24 November 2015

புதிரான கவிதையா அவள்:)



  எல்லோருக்கும் வராது ஞானம் !    

               ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
                ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''


பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !

           ''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு 

முன்னாடியே ஏன் சொல்லலே ?''
              
             ''சேலையை  கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி 

இருக்கும்ன்னு சொன்னேனே !''



மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

              ''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்கலைன்னு கிண்டல் 

பண்றாரா ,எப்படிடீ?''

              ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

புதிரான கவிதையா அவள்?

பாரசீக கவிதையாய்...

 என் விழிகளில் தெரிகிறாய் நீ !

உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 

கவிதை எனக்கு  புரியும் ?

16 comments:

  1. புலன் அடக்கம் ஜென்ம நாசமுன்னு சொல்லுங்க...! புலால தேடிப் போக வேண்டியதுதான்...!


    இதுக்குப் போயி கவலைப்படுறீங்களே... ஒங்களக் கட்டுனதுக்கு அப்புறம் துரும்பாயிடும்... இரும்பு வியபாரிதானே நீங்க... குண்டு கல்யாணிகிட்ட கரும்பா பேசி தாவணிக்கனவு காணுங்கள்...!


    அவர ரூபா கொடுத்து வாங்கி இருக்கேன்... கொஞ்ச நஞ்சமா எங்க அப்பாட்ட வாங்கி இருக்காரு... மனுசன்... நல்லா அவதிப் படட்டும்... ரூபாவதி யார்ன்னு காட்டுறேன்...!


    தமிழே எனக்குப் படிக்கத் தெரியாது... மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்ல... மூதேவி... பாரசீகம் எனக்கெப்படி தெரியும்...? உனக்கெப்படித் தெரியும்...? சும்ம கதை விடாதே...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. அப்படியொரு ரூட் இருக்கா :)

      கனவு காணும் வாழ்க்கை தானா :)

      அப்படின்னா அவதிப் படட்டும் :)

      பாரசீகம் தெரியாது ,பார்சி பொண்ணையாவது தெரியுமா :)

      Delete
  2. Replies
    1. தரகர் சொன்னதைத்தானே :)

      Delete
  3. 01. கடைசியில் அதுதான் வந்துச்சா ?
    02. சூட்சுமம் புரிஞ்சுக்கிறணும்.
    03. ரூபாய் எப்படி அவதியாகும் ?
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஏன் முதல்லேயே வந்து இருக்கணுமா:)

      பெரிய கம்ப சூட்சுமம் :)

      அதை சமபாதிக்கத்தான் :)

      உங்களுக்கும் புரியல போலிருக்கே :)

      Delete
  4. ரூப அவதியை அதிகம் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைக்கும் அவதிதானே :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    முதலாவது நகைச்சுவை தனிச் சிறப்பு ...ஜி... மற்றவைகளை இரசித்தேன்... வாழ்த்துக்கள் ஜி த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஐம்பதிலும் ஆம்புலன்ஸ் வருமெங்கிறாரோ :)

      Delete
  6. அய்யோ...''ஐம்புலனை அடக்கினால்..ஆம்புலன்ஸ்தான் வருமா....!!!!

    ReplyDelete
    Replies
    1. வராவிட்டால்தான் அதிசயம் :)

      Delete
  7. விழியின் பார்வைக்கு
    மொழி ஏது?

    ReplyDelete
    Replies
    1. இல்லைதான் ,ஓசையின்றி பேசும் மொழியாச்சே :)

      Delete
  8. ரசித்தேன் ஜி.
    கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. கலக்கலாய் ரசித்தமைக்கு நன்றி :)

      Delete