8 January 2016

மேஜிக் கன்னி ,நடிகையானது சரிதானே :)

  உங்களுக்காவது  தெரியுமா 'அது ':)               

                     ''வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே ,கொல்லுதேங்கிற பாடல் வரிகளைக் கேட்டு ஏண்டா  சிரிக்கிறே ?''

                       ''அந்த வெண்ணிலா இவனை என்னதான் பண்ணும்னு தெரியலியே !''


                 

மேஜிக் கன்னி ,நடிகையானது சரிதானே :)

                ''ஃ டூ பீஸ் உடையில்  உடம்பைக் காட்டி  நடிக்க வேண்டியிருக்கேன்னு  என்னைக்காவது வருத்தப் பட்டதுண்டா ?''
                    '' மேஜிக் குழுவில் நான் முந்தி  இருந்தப்ப , என்னை  ஃ டூ   பீஸ் ஆக்கினதுக்கே வருத்தப் படலே ,இதுக்கா வருத்தப் படப் போறேன் ?''      

      
                                                        

ட்ரான்ஸ்பருக்கும் அஞ்சாத தில்லு துரை :)

                  ''ஆபீஸிலும் போதையில் இருக்கீயே ,உன்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு தூக்கி அடிக்கப் போறாங்க !''
              ''அங்கே போனாலும் டாஸ்மாக் தண்ணி  கிடைக்குமில்லே ?''

தூரப் பார்வை மாதிரி ,இது தூரக் காது போலிருக்கே :)
                  ''என்  முப்பது வருச  அனுபவத்தில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததில்லை!''
                            ''ஏன் டாக்டர் ?''
             ''நான் பேசுறது காதுலே விழலையாம் ,பக்கத்து தெருவிலே பேசுறது எல்லாம் கேட்குதாமே !''



நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா :)

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
எனக்கேன்  மரணத் தண்டனை ?

26 comments:

  1. 01. அதானே தேவையில்லாமல் நிலாவை வம்புக்கு இழுக்கிறானே..
    02. மேஜிக் குழுதான் வளர்த்து விட்ருக்கு.
    03. சுத்தி வளைச்சு தமிழ் நாட்டுக்குள்ளேதானே....
    04. புதுமையாக இருக்குதே...
    05. நியாயமான கேள்விதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. இவன் தேவைக்கு இன்னும் எதையெல்லாம் வம்புக்கு இழுப்பானோ :)
      ஆனால் வாழ வைக்கலையே :)
      அந்த தைரியம் தான் :)
      ஒரு வேளை,செல் மூலமாய் கேட்குமோ :)
      நீதிபதிதான் இதுக்கு பதில் சொல்லணும்:)

      Delete
  2. தங்கள் இறுதிப் பதிவைப் பார்த்ததும் இப்படித் தோன்றிச்சு

    ஏய்! நீதியாளரே!
    ஆளுக்கோ சாவு ஒறுப்பு
    அதையேன்
    எழுதுகோலுக்கும் வழங்குகிறாய்!
    கேட்பது நானல்ல
    உன் கையாலே
    முனையுடைத்து வீசப்பட்ட
    எழுதுகோல்!

    இந்தப் பக்கம் பாருங்க...
    http://ootru.yarlsoft.com/

    ReplyDelete
    Replies
    1. ஆகா ,உங்க கோணமும் நல்லாயிருக்கே :)

      ஊற்று நீரையும் பருகி விட்டேனே :)

      Delete
  3. வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்... எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்... ‘வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை...!’ விண்ணைத்தாண்டி வருவாயா...? மாட்டாயா...?

    இருக்கிறத காட்டுறது தப்பா...? காட்டி... கொடுத்து... வாழ்ந்தால் வள்ளல் ஆகலாமுன்னு யாரோ சொன்னாங்களே...!

    இப்பல்லாம் தண்ணியில்லாத காடே இல்லை... வீடே தண்ணியிலதான் மிதக்குது...! தரைமேல் பிறக்க வைத்தாய்... தண்ணீரில் மிதக்க வைத்தாய்...!

    பக்கத்து தெருவுல இருக்கிறது யாருன்னு நெனச்சீங்க...? இப்ப இந்தப் பாட்டு தேவையா...? ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்...!’

