31 August 2016

தலையணை மந்திரம் எதுவரை வேலை செய்யும் :)

               '' வயது ஏற ஏற ஆண்கள்  தலையணை  இல்லாமல் படுப்பது நல்லதுன்னு   சொல்றாங்களே ,ஏன்  ?''
               '' தலையணை மந்திரம்  வேலை செய்யாத  நேரத்தில்  தலையணை  எதுக்கு ,தேவையில்லைதானே ?''
பார்வை ஒன்றே போதுமா :)   
               ''ஒரே பார்வையிலே ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''
              ''நல்ல வேளை ,அவர் ஜென்ட்ஸ் டெய்லரானதால்  தப்பித்தார் !''

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?
            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு அவர் ரொம்ப எச்சரிக்கையா  இருக்காரா,எப்படி  ?''
            ''டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு  தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ! ''

ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?
        ''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
       ''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
       ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''

ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா ?
  கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
  அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
  சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
  நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது !

26 comments:

  1. வயது ஏற ஏற தலையணை மந்திரம் தேவை இல்லைதான். ஆண்டாண்டு காலப் புரிதலில் சுகமாய் இணைந்திருக்கலாம்.

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. முதல்லேயே புரிஞ்சி நடந்துகிட்டா தலையணை மந்திரமே தேவையில்லை :)

      Delete
  2. ‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா...’ லைட்ட அணைக்காதிங்க... லைட்டா அணைக்காதிங்க...!

    பார்வை ஒன்றே போதுமே...!

    வெங்காயம் உட்பட வீட்டு வேலையெல்லாம் வீட்டுக்காரர் பார்த்துக்கொள்வார்... கவலைப்படவேண்டாம்...!

    ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாய் மட்டும்தான்... அஞ்ச வேண்டாம்...!

    அதுக்குத்தான் சைக்கிள் கொடுத்தது...!

    த.ம. 2












    ReplyDelete
    Replies
    1. இதில் 'அந்தரங்கம்' கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா....இதுக்கு தலையணை மந்திரமும் வேண்டாமம்மா :)

      பார்வை ...பதினான்கு நொடி ,ஞாபகம் இருக்கட்டும் :)

      கண் கலங்க வைப்பதில் முதலிடம் கணவருக்கா ,வெங்காயத்துக்கா :)

      இருபது டீ போடத்தான் வருமா ஒரு கிலோ தேயிலை :)

      நம்பகரமான வாகனம்தான் :)

      Delete
  3. டீ..இப்படியும் ஒரு கணக்கோ?

    ReplyDelete
    Replies
    1. டீ ஒரு சாம்பிள்தான் ,எதை எடுத்தாலும் கொள்ளைதான் !நடுத்தர ஓட்டலில் கூட சாதா தோசை முப்பது என்றால் ஏழைகள் எப்படி சாப்பிட முடியும் :)

      Delete
  4. Replies
    1. டீ விலையே கசக்குதா :)

      Delete
  5. // '' தலையணை மந்திரம் வேலை செய்யாத நேரத்தில்//

    வயதான பெண்கள்[கிழவிகள்] போடும் தலையணை மந்திரம் பலிக்காதே!!

    ReplyDelete
    Replies
    1. கிழவனிடம் பலித்தால் என்ன,பலிக்காமல் போனாலென்ன:)

      Delete
  6. ஏற்கனவே நிறைய மந்திரம் ஓதப்பட்டாயிற்றே
    எத்தனை நொடிப் பார்வை. அதிகம்பார்த்தால் காவல் துறைக்குக் கம்ப்ளெயிண்ட் போகலாம்
    வெங்காயம் கூட உபயோகிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே

    ReplyDelete
    Replies
    1. மந்திரம் வேலை செய்யாத காரணம் , வீரியத் தன்மையை இழந்து விட்டதே :)
      கையிலே ஸ்டாப் கிளாக் வைத்துக் கொண்டா பார்க்க முடியும் :)
      வெங்காயம் உரிக்காத நாளுண்டு ,பெண்கள் சீரியல் பார்க்காத நாளுண்டா :)

      Delete
  7. தலையணை தேவையில்லைனாலும்...மந்திரம் தேவையா இருக்குமே........

    ReplyDelete
    Replies
    1. உடல் மொழியைக் கேட்க வேண்டிய வயதில் ,மந்திரம் எந்த மொழியில் இருந்தாலும் புரியாதே :)

      Delete
  8. அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும்
    சேர்த்து சாப்பிட்டால்
    ஆங்கில மருந்திடம்
    சரண் அடைய வேண்டி வருமே!

    ReplyDelete
    Replies
    1. அலோபதியை விட்டுடுங்கன்னு தைரியமா சித்தா'பதி 'சொல்ல மாட்டேங்கிறாரே:)

      Delete
  9. பார்வையா அடடா மாட்டிக்கிட்டா....

    இறுதி துணுக்கு அருமை...

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இறுதி துணுக்கு அருமைன்னு நீங்க சொல்றீங்க ...
      அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது நன்றுன்னு அசோகன் ஜி சொல்றார் ...
      அந்த முதல் துணுக்கு அபாரம்னு நடன சபாபதி ஜி சொல்றார் ...
      நான் என்ன சொல்றேன்னா ...காலையில் சந்திப்போம் ,தூக்கம் வருது :)

      Delete
  10. அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,குட் நைட் :)

      Delete
  11. அனைத்தும் அருமை. அதிலும் அந்த முதல் துணுக்கு அபாரம்!

    ReplyDelete
    Replies
    1. அபாரம் என்று நீங்கள் வாழ்த்திய நேரம் நல்ல நேரம் ...ஜோக்காளியின் இப்போதைய முன்னேற்றம் >>>தமிழ்மணம் மகுடம்
      கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
      தலையணை மந்திரம் எதுவரை வேலை செய்யும் :) - 11/11
      வாசகர் பரிந்துரை
      உங்கள் கணவர் எப்படிப் பட்டவர் :)
      7/7

      மிக்க நன்றி ,நடன சபாபதி ஜி :)

      Delete
  12. Replies
    1. ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம், கிக்கர மக்கர் பண்ணக் கூடாதுதானே :)

      Delete