமல் செய்த அவரிடமே ...
பொது இடத்தில் செய்யக்கூடாத காரியத்தை 
தயங்காமல் செய்திருக்கிறார் ஒரு   M P...
கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி விழாவில் VIPயாக கலந்து கொண்டார் காங்கிரஸ் MP...
அவர் அருகில் அமர்ந்து இருந்தார்  ஸ்வேதா மேனன்...
படகுப் போட்டியாளர்களின் துடுப்பு போடும் கைகளின் அசைவை எல்லாரும் ரசித்துக் கொண்டிருக்க ...
இவரோ ,நடிகையின் இடுப்பில்  கைகளால் விளையாடி இருக்கிறார் ...
எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்வேதா மேனன் தேவை இல்லாமல் நெளிவதும் ,MPயின் 'அன்பான 'தொடுதலும் பதிவாகி உள்ளதாம் ...
எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற கதையாக ...
அத்து மீறல் எதையும் செய்யவில்லை ,எனக்கெதிரான சதித் திட்டம் இது என்று MP உளறியுள்ளார் ...
நடிகர் சங்கத் தலைவரான இன்னோசென்டிடம் நடந்ததை விவரித்து உள்ளார் அந்த நடிகை ...
நான் ஒரு 'இன்னொசென்ட் 'என்று  MP வியாக்கியானம்  செய்வார் என எதிர்ப்பார்க்கலாம் !
நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலேயே BF பார்ப்பதும் ...
படுக்கையின்  பணத்தை அடுக்கி புரள்வதும் ...
பொது இடத்திலேயே இப்படி 'கடமை'யாற்றுவதைப் பார்க்கும் போது  நிச்சயமாய் தெரிகிறது ...
நம்ம நாடு நல்லா வரும்னு  !
கரண்ட் ஆறு மாசம் ,காஸ் ஆறு மாசமா?

                    

          ''கரண்ட்டும் பற்றாக்குறை, சிலிண்டர்  கேசும் பற்றாக்குறை ,சமையலை எப்படி பண்றதுங்க ? 

                 
                        ''காடுஆறுமாசம் ,நாடுஆறுமாசம்னு  சொல்றமாதிரி கரெண்ட் ஆறுமாசம் ,காஸ் ஆறு மாசம்னு மாத்திக்க வேண்டியதுதான் !''

















28 comments:

  1. அழிசாதிப் பயங்கிறது இவன்தானோ...? கோவிச்சிக்காதிங்க தல...சாப்பிட வாங்க... அட...உங்களத்தாங்க...!


    இந்தப் பிளாட்பார்ம் கிடைக்கிலைன்னா நா அந்த பிளாட்ட வாங்கி முன்னேறி இருக்க முடியாது...!


    ‘ஒங்கள எனக்கு ரொம்ப பிடிக்கிது டாக்டர்... எது பேசினாலும் பொடி வச்சுப் பேசுறீங்க...! பொடி குடுங்க டாக்டர்...! நானும் பொடி வச்சு பேசுறேன்...!’
    ‘பொடிப் புத்திய காண்பிச்சிட்டியே...!’
    ‘போங்க டாக்டர் எப்பப் பாத்தாலும் சோக்காவே பேசுறீஙக...!’


    நாடு... அதை நாடு... அதை நாடாவிட்டால் ஏது......? அப்ப நம்ப நாடு முன்னேறிய நாடுன்னு சொல்லுங்க...! இதெல்லாம் நடிப்புதான்... தப்பா நெனச்சுக்காதிங்க...!


    காடு வா...வாங்கிது...! வீடு போ போங்கிது... ம்... போக வேண்டியதுதான்...!

