16 January 2016

எப்பவும் நயன்தாரா நினைப்புதானா :)

 வரும் சட்டசபைத் தேர்தலால் ,மாற்றம் வருமா ?             

                  ''பேரறிஞர் அண்ணா தீர்க்கதரிசியா இல்லையான்னு வருகிற சட்ட சபை தேர்தல் முடிவு மூலம் தெரியும்னு ஏன் சொல்றீங்க ?''

                           ''67ல்  அவர் ஆட்சியைப் பிடித்தபோது ,இனி ஐம்பதாண்டுகளுக்கு  தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் என்று சொல்லியிருக்காராமே !''

இப்படித் தானே படங்கள் வந்துகிட்டிருக்கு !

          ''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
           ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி '
கம்மியாவும்  இருக்கும் !''

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க !

                     ''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
                  ''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
                 ''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் 
இல்லேங்கிறீங்க?''


இது சென்ற வருட ,வள்ளுவர் தின சிறப்பு பதிவு ........

எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?

 ''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'

''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''


  • திருக்குறள்:
  • நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
    1. பண்பில்சொல் பல்லா ரகத்து.

      சாலமன் பாப்பையா உரை:
      பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

      1. வடு மாங்காய் ஊறுதுங்கோ !



    1. ''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
  •        ''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

  • திருக்குறள்

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே



    நாவினாற் சுட்ட வடு

    பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
    தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
    நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

    இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?

               ''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?'' 

             ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'


    திருக்குறள்:

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 

    நாடி இனிய சொலின்.





    சாலமன் பாப்பையா உரை:
    பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.


    காக்க காக்க நா காக்க !

                  ''யாதவராயினும் நாகாக்க ........''

                  ''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''


    குறள் 127: 

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 

    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

    சாலமன் பாப்பையா உரை:

    எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.













    24 comments:

    1. 01. அப்படியா ?
      02. அடடே...
      03 அட இப்படி,ம் மடக்கலாமா ?
      04. வள்ளுவரே எழுதி இருக்காரா ?
      05. ஸுப்பர்
      06. ஆஹா குறள் அழகாக குரல் கொடுத்தீங்க ஜி

      ReplyDelete
      Replies
      1. பொறுத்திருந்து பார்ப்போமே :)
        இரண்டு அம்சத் திட்டம் தான் போலிருக்கு :)
        போட்டு வாங்குறது என்றால் இதுதான் :)
        ரியல் குறள் எழுதியது அவர்தான் ,ரீல் குரல் என்னோடது :)
        எப்பவும் வடுமாங்காய் சூப்பர்தான் :)
        யாரும் அடிக்க வராமா இருந்தா சரி :)

        Delete
    2. வணக்கம்
      ஜி

      இப்ப இருக்கிற சமுதாயம் வேறுவிதமாக சிந்திக்க தொடங்கியதால் எல்லாம் கனவாகியது.. மற்றவைகளை இரசித்தேன் த.ம 3
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. திரா'விடம்' ஆகிப் போச்சோ :)

        Delete
    3. தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி வருமுன்னு தோனல...!

      அப்பத்தானே ஹீரோவுக்கு வேலை இருக்கும்... துணி சுத்த...!

      எல்லாம் நூறு அய்நூறு ஆயிரமா இருக்கு... பேங்குல...! சும்மா மதிப்பில்லா பத்தக் கேட்டு மானத்த வாங்காதா... வா நாம ரெண்டு பேரும் சேர்ந்தே கேட்போம்...!

      நயன் சாரா புதுமைப்பெண் அல்லவா...!

      வடு... ஆறாத(து) சினம்...!

      பையன் இனிக்க இனிக்க பேசுவான்...! நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் பொண்டாட்டிக்கு மட்டும்தான் தெரியும்...! வேற யாருக்குமே தெரியாது...!

      ‘காவாக்கால்’ ன்னா... எங்களையா சொல்றான்னு காவல்காரங்க... லத்தியத் தூக்கிட்டாங்க...!

