24 January 2016

மனைவிகிட்டே 'சாப்டா 'தான் கேட்கணுமோ :)

 நம்மாளு ,ரொம்ப ராசியான ஆளுதான் :)                    
                  ''என் நல்ல நேரம் ,குறுக்கே வந்த பூனைக் கூட திரும்பி போயிருச்சு !''
                    ''அதுசரி ,உன்னைப் பார்த்ததும் நேரம் சரியில்லேன்னு பூனைப் போயிருக்கும் !''

Image result for பூனை குறுக்கே போனால்
                                                               
கிளினிக் போறவரைக்கும் இருக்க முடியாதவன் :)
                     ''பரவாயில்லையே ,உங்க பையன்  கூப்பிட்ட உடனே   ஓடி வருகிறானே !''
                   ''சும்மாவா ,அவன் கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
                                                    

சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'சாப்டா'தான் கேட்கணுமோ :)

                ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
               ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க :)
                         ''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
            ''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் 
ஆறு பிரீமியமாத்தான் தருவேன்னு வம்பு பண்றார் சார் !''


  • சுயநலமே உலகமாகி விட்டதா :)

    1. சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
    2. சுமப்பதற்கு  யாரும்  தயாராய் இல்லை ! 







  • 18 comments:

    1. This comment has been removed by the author.

      ReplyDelete
      Replies
      1. நேற்றைய பதிவுக்கு கமெண்ட் போட்டு விட்டு ,டெலிட் பண்ணிட்டீங்க சரி ,இந்த பதிவுக்கு கமெண்டை போடுங்க :)

        Delete
    2. கால் டாக்ஸியில் பிறந்தவர்.... ஹாஹா....

      ரசித்தேன்.

      ReplyDelete
      Replies
      1. பையன் 1௦8ல் வேலைக்கு சேர்ந்து ,அழைத்ததும் வருவான் ஆபத்துக்கு பாண்டவன் :)

        Delete
    3. Replies
      1. சிலுவைகளையும் தானே ஜி :)

        Delete
    4. மியாவ் சகுனம் ஹா...ஹா...

      ReplyDelete
      Replies
      1. ஏன் பூனை சகுனம் பார்க்காதா :)

        Delete
    5. மீசையப் பாத்ததும்... பூனை பயந்து போயிருக்கும்...! நல்ல வேளை கடிக்காம போனதே...!

      ஒடி வந்தவன்... ஒரு பொண்ண ஓட்டிட்டுப் போயிட்டான்...!

      பொழைக்கத் தெரிந்த வாயில்லா ஜீவன்...!

      ஒங்க தகராறுல இதப் பாக்கலையா... பெட்ரோல்ன்னு நெனச்சு டீசல அடிச்சிட்டான்...!

      உடம்பையே தூக்க முடியல... இதுல சிலுவை யாரு தூக்கிறது...? அவசரப் பட்டுட்டீங்க...பாத்து செய்யக்கூடாதா...?

      த.ம.5



      ReplyDelete
      Replies
      1. பெரிய மீசை வைத்த இரண்டு கால் பூனையா இருக்கேன்னுதானே :)

        பொண்ணு என்ன ஆடா மாடா ஓட்டிகிட்டு போக :)

        வாயில்லா ஜீவன் நாயதானா :)

        தகராறு ஆரம்பித்ததே காசு கொடுக்கும் போது தான் :)

        சுமப்பதற்கு தயாராக இல்லாதவர்கள் சேர்ந்து செய்த சிலுவையாச்சே ,என்ன செய்றது :)

        Delete
    6. பிரீமியம் பெட்ரோல்..
      சுயநலமே உலகம்
      அசத்தல் சகோதரா...நகைச்சுவைகள்..இனிமை..
      (வேதாவின் வலை)

      ReplyDelete
      Replies
      1. அசத்தல் ,மணவையாரின் கருத்துக்களும் தானே :)

        Delete
    7. 01. மனுசன் குறுக்கே போயிட்டானோ ?
      02. அடடே இனிமேல் எல்லோருமே இதை ட்ரைப் பண்ணலாமோ ?
      03. இதிலே நாய் யாருன்னு புரியலையே...
      04. நியாயமான கேள்விதானே...
      05. கடைசியில் ஊண்டலாமே...

      ReplyDelete
      Replies
      1. வாயில்லா ஜீவன் மேல் மனுஷன் மட்டும் பழி போடலாமா :)
        108ல் பிறந்தால் இன்னும் நல்லதாச்சே :)
        அந்தம்மாகிட்டேயே கேட்டுடலாமே :)
        எத்தனை பிரிமியம்னு தெரியலியே :)
        அப்படி நடந்துகிட்டுதானே இருக்கு :)

        Delete
    8. Replies
      1. பூனை நினைப்பதையும்தானே :)

        Delete
    9. eநல்ல உள் குத்துதான் போங்க..“'பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனவுக ”!'

      ReplyDelete
      Replies
      1. மனுஷன் இனிமேல் சோறுன்னு வாய் திறந்து கேட்பானா :)

        Delete