இது ஒரு கோவைக் கலாட்டா :)
''பழத்தோட பெயரைச் சொல்லாமல் ,நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,எப்படி பதில் சொல்றது ?''
''அட ,கோவைப் பழம் இருக்கான்னுதான் கேட்டேன் !''
''பழத்தோட பெயரைச் சொல்லாமல் ,நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,எப்படி பதில் சொல்றது ?''
''அட ,கோவைப் பழம் இருக்கான்னுதான் கேட்டேன் !''
மஞ்சள் நிறம்தான் அவருக்கு பிடிக்கும் :)
''வியாபாரத்திலே திவால் ஆனவர் ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமா இருக்கும்னுதான் , போகவேண்டாம்னு சொல்றேன் ,நீ எதுக்கு போய்தான் ஆகணும்னு சொல்றே ?''
''தியேட்டர் 'ஹவுஸ் புல்'லானா உங்க சேஷ்டை இருக்காதுன்னுதான் !''
|
|
Tweet |
அத்தனையும் செம நகைச்சுவை
ReplyDeleteமிக ரசித்தேன்.
நன்றி சகோதரா
(வேதாவின்வலை)
மொய் பொருள் காண்பது அறிவு என்பதை ரசிக்க முடியுதா :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். நம்மூர்ப்பழத்தை சற்றே அதிகமாக.
ReplyDeleteகோவை என்றாலே ஒரு 'கிக் 'இருக்கத்தானே செய்கிறது ,நான் ஊர்ப் பெயரைச் சொல்லலே :)
Deleteகொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்கான்னு கேட்டேன்...! கோவைங்கிறதுனால சரளமா தமஷா பேசுவேன்... நீங்க ரெம்ப தப்பா நினைக்காதம்மா... கோவை இதழ்க்குச் சொந்தக்காரம்மா...!
ReplyDeleteமஞ்சள் நோட்டீஸ்ல மகா குபேரனாவரு... ‘மஞ்சள் கும்குமத்தோட மகா லட்சுமியா நீயும் மஞ்சள் நோட்டீஸ் விட்டாவது வாழனும் தாயே...!
‘சேட்டைக்காரன்’ அடுத்த படம் எடுக்க வேண்டியதுதானே...!
எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு பாத்து வாங்குகிறேயே...! இந்த டியூப் லைட்டை மாட்டி வருஷத்துக்கு மேல ஆச்சு... ரொம்ப நல்லாத்தான் எரியுது... வாங்கிட்டு போ தம்பி... நீ நல்லா இருப்பாய்...!
மொய் விருந்து அவசியம் ... இருந்து எழுதிவிட்டு... அருந்திவிட்டுப் போகனும்ன்னு எழுதி இருக்கிறாரு பாக்கலையா...?
கொடுக்கிற தெய்வம் உண்டியல பிச்சுக்கிட்டுக் கொடுத்திருக்கு...!
த.ம.1
இப்படி சொன்னதுக்கு ,கோவை இதழ் அம்மாவுக்கு கோபம் வரலையா :)
Deleteஉங்க வாழ்த்து பலிக்கட்டும் :)
எப்படி முடியும் ,காதலி உஷாராயிட்டாரே :)
தீப்பெட்டி வாங்கி வரச் சொன்னா ,அதையும் எரியுதான்னு பார்க்கணும் என்பான் போலிருக்கே :)
அருந்தி விட்டு என்றால் ,எதை :)
கொள்ளைக்காரனுக்குத் தானே :)
1. இப்படியெல்லாம் கேட்டா அவருக்கு "கோவ"ப்பழம் வந்துடப் போகுது!
ReplyDelete2. சரிதான். மஞ்சள் பிரியர்! அவர் பொண்ணு பெயர் மஞ்சுளாவோ!
3. நல்ல ஐடியா!
4. :)))
5. வாழ்க தமிழ்!
6. அடப்பாவமே..
