கைநாட்டு பேர்வழியா இருப்பாரோ :)
''டாக்டர் பட்டம் பெற நம்ம தலைவருக்கு தகுதி இருக்குன்னு எப்படி சொல்றே ?''
''அவர் எழுதுறது புரிய மாட்டேங்குதே !''
இதுவல்லவா தொழில் தர்மம் :)
''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
''கொடுத்தேன் ,கஷ்டப் படாம சம்பாதிச்ச காசு உடம்புலே ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''
''டாக்டர் பட்டம் பெற நம்ம தலைவருக்கு தகுதி இருக்குன்னு எப்படி சொல்றே ?''
''அவர் எழுதுறது புரிய மாட்டேங்குதே !''
இதுவல்லவா தொழில் தர்மம் :)
''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
''கொடுத்தேன் ,கஷ்டப் படாம சம்பாதிச்ச காசு உடம்புலே ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''
எவன்யா இவனுக்கு பொண்ணு தருவான் :)
''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்தி லட்ச லட்சமா சம்பாதிக்கிற வரனை ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
''பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''
''பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''
|
|
Tweet |
1) அவர் தலையெழுத்து அப்படி.
ReplyDelete2) கஷ்டபடாம அவரு சம்பாதிச்சதுதான் பீரோவில இருந்ததோ?
3) பல்லைப் பேத்துருவேன்னு சொல்லியிருக்க வேணாமோ?
4) பிரியாம நீ இருக்கனுமின்னு இரண்டு பேருமே சொல்லலியே..?
5) தத்துவவிளக்கம் விளங்கியது. விளங்கிக் கொள்ள முடியாமலும் விளக்கிச்சொல்ல முடியாமலும் இருப்பது
அப்ப இது தத்துவமா இல்லையா?
ஹ ஹ ஹா
தொடர்கிறேன்.
( உங்கள் பதிவுகளுக்குக் கருத்திட ஒரு பதிவு எழுதும் நேரத்தை விட அதிகமாக யோசிக்க வேண்டி இருக்கிறது பகவானே!
அதையும் உங்கள் அதிரடித் தாக்குதல்கள் மூலம் துவைத்துத் தொங்கவிட்டுவிடுகிறீர்கள். நேரமின்மை காரணமாகவே ஒற்றை வரிப் பின்னூட்டம் இட்டு வருகையைப் பதிவு செய்ய நேர்கிறது.
மணவையாரோ அதிகாலையில் உங்கள் பதிவில் விழிப்பதனாலோ என்னமோ நாளெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நள்ளிரவில் இப்பதிவிற்கு அவரை நான் முந்திக் கொண்டுவிட்டேன் )
நன்றி.
முதலில் என்னை மன்னிக்கணும் ...நேற்று நீங்கள் (மற்றவர்களும்)போட்ட கருத்துக்களுக்கு மறுமொழி கூற இப்போதுதான் எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது !சரி ,இனி துவைத்துத் தொங்கப் போடலாமா :)
Deleteகையெழுத்தே புரியலே ,தலைஎழுத்து புரியுமா :)
அதான் இவ்வளவு தாராளமா சாவியைக் கொடுக்கச் சொல்லுதோ :)
தெரியாம கேட்டுட்டார் ,விட்டுடுங்க :)
சொல்லாத காரணம் ,பிரியம் இருப்பதால்தானே :)
தத்துவமா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும் :)
ஒற்றைவரிப் பின்னூட்டம் என்றாலும் பொத்தாம் பொதுவாக இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியே :)
முந்திக் கொண்டதற்கு உங்களுக்கு பலன் கிடைத்ததா :)
அனைத்தும் அருமை நண்பரே!
ReplyDeleteத ம 1
குறிப்பிட்டு ஒன்றை சொல்லுங்களேன் ஜி :)
Deleteஹாஹா@ அனுபவங்கள் எதேதுக்கு கேட்பது என்பதூ இல்லையோ?
ReplyDeleteபிரியாணியில் பிரியாமணி எனும் விடயம் புரியும் படி விளக்கிச்சொன்னதால் விளங்கிக்கொண்டேன்!
அப்படி கேட்பதுதான் அவரோட அனுபவமாச்சே :)
Deleteஇரண்டிலும் மசாலா தூக்கல்தானா :)
தத்துவத்துக்கு தத்துவம்...!!!
ReplyDeleteபுரியுதா இல்லையா ஜி :)
Deleteடாக்டர்னாலே புரியாமத்தான் எழுதனும்... இதைப் புரிஞ்சிக்கங்க...! இன்னொன்னு எழுதப்படிக்கத் தெரியாதவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா இப்படித்தான்...!
