25 January 2016

ஜாக்கெட் ஜன்னல் எல்லாம் தேவைதானா :)

 பதிலும் SMSல் வந்தால் தகப்பன் என்ன செய்வானோ :)           
               ''என்னங்க , 'லட்சுமி மேனன் அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் 'னு பையனுக்கு SMS அனுப்புறீங்களே,ஏன் ?''
                 ''அப்படியாவது  ,என் நினைப்பு வந்து பேசுறான்னா இல்லையான்னு  பார்க்கத்தான் !'' 



  நல்ல முன் எச்சரிக்கைதான்   :)           

       
                   '' கூட்டிப்  பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு உங்க மனைவி சொல்றாங்களே ,ஏன் ?''
                  ''வர்ற வேலைக்காரி ,என் மனைவி கிட்டேயிருந்து என்னைக் கழித்து , புது வாழ்க்கைவகுத்து விடக் கூடாதுன்னுதான் !''


இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் !
                ''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
               ''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே , நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை  !'' 






ஜாக்கெட் ஜன்னல் எல்லாம் தேவைதானா :)

           ''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு நகை திருடுறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது ,நல்லதாப் போச்சு !'' 
           ''ஜன்னல் கதவுக்கும் பூட்டு போட்டுட்டாங்களா?''
          ''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட  விட்டுட்டா !''
                                                                      Image result for ஜன்னல் ஜாக்கெட்


ஷேர் மார்க்கெட் எல்லோருக்கும் கை கொடுக்குமா :)

   '' உங்க வீட்டுக்காரர்  ஷேர் ஆட்டோவிலே கூட ஏற மாட்டாரா ,ஏன்?''

  ''ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் !''


வாயாடி, பெரியவள் ஆனதும் :)
FM ரேடியோவில் கலாய்க்கும் 
 ரேடியோ  ஜாக்கி  சின்ன வயதிலேயே 
'பெரிய வாயாடி'!

22 comments:

  1. என்ன கொடுமை! மாடியிலிருக்கும் மகனை ஈமெயிலில் சாப்பிட அழைக்கும் பழைய நகிச்சுவை நினைவுக்கு வந்தது.

    அது இவர் கையில இல்ல இருக்கு!!

    ஆஹா... மாப்....பிள்ளை! பெரிதினும் பெரிது கேள்!

    ஏதோ ஒரு வகையில் லாபம்!

    அலர்ஜியான வார்த்தை ஆகிவிட்டது போலும்!

    ரேடியோ ஜாக்கில ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்களே!

    என்னவோ இன்று எல்லா தளங்களிலும் ஒரு நொடியில் தம வாக்கு விழுந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. அப்பன் மகன் பாசம் இப்படின்னா விளங்குமா :)

      புருஷனை நம்ப முடியலே போலிருக்கே :)

      மாப்பிள்ளை ,மகாப் பிள்ளைதான் :)

      இப்படியாவது தலை முழுகினால் சரிதானே :)

      சும்மாவா ,லட்சக்கணக்கிலே போச்சே :)

      வாயாடிக்கு எதிர்ச் சொல்லிருக்கா :)

      ஆமாம் ,அதிசயம் ..த ம சரியாகி விட்டால் சந்தோசம்தான் :)

      Delete
  2. அந்த ATM மெசின் கலகல.

    ReplyDelete
    Replies
    1. மெஷினை வாங்கி விடலாம் ,பணத்துக்கு எங்கே போறது :)

      Delete
  3. அப்பனுக்கு பிள்ள தப்பாமத்தான் பிறந்திருக்கு... அப்பா பெரிய நடிகர்ன்னு பையனுக்குத் தெரியாதா என்ன?

    கூட்டிக் கழிச்சா எல்லாம் சரியாத்தான் வரும்...! வாழ்க்கையை வகுத்துப் பழுகிப் பெருகுங்க...!

    இதையேதான் ஒங்க அப்பாட்ட நானும் கேட்டிட்டு இருக்கேன்... யாரு சொலறத அவரு கேக்குறாரு... சரி... வா மாப்பிள்ள வீட்டு நா வாறேன்...!

    நல்லவேளை ஜாக்கெட் போடுறத விடலல்ல...!

    ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதைப் போல ஷேர் ஆட்டோவிலே பயணம் போனா... போய்ச் சேரவேண்டியதுதானே...!

    பெரிய வாயாடிக்கு ஆடி மாசத்திலதான் இந்த வேலை கிடைத்தது...! ‘ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
    சேதி சொன்ன மன்னவரு தான்...’ பாட்டு வருது...! கேளுங்க... கேளுங்க... கேட்டிக்கிட்டே இருங்க...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. அவர் லக்ஷ்மியை ரசித்தவரோ :)

      குப்பைப் போய் அறை சுத்தமாகி ,அவர் மனசு அசுத்தமாகி விடுமோ :)

      ஒண்ணுக்கு ஒண்ணு ஃப்ரியா கிடச்சா atm மெஷினை வாங்கிடலாம் :)

      விட்டுட்டா ,முதல் மரியாதை கிடைக்காதே :)

      இறுதிப் பயணமாகி விடுமோ :)

      மார்கழியில் மாருலே சளின்னு மாப்பிள்ளை மயங்குறாரே :)

      Delete
  4. Replies
    1. உங்களுக்கும் ATM மெஷின் ஒன்றை ஆர்டர் பண்ணிடலாமா :)

      Delete
  5. Replies
    1. அந்த வாயாடியைத் தானே :)

      Delete
  6. Replies
    1. ஏண்டா தகப்பா ,இப்படியா மகன்கிட்டே கேட்கிறதுன்னு தோணுதா ஜி :)

      Delete
  7. அனைத்தும் ரசித்தேன்
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. ஜன்னல் ஜாக்கெட்டையும்தானே:)

      Delete
  8. 01. அய்யோ பாவம்
    02. கணக்குல இவ்வளவு பிரிவு இருக்கா ?
    03. மாப்பிள்ளைக்கு இம்பூட்டு அறிவா ?
    04. தெளிவானவள்
    05. அறிவுக்கொழுந்தன்
    06. தொட்டில் பழக்கம்

    ReplyDelete
    Replies
    1. இப்படியா ஆகணும் அப்பன் பாடு :)

      போட்டுப் பார்த்தாதானே தெரியும் :)

      காசுன்னா சும்மாவா :)

      தெளிய வைத்தது யாரு :)

      அவன் அனுபவம் அப்படி :)

      FM வரைக்குமா :)

      Delete
  9. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜன்னல் ஜாக்கெட்டை ரசிக்க முடியுதா ஜி :)

      Delete
  10. காற்று ஒட்டமா.... இருக்கட்டும்மே...ன்“னுதான் ஜாக்கெட் ஜன்னல் எல்லாம் வைக்கிறாங்க ஜி..

    ReplyDelete
    Replies
    1. முதல் மரியாதை பட நாயகி ராதா மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டா இன்னும் நல்ல காற்றோட்டமா இருக்குமே :)

      உங்களின் வலிப்போக்கன் தளத்துக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டி விட்டதே ,கொண்டாட வேண்டாமா ?
      ஆர்வமாய் தொடங்கப் பட்டு சில பதிவுக்குப் பின் காணாமல் போகும் தளங்களுக்கு மத்தியில் ,நீங்கள் ஐந்து லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது சாதனைதான் ,வாழ்த்துக்கள் !

      Delete
  11. சிறப்பான சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முளையிலேயே தெரிந்த விளையும் பயிர் ..வாயாடியை ரசிக்க முடிந்ததா :)

      Delete