19 January 2016

மகளுக்கு அபார்ஷன்னு அப்பன் சந்தோஷமா சொல்வதா :)

ஜால்ரா சத்தம்  காதை கடிக்குதே:)


                               ''புது  மேனேஜருக்கு ஜால்ரா அடித்தால் பிடிக்காது போலிருக்கா , ஏன் ?''
                     ''அவர் ,கானல் நீர் தெரியுதுன்னார் ..ஆமா ,சார் ..அதுலே மீன் நீந்தி விளையாடுதுன்னு  சொல்லித் தொலைச்சிட்டேன் !''
                      
                                                                             
                           

வெளி நாட்டுக்கு போகுமுன் ......:)

                     ''நீ  குடும்பத்தோட  உலக  டூர்  போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''

                       ''கொள்ளைக்காரனுக்கு  நாமே  வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான் !''

                         மகளுக்கு அபார்ஷன்னு அப்பன் சந்தோஷமா சொல்வதா :)
                   ''அர்த்தம் தெரிஞ்சா மட்டும் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கப்பா !''
                ''இப்ப என்ன சொல்லிட்டேன் ?''
             ''நான் அபார்ட்மென்ட்டுக்கு போனதை 'அபார்சனுக்கு 'போயிட்டாள்னு சொல்லி இருக்கீங்களே !''
  1.                                            

படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா :)

        ''எப்ப பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக்கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
         ''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''

ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி :)
சென்ற ஆண்டு ஒட்டிய உள்தாளே மீதம் இருப்பதால் ...
செவ்வாயில் மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி என்பதை விட முக்கிய செய்தியான 
'குடும்ப அட்டையில்  உள் தாள் ஒட்டும் பணி 'என்ற செய்தி 
இந்தாண்டு நம்ம ஊர் மீடியாக்களில் இல்லாமல் போய்விட்டது:)

20 comments:

  1. கானல் நீர்ல... கானல் மீன் விளையாடுறது சகஜம்தானே!

    இந்தக் கொள்கையில்லாத... கொள்ளைக்கூட்டணிய வளர்க்கக் கூடாதில்ல!

    நம்ம ‘போர்சனு’க்குப் போலாங்கிறதப் ‘போஸ்ட்மாட’த்திக்கு போலாங்கிறிங்களேப்பா...! என்னப்பா இப்படி பண்றிங்களேப்பா...!

    படம் பிச்சிக்கிட்டு ஓடப்போவுது... பாருங்களேன் துண்டக்காணாம்... துணியக் காணாமுன்னு தலை ‘தெறிக்க’ ஓடப் போறாரு...!

    நல்ல வேளை... செவ் வாயில் குடும்ப அட்டை தாளை வார்த்தீங்க...!

    த.ம.1






    ReplyDelete
    Replies
    1. இது அவருக்கு ஏனோ புரிய மாட்டேங்குதே:)

      என்ன செய்றது ,களத்திலே அவங்கதானே நிற்கிறாங்க :)

      அப்பனுக்கு ஏத்த மகதான் :)

      அதான் ,விருது எல்லாம் கொடுத்தாங்களே,மக்கள் ஏன் பார்க்கப் போறாங்க:)

      சரித்திரச் சாதனைதான் ,போங்க :)

      Delete
  2. வெள்ளைக் காக்கா பறக்குதுன்னா Familyயோட பறக்குதே என்று சொல்பவனோ!

    இது ஜோக் இல்லை. நிஜம்.

    அட இங்கிலீஷே...!!

    துட்டு கையில், உச்சி வெய்யில், துண்டு தலையில்!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. இந்த உண்மை விளம்பியை மேனேஜர் உதாசீனப் படுத்தி விட்டாரே :)

      நடப்பு அப்படித்தானே:)

      ஷே இல்லே ,சே :)

      இடுப்பில் ,துண்டைக் கட்டா தன்மானச் சிங்கம் :)

      Delete
  3. பல செய்திகள் காணாமல் போய் விட்டது ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு யார் கவலைப் படப் போறாங்க ஜி :)

      Delete
  4. உச்சி வெயில் அப்பார்ட்மெண்ட் இல்லையில்லை அபார்சன் ஆகா
    ஒரே சிரிப்புப் போங்க!..
    எல்லாமே தான்....
    மகிழ்ச்சி....நன்றி.
    (வேதாவின் வலை)

    ReplyDelete
    Replies
    1. அப்பா வாயிலே அப்பார்ட்மெண்ட்ன்னு சொல்ல வராதோ :)

      Delete
  5. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. மீன் துள்ளி விளையாடுவதை ரசீத்தீர்களா ஜி :)

      Delete
  6. 01. ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது
    02. நியாயம்தானே..
    03. விளங்காமட்டை
    04. இப்பவே அனுபவம் எடுக்கிறாரோ....
    05. உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு கூட உலை வைக்கக் கூடும் :)

      எதுக்கு வம்பை விலைக் கொடுத்து வாங்கணும் :)

      வயசானாலே இப்படித்தான்:)

      தெரிந்தே துண்டு போட்டுக்குவாரா :)

      உண்மைகள் மறைக்கப் படுவது சகஜம்தானே :)

      Delete
  7. அனைத்தும் ரசித்தேன் நண்பரே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தான் தெரியுமே ,ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி:)

      Delete
  8. அபார்ட்மென்ட் அபார்ஷன் அஹஹஹ அடுத்தப் போர்ஷனுக்கு என்று சொன்னால் கூட இப்படிக் காதில் விழுந்துவிடுமோ..ஹிஹி

    உச்சி வெயில் ஹஹஹ்

    கானல் நீர் மீன் ஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதை அடுத்த அபார்சனுக்கு சொல்லிக்கலாம் :)

      உச்சி வெயில் காயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏனோ பாடுறவனும் இருக்கத்தானே செய்யுறான் :)

      கானல் நீரில் மீன் விளையாடும் காலமும் வருமா :)

      Delete
  9. Replies
    1. மூணுக்கும் முக்கோடி நன்றி :)

      Delete
  10. இன்றை கால கட்டத்தில் அர்த்தம் தெரியாமல் பேசுவதுதான் ஆங்கிலமாச்சே.....!!!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பேசாமல் இருப்பதே நல்லது இல்லையா :)

      Delete