    எல்லாம் என்னோட இல்ல... இல்ல... ஒன்னோட தலவிதி...! விதி யார விட்டது...?

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்தில் இன்று வரை கவிஞர்கள் ,நிலாவை விடவே மாட்டேங்கிறாங்களே :)

      இது காட்டிக் கெடுக்கிற மாதிரியில்லே இருக்கு :)

      தண்ணீரில் மிதக்காதவர் யாருமில்லையோ தமிழ்நாட்டில் :)

      காதலி காதுலே குடியிருக்கா போலிருக்கே :)

      நிப்புக்குமா தலைவிதி :)

      Delete
  4. இடுப்பளவு வெள்ளம் வந்தாலும் திறந்திருக்கும், வறண்ட மாநிலமாய் இருந்தாலும் திறந்திருக்கும் டாஸ்மாக் ஒழிக!

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எரியுற வீட்டிலே பிடுங்கின வரையும் ஆதாயம் என செயல் படுகிறது டாஸ்மாக் :)

      Delete
  5. Replies
    1. வட்டமாய் காயும் வெண்ணிலாவையும் தானே :)

      Delete
  6. ரசித்தேன் ஜி...

    பேனாவின் கேள்வி கவிதை சூப்பர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. நம்ம நிஷாவுக்கு, தமிழ்மண வாக்கு போடச் சொல்லித் தந்தது நீங்கதான் என்றால் என்னால் நம்பவே முடியலை ,குமார் ஜி :)

      Delete
    2. ஏன், குமார் தம வாக்களிக்காமலேயே சென்று விடுகிறாரா!!!!

      Delete
    3. வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர் அதை பயன்படுத்துவதே இல்லை :)

      Delete
  7. சிலபாடல் வரிகள் அபத்தமாய்த்தான் இருக்கு உடம்புதானே முதலீடு அவர் மாநில அரசு ஊழியரா?காரணச்செவிடா காரியச் செவிடா.?அதானே பேனா என்ன குற்றம் செய்தது

    ReplyDelete
    Replies
    1. இஞ்சி இடுப்பழகி ,உய்யலாலா போன்றவையும் அபத்தங்களில் அடங்கும் :)
      அதை அவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள் :)
      ஆமாம் ,அவர் டாஸ்மாக் எல்லையை தாண்டாதவர் :)
      அப்படியும் சில பேர் இருக்கிறார்களோ :)
      அனைவரும் பேனாவுக்கே ஆதரவாய் எழுதுவதும் விசுவாசத்தால் தானா :)

      Delete
  8. ரசித்தேன்....

    பேனா கேட்ட கேள்வி - நியாயமான கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தது ,தில்லு துரையின் தைரியத்தைத் தானே :)

      இந்த கேள்விக்கு பதில் சொல்லவும் வாய்தா தேவைப் படுதே:)

      Delete
  9. மஞ்சக் கயிறு மாஞ்சாக் கயிறு அனைத்தும் அருமை சகோதரா.
    ரசித்தேன்.
    (வேதாவின் வலை)

    ReplyDelete
    Replies
    1. இது அடுத்த பதிவுக்கு போக வேண்டியதாச்சே ,அங்கே வாங்க ,பதில் சொல்றேன் :)

      Delete
  10. வருத்தப்படாதவாலிப நடிகை.....எனக் சொல்லலாம்....

    ReplyDelete
    Replies
    1. கூச்சப் படாமல் கூலிக்கு நடிக்கும் நடிகை என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

      Delete
  11. “ன்னும் பாடுக பாட்டே”
    என்றொரு வரி சங்க இலக்கியத்தில் வரும்.

    அதுபோல இன்னும் இன்னும் படிக்கச்சலிக்காமல் எழுதுகிறீர்கள்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் என்று இருக்க வேண்டும்.

      இ என்பது காணாமல் போய்விட்டதோ..?

      ஹி ஹி ஹி

      Delete
    2. இதுக்கும் உதாரணம் சங்க இலக்கியம் தானா :)

      Delete
    3. ஈ பறந்து போயிருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை ,இ எப்படிப் போச்சோ :)

      Delete