1 March 2016

ஆசை மட்டுமா நூறு வகை :)

தலைவர் மப்பிலே உளறிட்டாரோ :)                

                ''மறைந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன  பேசிட்டார்னு ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''

              ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 
                                         
ஆசை மட்டுமா நூறு வகை :)

            ''முழு உடல் பரிசோதனை செய்து  ஒரு மாசமாச்சே , உங்களுக்கு   என்ன நோய்னு  இன்னுமா கண்டுபிடிக்க முடியலே ?''
            ''என்ன நோய் இல்லைன்னுதான் கண்டுபிடிக்க முடியலையாம் !''
பிணமும் தேடுமோ துணை (வி )யை :)
           ''உங்க  வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக்கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
        ''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
மீண்டும் வருமா பொற்காலம் :)
முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க 
இது வியா 'பாரி 'களின்  காலம் !


நன்றி ...பட உதவி ..வினவு .காம்

14 comments:

  1. உண்மையைச் சொல்ல விடமாட்டீங்களே... ,இன்னும் கொஞ்சம் ஊத்திட்டு வந்து உளறாமப் பேசுறேன்...! அப்பத்தான் ஒங்களுக்கு ஒன்னும் புரியாது...! ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது...!

    உடல் பரிசோதனை செய்ற மெஷின் ஒரு மாசமா ரிப்பேருங்கிற விஷயத்த இப்பத்தான் கண்டு பிடிச்சாங்களாம்...!

    வீதி வரைதான் மனைவி... நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டியதில்லை...உங்க வீ ட்டுக்காரரோட தலைவிதிய மாத்த முடியாதில்ல... கவலப்படாதிங்க... நா இருக்கேன்...!

    அன்றைக்கு முல்லைக்குத் தேர் கொடுத்ததாலதான் இன்றைக்கு இந்த விலைவாசி ஏற்றம்... இதுக்குத்தான் ஆத்தில போட்டாலும் அளந்து போடணுங்கிறது...!

    த.ம.1



    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களே :)

      காசு பறிக்கத்தான் பார்வைக்கு வச்சுருக்காங்களா :)

      டாக்டர் ,நீங்க ஆபரேசன் செய்யலைன்னா அவர் ஏன் சாகப் போறார் :)

      மகராஜன்கிட்டே இருக்கு கொடுத்தான் ,நாம எங்கே போறது :)

      Delete
  2. சூப்பர் ஜி சூப்பர் உண்மையை அழகாக உளறிவிட்டீர் ஐயா.உண்மையே இன்றை காலம் வியாபாரிகள் காலம் தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உற்பத்தி பண்றவன் தெருவில் நிற்கிறான் ,மக்களோ வாங்க முடியவில்லை ,இடையில் இருப்பவன் நல்லா ஆட்டைப் போடுறான் :)

      Delete
  3. ஹா.... ஹா... ஹா... நிஜமாகவே இப்படிப் பேசுபவர்கள் இருக்கிறார்கள்தான்.

    ஹா... ஹா... ஹா... அட, செக்கிரமா எல்லாவற்றுக்கும் ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சுட்டு அதைத் தேட வேண்டியதுதானே!

    என்னவொரு பயம்!

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. தரம் அறியாமல் பேசித் தாழ்த்திக் 'கொல்'பவர்கள்:)

      எங்கே இருந்து ஆரம்பிப்பது என்றுதான் புரியவில்லை :)

      இருக்கத்தானே செய்யும் ,அவருக்கு தனியாக சென்று பழக்கம் இல்லையே :)

      வியாபார உலகம் ,அப்படித்தானே :)

      Delete
  4. Replies
    1. என்றாலும் ,வீதி வரை வரச் சம்மதம் :)

      Delete
  5. சனி பொணம் தனியா போகாது,,,

    நல்லா இருக்கு ஜீ,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக நாம துணையாய் போக முடியுமா :)

      Delete
  6. 01. மேதைகள் போதையில் பேசும் பொழுது இப்படித்தான்
    02. அம்பூட்டா....ஆஆஆஆஆஆஆஆ
    03. பாவம் வாழும் போதும் இம்சை....
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. இறந்த தலைவருக்கு , இது தெரிந்தால் நொந்து இருப்பார் :)
      தண்ணியிலேயே மிதந்தா அம்புட்டும் வரத்தானே செய்யும் :)
      இவர் செத்தும் கெடுக்கும் சீதக்காதியோ:)
      மனிதாபிமானம் இல்லாத வியாபாரம் ஆகிப் போச்சே :)

      Delete
  7. ஆசை மட்டுமா நூறு வகையாக இருக்கும்போது..நோய் மட்டும் ஆயிரம் வகையாக இருக்குமே.....

    ReplyDelete
    Replies
    1. ஆசையே நோய்க்கும் காரணம்தானே :)

      Delete