22 January 2016

பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது :)

 எட்டாவது பிரசவத்துக்கு இலவசமாய் ஏற்றிப் போனதால் வந்த ஞானோதயம் :)                    

               

                 ''அந்த ஆட்டோ டிரைவருக்கு இலவச சேவை செய்து அலுத்துப் போச்சு போலிருக்கா ,ஏன் ?''

                     ''(தலைப் )பிரசவத்துக்கு மட்டும் இலவசம்னு  மாற்றி எழுதியிருக்காரே !''


உமையொரு பாகனை மறக்க முடியலே :)           ,


             '' ஆங்கிலக் கதையை உல்டா பண்ணி படம் எடுக்கிற  அந்த டைரக்டர் ,

ப்ப டைட்டிலைக் கூட உல்டா பண்ணியிருக்காரா ,எப்படி?''

                ''நானொருபாகன்னுதான் !''

சேலை எடுக்கப்  புருஷனைக்  கூட்டிட்டுப் போகலாமா :)

                     ''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
                
                 ''நான் டிசைனைப்  பார்க்கிற முன்னாடியே நீங்க விலையைப் பார்க்கிறீங்களே !''

பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது :)
               ''அவரோட பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,
இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
                 ''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

[பிசிட்டி]ரே கல்லில் இரண்டு மாங்காய் :)

பிசிட்டி  குறைப்பதற்கு திரட் மில் மிஷினில் ஏறி 
கையை ,காலை ஆட்டி பயிற்சி செய்பவர்கள் ...
நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது 
பருமனும்.குறையும் ,கைத்தறிப் புரட்சியும் ஏற்படும்!



26 comments:

  1. 01. 8 வரைக்கும் ஓசியில் போனால் பெட்ரோல் யார் போடுவது ?
    02. நாளொரு பாகனாக இல்லாமல் இருந்தால் சரிதான்
    03. அவன் கவலை அவனுக்கு
    04. 3 மாசம் லேட்தான்
    05. நல்ல யோசனைதான்

    ReplyDelete
    Replies
    1. பத்து பிள்ளைப் பெத்த பின்னும் எட்டு மாசமா ,இந்த பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமான்னு பாட வேண்டியதுதான் :)
      இருந்தால் என்ன தப்பு :)
      நொந்து நூலாகி விட்டவன் பட்டு நூலை எப்படி ரசிப்பான் :)
      வளைக் காப்பையும் மணநாளிலேயே சேர்த்து வைத்து விடலாமா :)
      யோசனை மஞ்சி வாடுதானா :)

      Delete
  2. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் ஜி தமிழ்மணத்தில் 1வது வரிசையில் இருப்பது மகிழ்வு வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களின் ஆதரவுக்கு நன்றி ,ரூபன் ஜி :)

      Delete
  3. இறுதி அடி நெற்றியடி நல்ல ஜோசனையும் கூட தறியும் பலர் அறிவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனி ,நாடெங்கும் ஒலிக்குமா தறியடிச் சத்தம் :)

      Delete
  4. ஜோக்ஸ், ஆலோசனை இரண்டையுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. காலை மணி ஆறரைக்குள் வந்து 'பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது 'வை ரசித்தமைக்கு நன்றி ஜி :)

      Delete
  5. எட்டு எட்டா வாழ்க்கைய பிரிச்சுப் பார்க்க விடமாட்டீங்களே...!

    நானொருபாகன்... நளபாகன் இல்லைன்னா... அந்தக் குட்டிக்கு யானைப்பாகன்...!

    ‘சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு...’ பாட்டைக் கேட்டு மோசம் போயிட்டேன்...!

    தாய்க்குப் பின் தாரம் ஆகுறது முறை இல்லல்ல...!

    இஞ்சி இடுப்பழகிய... இனி பாக்க முடியாம போகப் போவுது...!

    த.ம.4







    ReplyDelete
    Replies
    1. எட்டாத வயசான பின்னாலே ,பிரிச்சுப் பார்த்து என்ன ஆகப்போவுது :)

      அதென்ன ,குட்டிக்கு யானைப் பாகன் :)

      மோசம் போயிட்டேன்னு சொல்றீங்க ,வீட்டிலே மாசமா இருக்காங்களே :)

      அட ,இதுக்கும் அது பொருந்துதா ,எப்படி ஜி :)

      அதனால் உங்க ஆயுசு ஒண்ணும் குறையப் போறதில்லை ,கவலையை விடுங்க :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,எட்டாவது பிரசவம் என்றால் ரசிக்க முடியுமா ஜி :)

      Delete
  7. Replies
    1. அதிலும் குறிப்பா ,கடைசி படத்தில் 'சிக்'கென்று இருக்கும் சிகப்பழகியையும் தானே :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தோம் ஜி அந்த ஒபிசிட்டி ஆலோசனை நல்லாருக்கு ஜி!

    ReplyDelete
    Replies
    1. நெய்வது கூட வேண்டாம் ,சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து பேட்டரியில் சேமிக்கும் படி ஐடியா செய்யலாமே :)

      Delete
  9. ரசித்துச் சிரித்தேன்

    ReplyDelete
    Replies
    1. திரட் மில் மிஷினை நினைத்துதானே :)

      Delete
  10. மூணு மாசத்திலே அது தாயாகப்போவுன்னா...விரைவ வண்டி போலிருக்கு.......

    ReplyDelete
    Replies
    1. அதிலும் சூப்பர் ஃ பாஸ்ட் தான் :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தேன்.
    வெளியா காத்தார நடக்கறத விட்டு ஏராளமான் பணத்தை கொடுத்து மெஷின் வாங்கி அதுல நடக்கறது கொடுமைதான்

    ReplyDelete
    Replies
    1. வெளியே நடப்பதாய் இருந்தாலும் காரிலே எங்கோ செல்வார்கள் :)

      Delete
  12. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தாய்க்கு பின் தாரமாவது சரியா :)

      Delete
  13. அது தாயாகப்போவுதே !''......
    நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது
    பருமனும்.குறையும் ,கைத்தறிப் புரட்சியும் ஏற்படும்!
    நன்று நன்று ரசித்தேன்...சகோதரா...
    (வேதாவின் வலை)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி உங்கள் கருத்துக்கு :)

      Delete