ReplyDeleteநமக்கு பீரோவாவது ஒழுங்கா மிஞ்சட்டும் சொன்னா கேக்க மாட்டேங்கிறாங்க... சரி விடுங்க... தொழில் தர்மம் அதுதானே...! கொள்ளைக்காரன் அவன் பேச்சாலே என் மனச கொள்ளையடிச்சிட்டான்...!
பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்குற உண்மையச் சொல்ல ஏன் பயப்படுறீங்க...?
பிரியா(ம)ணி... வேணு(ஸ்)ம்... பார்த்துச் சாப்பிட நல்லாத்தானே இருக்கும்...!
தத்துவம்ன்னா... அப்படித்தாய்யா இருக்கும்... ஆமா...!
த.ம.3
குண்டு குண்டா எழுதின போலி டாக்டரோ :)
Deleteஎன் மனத்தைக் கொள்ளை அடித்தவனே என்று பாட வேண்டியதுதானே :)
இதை முதலில் சொன்னப்போ, பெத்தவங்களே அடிச்சாங்களே :)
ஆசை ஆசை அப்பளம் தோசை :)
தத்துவ மேதை சொன்னா ,அப்படித்தானே இருக்கும் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நீங்களும் ,இன்னைக்கு ரொம்ப பிஸிதானா :)
Deleteசிரி(ரசி)த்தேன், நண்பரே.
ReplyDeleteஇரண்டுக்கும் ஒரே தேன்தானா :)
Deleteதத்துவம் அருமை!
ReplyDeleteஉங்களுக்கு புரிஞ்சிடுச்சு போலிருக்கே அய்யா :)
Deleteஅட..பிரியாமணிக்கு அவ்வளவு மவுசு வந்திருச்சா.........
ReplyDeleteஅதான் ,முதல் படத்திலேயே தேசிய விருது தேடி வந்ததே :)
Deleteஅவர் என்ன படித்துப் பட்டம் பெற்ற டாக்டரா?இவர் கஷ்டப்படாமல் சம்பாதித்ததை அவர்கள் கஷ்டப்பட்டு எடுக்கிறார்கள். ஏன் பெண்டாட்டியாக இருப்பது ஏதாவது எம்ப்லாய்மெண்டா?இவர் பிரியாமணியைப் பார்க்க இவர் மனைவி பிரியும் மணியாகி விடுவார் தத்துவம் நெத்தியடி
ReplyDeleteபடிக்காத மேதையாச்சே அவர் :)
Deleteசரியா போச்சா :)
ஒரு படத்தில் கல்யாணம் பண்ணிக்காம காண்ட்ராக்ட் ஒப்பந்தம் போட்டு வாழ்ந்தார்களே :)
அந்த பயம் அவருக்கில்லையே :)
டக்குன்னு புரிஞ்சிடுச்சா :)
அனைத்தும் ரசித்தேன்......
ReplyDeleteகுறிப்பிட்டு ,ஒன்றைப் பற்றி மட்டும் சொல்லுங்களேன் ஜி :)
Delete01. இது நல்லா இருக்கே நாட்டுல முக்கால்வாசிப் பேருக்கு வாசிக்கவே தெரியாதே..
ReplyDelete02. பீரோவும் போச்சா ?
03. இதென்ன காலக்கொடுமை ?
04. ரெண்டும் ஒரே கேசுதான்
05. யாரோட தத்துவம் ஜி
அவர்கள் எல்லோரும் டாக்டராக தகுதி படைத்தவரே :)
Deleteஉள்ளே உள்ளதே போகும் போது,பீரோ போனாலென்ன :)
இப்படியும் கேட்கிற காலமாகி போச்சே :)
புருசங்கதானே:)
ஹிஹி,இப்படி வேறு யார் சொல்லப் போறாங்க:)
அருமை தொடர்க பகவனே ...
ReplyDeleteநீங்கள் பிரியாணி சாப்பிட்டால் போதும் ...
அமெரிக்காவில் இருந்து பூரிக்கட்டை பார்சலில் வராமல் இருந்தால் சரி
தம +
உங்க வூட்டு அம்மணி ,தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருந்தாக ...சாரி ,எனக்கு பிரியாணி சாப்பிடவே நேரமில்லை ஜி :)
Deleteஹாஹாஹா! அட்டகாசம்!
ReplyDeleteவார்த்தையை மாற்றிப் போடுங்க ஜி :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
த ம எண் போடலையே ,ஏன் ஜி :)
Deleteடாக்டர் எல்லோருமேஅப்படித்தானே ஜி..ஹ்ஹஹ
ReplyDeleteரசித்தோம்....தத்துவம் உட்பட..!!
புரியாமல் எழுதுவது டாக்டரின் குறைந்தபட்ச அடிப்படைத் தகுதிகளில் ஒன்றா :)
Deleteர்சிக்கமுடியுது சரி ,தத்துவம் புரியுதா :)