      த.ம.4



      ReplyDelete
      Replies
      1. அப்படின்னா ,அண்ணா சொன்னது தப்பா போகுமே :)

        ஹீரோ கோட்டும் சூட்டுமா வர்றாரே :)

        தர மாட்டேன்னு சொல்லித் தொலை:)

        அவருக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்தாலே தெரியுது :)

        அதுக்கும் ஒரு கெடு வைங்க :)

        பெண்டாட்டிக்குத் தெரியாம போகுமா :)

        இப்படியுமா வம்பு வரும் :)

        Delete
    4. Replies
      1. மாற்றம் வரும் என்பதையும் தானே :)

        Delete
    5. குறள் தொடருமா ஜி...?

      இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

      ReplyDelete
      Replies
      1. குறளுக்கு,ஜோக்காளி உரை அவ்வளவு நல்லாவா இருக்கு ஜி :)

        வாழ்த்துக்கு நன்றி !

        Delete
    6. ‘அண்ணா அன்றே சொன்னார்’ என்று, இனி உடன்பிறப்புகள் தைரியமாக முழங்குவார்களோ?

      ReplyDelete
      Replies
      1. அப்படி முழங்கினால் ,தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுகிட்ட மாதிரி ஆயிடுமே :)

        Delete
    7. வள்ளுவர் காலத்தில் நயன்தரா இருந்திருக்குமோ.....!!!

      ReplyDelete
      Replies
      1. அந்த கொடுப்பினை நமக்கு மட்டும்தான் :)

        Delete
    8. அருமை...
      திருக்குறள் மற்றும் உங்கள் சுவையுடன் அறிஞர்களின் சுவையும் கலந்து அருமை...
      ரசித்தேன் ஜி.

      ReplyDelete
      Replies
      1. திருக்குறள் ஜமாபந்தி என்றா சொல்கிறீர்கள் :)

        Delete
    9. ஹாஹாஹா! சிறப்பான சிரிப்புக்கள்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. சிரிக்க வைத்ததா சிரிக்குறள்:)

        Delete
    10. தமிழ்ப்பாடத்திலும் இப்படிப் போட்டிக்கு வருவது நியாயமா பகவானே?

      நாங்கள் எல்லாம் ஏதோ பதிவுலகில் ஓரத்தில் உட்கார்ந்து இதை மட்டுமே நம்பிப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

      அதற்கும் தங்களால் அபாயம் வந்துவிடும் போலுள்ளதே? :)

      ஹ ஹ ஹா

      தொடர்கிறேன்.


      ( என்ன இது,..,, இப்போ உங்களுக்கும் ரோபோ வருகிறதே?!! )

      நன்றி.

      ReplyDelete
      Replies
      1. தினசரி பிழைப்பை ஓட்டுவதே பெரும் பாடாயிருக்கு ,உங்களோட நான் போட்டியிட முடியுமா :)

        ரோபோ வந்தாலும் கண்டுக்காதீங்க ,வழக்கமா போடுற மாதிரியே கருத்தைப் போடுங்க !மதியாதார் வாசலுக்கு தெரியாமல் வந்து விட்டோமென்று சில நாட்களில் ரோபோ சென்று விடும் :)

        Delete
    11. திருக்குறள்களை வைத்தே....
      சிரிக்க வைத்தீர்கள்...

      ReplyDelete
      Replies
      1. அப்படி என்றால் இன்னும் சில சிரிக்குறள்களை யோசிக்கலாம் போலிருக்கே :)

        Delete
    12. அப்போ மாற்றமே வராதோ தமிழ்நாட்டிற்கு??!!

      குறள்கள் ஜோக்காளியிடம் ஜொலிக்குதே.. இனிய சொலின்-இன்சுலின் அஹஹஹ்

      ரசித்தோம்..சிரிகுறள்களையும்..

      ReplyDelete
      Replies
      1. அண்ணா சொன்னது பலித்தால் மாற்றம் வரும் ,பலிக்காவிட்டால் மாற்றம் வராது :)

        நல்ல வேளை,யாரும் திருக்குறளில் இப்படி அலும்பு பண்ணலாமா என்று சொல்லலே ,நன்றி :)

        Delete