29 January 2016

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வரணும்னா :)

  எப்படியென்றாலும் ஆயுள் தண்டனைதான் :)                      

                           ''பொறந்தா  , 'எரித்திரியா ' நாட்டில் பொறக்கணும்னு ஏண்டா சொல்றே ?''

                           ''அங்கே ,ரெண்டு பெண்களைக்  கட்டிக்காத ஆண்களுக்கு சிறைத் தண்டனையாமே !''
        செய்தியைப்  படிக்க கிளிக்குங்க ..ரெண்டு திருமணம் இல்லாட்டி ஜெயில் :

                                                                       
                            
                                 நன்றி ...  rammalar.wordpress.com                 
சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
               ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''


மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !

               ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா 
வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
                      


  1. மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா:)

              ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
  2.          ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''


  3. தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வரணும்னா ...:)

             ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
               ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டுப் பாரேன் !''
கற்பு எனப்படுவது இதுதானோ :)


அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !

                                                             


20 comments:

  1. 01. இணைப்புக்கு சென்று வந்தேன் ஜி இவளுகளுக்கு பேன் பார்க்கவே ரெண்டு வேலைக்காரிகள் வேணும் போலயே...
    02. ஓஹோ... ரெண்டும் ஒண்ணா....
    03. எல்லா ஓனரும் இப்படித்தானே...
    04. நல்ல யோசனைதான்
    05. மோதிரத்துக்கு எபெஃக்ட் இருக்கோ...
    06. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் புருஷன் செய்தால் ஆகாதா :)
      சிலருக்கு அப்படித்தான் :)
      இனிமேல் ஓனர் சாப்பிடுற ஹோட்டலில் மட்டும்தான் கேட்டுட்டு சாப்பிடணும்:)
      பசியோடு வந்தவங்க ,பாவமில்லையா :)
      சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் இருக்கும் :)
      எண்ணம் போல கண்ணன் வரட்டும் :)

      Delete
  2. ‘பொறந்தாலும் பொம்பளயா பொறக்கக்கூடாது...’ 'எரித்திரியா ' நாட்டில் செல்போனில்... பெண்களின் ரிங்டோன் இதுதானாம்...!

    கல்யாணச் சுனாமியில என் வாழ்க்கை சுண்ணாம்பா ஆயிடுச்சு...!

    எங்க முதலாளி வீட்டுல சாப்டுட்டு அழுதாகனும்...!

    இதுக்குத்தான் பந்திக்கு முந்துன்னு சொன்னேன்...!

    இராம பக்தனா இருந்தது போதும்... சாமிய மாத்தி யோசி... முருகனக் கும்பிடு... தெய்வாணை ... இல்லாட்டி வள்ளி வரப்போறா...!

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்... வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்... குழலெடுப்பான் பாட்டிசைப்பான்... வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்...!

    த.ம.3











    ReplyDelete
    Replies
    1. ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் நம்ம பண்பாடுதான் ,அங்கே நிலைமையே வேறு :)

      இந்த சுண்ணாம்புக்கு ,நிவாரணமே இல்லையா :)

      அதானே ,வீட்டிலே என்ன வாழுதாம் :)

      முந்துன்னு சொன்னீங்க ,பாம்பு வரும்னு சொல்லலையே:)

      இங்கேயும் எரித்திரியா :)

      பாலூட்டுவானா ,நான் என்ன சின்ன பப்பாவா:)

      Delete
  3. Replies
    1. வடை ( மாலை ) ருசியாக இருந்ததா :)

      Delete
  4. பெண்களுக்கும் திருமண பந்தம் வேண்டும் அல்லவா.?சுனாமி அன்று திருமணமா ஒரு சுனாமி போதவில்லையா ஓனருக்குத் தெரியாததா?மொய் எழுதிப் பசியோடு இருப்பவரை இப்படி ஏமாற்றலாமா.?அதானே மனைவிக்கல்லவா காணிக்கை செலுத்த வேண்டும் அனுமார் மனைவியாக முடியுமாபெண்களின் மன ஆழம் புரியாத ஒன்று என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. போட்டி வராம இருக்க ஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கலாமே:)

      வீட்டிலே என்றுமே சுனாமிதான் :)

      தொழில் தர்மம் இல்லாத ஓனரோ:)

      அவிச்சுக் கொட்டி முடியலியாமே:)

      காணிக்கை சேர வேண்டிய இடத்திலே சேரணும் :)

      நீங்களும் அதை வழிமொழிகிறீர்களா :)

      Delete
  5. ஒருத்தியைக் கட்டிப் போட்டு
    உழைச்சுப் போடுறான் இல்லையென
    பெண்டாட்டியிடம் உதை வேண்டுறேன்
    எனக்கு வேண்டாமையா இரண்டாமாள்

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. பட்டால்தான் புரியும் என்பார்கள் ,நீங்க இப்பவே பயப்படுறீங்களே :)

      Delete
  6. எரித்திரியா போகனுமா?,,,
    அனைத்தும் அருமை ஜீ,,

    ReplyDelete
    Replies
    1. போகத்தான் ஆசை ,சொன்னா ..மனைவி எரிச்சிடுவா போலிருக்கே :)

      Delete
  7. உடுக்கை அடி உலக நாதனோ ஏழெட்டு சவுக்கடி, கொஞ்சுன்னு விபூதி, ஒரு எலும்பிச்சை பழத்துக்கு வாங்கிய 501 ஓவாவே ஜாஸ்தின்னு சொல்லிகிட்டு இருகப்போ... மோதிரத்த காணிக்கையா போடூறது..ரெம்ப ரெம்ப சாஸ்தி..நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. கவ'ரிங்' போட்டால் போச்சு :)

      Delete
  8. வணக்கம்
    ஜி
    இரண்டு திருமணம்
    சுனாமி
    வடைமாலை..

    எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்தேன் ஜி... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே மணவாழ்க்கை சம்பந்தப் பட்டவை என்பதே ஒற்றுமை :)

      Delete
  9. சரி சரி பகவான்ஜி க்கு எரித்திரியா போக ஆசை வந்துருச்சு ஆனா இங்க "எரித்"திரி"யா ஆயிடுமேனு கூடவே ஒரு பயமும் இருக்குமே ஹஹஹ்..

    ஹஹஹ் பின்ன முதலாளி தான் நடத்தற ஹோட்டல்லியா சாப்பிடுவாரு நல்லாருக்கே கதை....

    ஹஹஹ் சுனாமியே வாழ்க்கையாகிப் போச்சா அட! ஹும் சுனாமி அனாமியா வந்துருச்சு போல

    ReplyDelete
    Replies
    1. திரியை நனச்சாச்சு ,வெடிக்க வாய்ப்பே இல்லை :)

      விவரமான முதலாளி ,ஆனால் ,வேலை நேரத்தில் வீட்டுக்கு போனால் கல்லா காலி ஆயிடும் :)

      அனாமிக்கு அட்ரஸ் கிடைச்சு போச்சு :)

      Delete
  10. Replies
    1. பயணச் சித்தரே ,போகலாமா எரித்திரியாவுக்கு :)

      Delete