9 January 2016

ஓடிப் போகலாம்னு சொன்னவ ,ஏன் வரலே :)

 மாயம் உண்மையானால் ...:)
                ''உங்க கண்ணுக்கு தெரியாம உங்க மனைவியை மறையச் செய்கிறேன் ,அப்பவாவது மேஜிக் உண்மைன்னு நம்புவீங்களா ?''
                ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !''




ஒண்ணு  கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?

                  ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
             ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'  

                      
ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே :)
            ''  ஓடிப் போகலாம்னு அடிக்கடி சொன்னாலும் ன்னோட  காதலி ஓடிவர மாட்டாள்னு உனக்கு எப்படி தெரியும் ?''                                                ''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''
இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் :)                              
                     ''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
  •                   ''வேறென்ன வேணுமாம்  ?''

  •                      ''மாஞ்சா கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !'





      20 comments:

      1. என்ன ஒரு சாமர்த்தியம்!

        பெட்டியோட ஸன்னா இருப்பார் போல!

        நிலையில்லாத நிலைத்தகவல்களா!

        மாஞ்சாக் கயிறா... பாஞ்சா புலிதான் போல!

        ReplyDelete
        Replies
        1. மேஜிக்சியனை தானே சொல்கிறீர்கள் :)

          பி ஏ விளக்கம் எதுவும் சொல்லலே போலிருக்கே :)

          யாருக்குத் தெரியும் காத்து எங்கிட்டு வீசுமென்று :)

          பூ ஒன்று புலியாகுமா :)

          Delete
      2. 01. க்ரிட்டிக்கலான கேள்விதான்
        02. உண்மையான பதில்
        03. அவரோட மகளா ?
        04. கட்டி விடலாமே...

        ReplyDelete
        Replies
        1. இப்படியே கழட்டி விட நினைக்கும் கிரிட்டிகலான ஆளிடமிருந்து வேறெப்படி கேள்வி வரும் :)
          பதில் இல்லை ,கேள்வி :)
          வரவே மாட்டாள்னு நீங்களும் தீர்மானமே போட்டுட்டீங்களா:)
          அப்புறம் உயிரோட இருக்க முடியுமா :)

          Delete
      3. எ கண்ணுக்கு தெரியாம ஏகப்பட்ட வேலை செய்றா... அவள் உண்மையில... மறைந்த செய்தி கேட்டா மேஜிக்க நம்புறேன்!

        கேமராவோட இருக்கிற பெட்டியா தேடிக்கிட்டி இருக்காரு... கொஞ்சம் பொருங்க...!

        வானிலை மைய அதிகாரி சொல்றது ஒரு வேளை நடந்தாலும் நடக்கும்... ஆனா இவள் சொல்றது நடக்கவே நடக்காது...! ஏன்ன அப்பன் எட்டடின்னா... குட்டி பதினாறு அடியாம்...!

        மஞ்சக் கயிறுதான் மாஞ்சா கயிறுங்கிறது போகப் போகத் புரியும்...!

        த.ம.4



        ReplyDelete
        Replies
        1. ஆகா ,கதை அப்படி போகுதா :)

          தேடவே வேண்டாம் ,பணத்தை மட்டும் தள்ளிவிடுங்க :)

          பதினாறு அடி காதலன் பக்கமா ,அப்பன் பக்கமா :)

          அதை கட்டிகிட்டது அவ ,உயிர் விடப் போறது இவனாச்சே :)

          Delete
      4. ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !'' Aaha!...
        மஞ்சக் கயிறு மாஞ்சாக் கயிறு அனைத்தும் அருமை சகோதரா.
        ரசித்தேன்.
        (வேதாவின் வலை)

        ReplyDelete
        Replies
        1. மேஜிச்சியனை சிக்கல்லே மாட்டி விட்டுட்டாரே :)
          மாஞ்சாக் கயிரினால் பறக்கப் போறது யார் உயிரோ :)

          Delete
      5. வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !'என்“றதும் புல்லரிக்கிறது நண்பரே.....

        ReplyDelete
        Replies
        1. சட்டென்று மாறுதே அவளோட மனநிலை :)

          Delete
      6. Replies
        1. மிதக்கும் 'ரோஜா'வைத் தானே :)

          Delete
      7. அனைத்தும் அருமை. முதல் நகைச்சுவை சற்றே அதிகமாக.

        ReplyDelete
        Replies
        1. இதை 'மேஜிக் டச்' எனலாமா :)

          Delete
      8. [m]http://4.bp.blogspot.com/-ruwti-fpbrE/VpAKm4EMrMI/AAAAAAAAAss/J-K530i8l9k/s400/roja-magic-250_28042008.jpg[/m]

        பயபுள்ள...
        ரொம்ப பாவம்!!!

        ReplyDelete
        Replies
        1. எந்த பயபுள்ள பாவம்னு தெரியலையே ,நிஜாம் ஜி :)

          உங்க பெயருக்கு கீழேயுள்ள 'லிங்க்' கில்,புதிய பதிவு ஏதும் இல்லையே!

          Delete
      9. ரசித்தேன்....

        மாஞ்சாக் கயிறு! - அடக் கஷ்டமே...

        ReplyDelete
        Replies
        1. மனுஷன் ரொம்பத்தான் நோகடிச்சிட்டான் போலிருக்கு :)

          Delete
      10. பொட்டியும் மாஞ்சாக் கயிறு!

        ReplyDelete