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டால் என்ன சாப்பிடுவது :)

      சரியாய் சொன்னீங்க ,இல்லேன்னா கேர் ஆப் பிளாட்பார்ம்னு சொல்லி இருப்பாங்க :)

      பொடியிலே இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா :)

      இந்த நடிப்புக்கு பத்ம அவார்டிலே எதைக் கொடுக்கலாம் :)

      போகணும்னுதான் தோணுது ,எங்கே போகணும்னு தெரியலியே :)

      Delete
  2. Replies
    1. இந்த டஸ்டர் ரப்பர், உங்க ஸ்கூல் பக்கத்திலே கிடைக்குதா :)

      Delete
  3. ப்ளாட்பார்ம் பணக்காரர் நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பணக்காரர் இதை கேள்வி பட்டால் ரயிலில் ஏறவே மாட்டார் :)

      Delete
  4. தலையில் தேவையில்லாததை அளிக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா..?
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. இருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும் :)

      Delete
  5. Replies
    1. அந்த mpக்கு ஸ்வேதா , சைட்டா ஜி :)

      Delete
  6. *தேவையானது எது தேவையில்லாதது எது எப்படி கண்டுபிடிக்க ஜி :)
    *பிடிச்சு நிப்பாட்டிடுவாறா சும்ம? :)
    *:):):)
    *இன்னொசென்ட் னா என்ன? :)
    *உண்மைதானே :)

    ReplyDelete
    Replies
    1. தேவை எதுன்னு சொல்ல முடியாட்டியும் ,தேவை இல்லாததை சொல்லலாம் ..அது என் மொக்கைப் பதிவுகள்தான் :)
      சினிமா நாயகன் செய்தா கைதட்டி ரசிப்பீங்க :)
      பொடி விசயமதான்:)
      1.அப்பாவி , 2.இன்னோசென்ட்என்பது மலையாள நடிகரின் பெயர் :)
      உண்டு ஆகணுமே ,வேற வழி:)

      Delete
  7. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தும்மலையும் ரசிக்க முடியுதா :)

      Delete
  8. தலையில் எழுதி இருக்கிறது என்று நினைப்பதே ஒரு மெண்டல் குணம்தானே நீங்கள் :அந்த “ ப்லாட்ஃபார்ம் பற்றிக்கூறுகிறீர்களா கரெண்டும் காசும் வரும் முன் என்ன செய்தார்கள்? ஸ்வேதா மேனோன் பற்றிய இன்னொரு பதிவு.?

    ReplyDelete
    Replies
    1. தலைஎழுத்தை சொல்லலே ,நினைவுகளை அழித்தேன்:)
      நீங்க வேறென்ன நினைச்சீங்க :)
      குழல் ஊதினார்கள்:)
      நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு :)

      Delete
  9. பிளாட்பார்முக்கு வந்தாகணும்! ஹாஹாஹா! சூப்பர் ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. மனசு இஷ்டப் பட்டு வந்துதானே ஆகணும் :)

      Delete
  10. ரசித்தேன்...த்தேன்....தேன்....ன்...

    ReplyDelete
    Replies
    1. கடைசியில் ....ன் னும் காணாமல் போனதை நானும் ரசித்தேன் :)

      Delete
  11. 01. இந்த ரப்பர் எங்கு கிடைக்கும் ஜி
    02. ரயில்வே மந்திரிக்கும் இதே நிலைதான் போலயே...
    03. பொடி நடை ஸூப்பர் ஜி
    04. நல்லாருக்கு.... நல்லாருக்கு...
    05. சாப்பாடு ஆறு மாசம், கூப்பாடு ஆறு மாசம்.

    ReplyDelete
    Replies
    1. ரப்பருக்கு இப்ப தேவை என்னயிருக்கு :)
      அவர் ஏன் ரயில் ஏறப் போகிறார் :)
      துள்ளல் நடை போட்டவர் இப்போ தும்மல் நடை போடுகிறார் :)
      எது அவரோட சேட்டையா:)
      கூப்பாடு போடவாவது சாப்பாடு வேணுமே :)

      Delete
  12. பொடி நடை
    - என்கிற வார்த்தையைப் படித்தாலும் பார்த்தாலும் எனக்கு
    தும்மல் வருதே, என்ன செய்யலாம், டாக்டர்?

    ReplyDelete
    Replies
    1. படிக்கிறதை விட்டுருங்க :)

      Delete
  13. நம்ம நாடு ரெம்ப ரெம்ப நல்லா போயிகிட்டு இருக்கு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே வல்லரசு ஆகிடும் ,அப்படித்தானே :)

      Delete
  14. Replies
    1. 'பொடி' நடை நடந்தால் தும்மல் வருமா ,ஜி ?

      Delete