கோபம் வந்தே விட்டது ,முகம் கோவப் பழமா சிவந்து இருக்கே :)
Deleteபொருத்தமான பெயர்தான் ,ஆனால் அவர் மகளுக்கான்னு வருத்தமாவும் இருக்கு :)
முன் எச்சரிக்கைதான் :)
அவனைப் போய் டியூப் லைட் என்பதா :)
தமிழ் என்ன பாவம் செய்தது :)
இந்த கொடுமையா :)
கோவைப்பழம் போன்ற சிவந்த கண்கள் என்று தமிழ் பாடத்தில் படித்ததுண்டு...இப்படியும் ஹஹஹ
ReplyDeleteட்யூப்லைட்..ஹ்ஹ்ஹ் ரசித்தோம்...
உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு தெரியுது ,கண்ணுதான் ஞாபகம் வருதே :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒண்ணும் அவசரமில்லை ஜேம்ஸ் ஜி :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteதிரட்டி தொடங்குவதில் பிஸி ஆயிட்டீங்க போலிருக்கே :)
Deleteஅட ஊர்பாசம்...போல்..)))...
ReplyDeleteவியாபாரத்தில் திவாலாகி மஞ்சள் நோட்டீஸை வியாபாரமாக்கி மகளுக்கு மங்களகரமா செலவு செய்து விட்டார் போல.....
விவரமான பயபுள்ள தான் சந்தேகமே இல்லை....
ரசித்தேன்
தம + 1
வெளியூர் வாசம் முடிந்து வந்திருக்கார் ,அதான் ஊர்ப் பாசம் பொங்கி வழியுது :)
Deleteமஞ்சக் கயிறை பார்க்கும் போதெல்லாம் மஞ்ச நோட்டிஸ் கண்ணுக்குத் தெரியுமே ,அந்த பொண்ணுக்கு :)
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :)
ஆமா...ஆமா...காதலி செம உஷார்தான் நண்பரே.....எல்லாத்திலும் இப்படி
ReplyDeleteஒரு பய பிள்ளையும் கைவிட மாட்டான் ,கல்யாணம் பண்ணிக்குவான் அப்படித்தானே :)
Delete01. அட இதுவும் நல்லா இருக்கே..
ReplyDelete02. இப்படியும் சம்பாரிக்கலாமோ...
03. அனுபவம் பேசுதூ
04. வெவரமான புள்ளே
05. வெவரமான வாத்தியாரு
06. அடடே....
சிவப்பாயிருந்தா நல்லாதானே இருக்கும் :)
Deleteகுறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆக வேண்டாமா :)
நான் 'குர்னாம் 'காலத்து ஆள் ஆச்சே :)
நல்ல வேளை,பல்ப் மட்டுமே கேட்டான் :)
நல்ல வழிகாட்டியும் கூட :)
கலிகாலமாகிப் போச்சா :)
டியூப் லைட் பிரகசாம்.
ReplyDeleteசுருக்கமா TL பிரகாசம் என்று பெயர் வைத்து விடலாம் :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
மஞ்சள் நோட்டீசையுமா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன்...அனைத்தும் அருமை. த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் கருத்துரைப் பாணியும் அருமை :)
Deleteமஞ்சல் மங்கல நிறம்;ஆனால் எப்படியெல்லாம் பயன் படுகிறது!மஞ்சக் கடிதாசு,மஞ்ச நோட்டிஸ்,மஞ்சப் பத்திரிகை.....
ReplyDeleteஅனைத்தும் நன்று
மஞ்சப் பத்திரிக்கை,சிலரை கொலைவரை கொண்டு சென்று விடுகிறதே:)
Deleteபதிவோடு பின்னூட்டங்களையும் ரசிக்க முடிவது உங்கள் பதிவில்தான்.
ReplyDeleteபதிவு நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்துவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
வேறென்ன வேண்டும் எழுத்தாளனுக்கு?
வாழ்த்துகள் பகவானே!
நன்றி
தினசரி , இரவு 12 ஆனாலும் தூங்க விடாமல் செய்கிறதே ,உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு ,அதனால்தான் என் அர்ப்பணிப்பு தொடர்கிறது :)
Deleteமொய்ப்பொருள் காண்பது அறிவு! அட்டகாசம்! ஹாஹாஹா!
ReplyDeleteஅட்டகாசம் ,மெய்ப் பொருள் காணும் வரை தொடரும் :)
Delete