2 January 2016

இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ :)

  பிரியாணியை  இப்படியுமா ரசிப்பது :)                 
                   ''என்னங்க சொல்றீங்க ,நான் செய்த பிரியாணி 
பிரமாதமா இருந்ததா ?''
                    ''நாலு நாளா டாய்லெட் போககூட மனசு வர மாட்டேங்குதே!''


'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
               ''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
          ''எது ?''
           ''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு ஃபுல்லை ஒரே  மடக்கிலே குடிப்பான்னு ஏன்  சொல்லலை !''



இந்த கொலையிலே நியாயம் இருக்கா :)

           ''பரோல்லெ  வெளியே போய் யாரைக் கொலைப் பண்ணிட்டு  வந்திருக்கே ?''
             '' அமோகமா வருவேன்னு .எனக்கு பெயர் வைத்தவரைத்தான் போட்டுத் தள்ளிட்டுவந்தேன் !''


இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ :)

              ''எதைச் நினைத்தாலும்  பெரிய அளவிலே செய்ய நினைக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
          ''குதிரைமேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் உட்கார முடியாதே !''

அளவிற்கு மீறினால் காபியும் போதைதான் !
           ''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''
            ''காப்பி நியூ இயர் 'ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறீயே !''

இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா :)

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு  
தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

18 comments:

  1. மன்னிக்கவும், முதல் ஜோக்கை நான் ரசிக்கவில்லை.

    நல்ல குடிம்பம்!

    ஹா... ஹா... ஹா...

    குண்டூசிக்கும் நமீதாவுக்கும் முடிச்சா!

    எங்கள் அம்மா எங்கள் பிறந்த நாட்களில் காபி தரும்போது காபி பர்த்டே என்று சொல்லித் தருவது வழக்கம்.

    மனமில்லை, பணமில்லை என்றில்லை. முடியவில்லை, வழி தெரியவில்லை!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் நாறுதா :)

      இப்படி எல்லாவற்றையும் மனைவியே காலி பண்ணினால் அவர்தான் என்ன செய்வார் :)

      ஜெயில் செல் நம்பர்கூட ராசி எண்ணாக ஆனதுதான் அவர் கோபம் :)

      முடிச்சு போட நமக்கென்ன எல்லையா இருக்கு :)

      அவர் தான் உண்மையில் முன்னோடி :)

      கடி பட்டால் அல்லவா அவர்களுக்கு வலி(ழி)தெரியும் :)

      Delete
  2. நாலு நாளா டாய்லெட் போககூட மனசு வரலைன்னா சொல்றீங்க... எ பிரியாணி... போகப்போக தெரியும்...பிரமாதம் மட்டுமில்ல... பிறமாதமும் அப்படித்தான் இருக்கப் பேவுது... நீங்க பாக்கத்தானே போறீங்க...!

    ‘நான்... புல்லானாலும் புருஷன்... கல்லானாலும் கணவன்னு... இருப்பேன்னு சொன்னாங்க...!’

    அமோகமா வருவேன்னு எனக்கு பெயர் வைச்சுட்டு... மோகமா... எ வீட்டுக்குள்ளேயே சுத்திக்கிட்ட இருந்தவனத்தான் போட்டுத் தள்ளிட்டேன்...!

    ஆமாமா... குண்டு ஊசி மேல் ஊட்காரலாமா ‘மச்சான்’...? நா போறேன் குதிரை சவாரி...!

    காப்பி கலரா இருக்குன்னு நம்பிடாதீங்க... காப்பி நியூ இயர் பார்ட்டிக்காக... பார்ட்டிங்க யாரும்... கலந்து வச்சிருக்கப் போறாங்க...!

    தண்ணீயில்ல... மட்டயாயி மறந்திருப்பாங்க... நமக்கு மனமில்லாம இருந்தாலென்ன... யாருக்காவது ஒருத்தருக்கு இருந்தாப் பத்தாதா...? ஒழிக்கிறதுக்கு...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ ,மாதக் கணக்கில் ஆகுமா :)

      பிள்ளையும் பாட்டிலைத் திறக்காமல் போனால் சரி :)

      நல்ல காரியம் செய்தீங்க ,அனுபவிங்க:)

      செலவாகுமா ,போதுமான பணம் இருக்கா :)

      ஐஸ் காபி மாதிரி லிக்கர் காபியும் வந்திடுச்சா :)

      கேட்டால், அதுக்குதானே தூய்மை இந்தியா திட்டம் என்பார்களோ :)

      Delete
  3. 01. இப்படியாமா ?
    02. இதெல்லாம் வாழ்க்கையில சகஜமப்பா...
    03. ஜோஸியரா ?
    04. உண்மைதே....
    05. அடடே..
    06. நியாயமான கேள்வி

    ReplyDelete
    Replies
    1. பிரியாணி என்றாலும் தொண்டை வரைதான் ,அப்புறம் அது நரகல்தான் என்பது அவருக்கு தெரியாது போலிருக்கே :)
      பொம்பளைக் குடிக்கிறதும் சகஜமா போச்சா ,வெளங்கிடும் :)

      இல்லை ,நேமாலஜிஸ்ட்டை:)

      மெச்சு வீட்டுக்கு ஆசைப்பட்டாதானே குச்சு வீடாவது கிடைக்கும் :)

      அடடே இல்லை ,இது காபி day:)

      கொசு மருந்து பிசினஸ் இங்கே கொடிகட்டி பறக்குதே ,எப்படி தடை செய்வார்கள் :)

      Delete
  4. ஜி நேற்றைய பதிவை இணைக்க முடியவில்லை ஆகவே இப்பொழுதுதான் வாக்களித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் முன்பு போல் இல்லை ,பிற தளங்களில் வாக்களிக்க படாதபாடு பட வேண்டியுள்ளது .பிறந்து இருக்கின்ற புத்தாண்டிலாவது ,தமிழ் மணம் முன்பு போல் மணம்வீச வேண்டுமென்று கூகுள் ஆண்டவரை வேண்டிக்குவோம் :)

      Delete
  5. சூப்பர் ஜோக்ஸ்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

      Delete
  6. //''காப்பி நியூ இயர் ''//

    அடடா...
    எனக்குத் தேநீர்தான் பிடிக்கும்...
    நான் எப்படி வாழ்த்து அனுப்புவது?
    .

    ReplyDelete
    Replies
    1. (பச்சை)தேநீராய் இனிக்கட்டும் புத்தாண்டு என்று சொல்லலாமா :)

      Delete
  7. ஐயோ.

    இனி பிரியாணி சாப்பிடும் போது இந்த ஜோக்கை நினைக்கக் கூடாது,. :)

    ``ஹஹஹா.


    அருமை பகவானே!

    தாமதத்திற்றுப் பொறுத்திடுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தாமதத்திற்கு எனத் திருத்திப் படிக்கவும்.

      நன்றி

      Delete
    2. மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்கக்கூடாது என்பதைப் போலவா ?ஆனாலும், குரங்கு மனம் அதைத்தானே நினைக்கும் :)

      Delete
    3. நீங்க சொல்லாவிட்டாலும் சரியாக வாசித்துக் கொள்வதும் இந்த குரங்கு மனம்தான் :)

      Delete
  8. குடி" மக்கள் (குடும்பம்) ஹும்...நல்ல குடிமக்கள்! தமிழ்நாட்டை வாழ வைப்பவர்கள் டார்கெட்டைப் பிடிக்கவைத்து..

    கடைசி முடியாது என்றில்லை. அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சமேனும் மக்கள் நலனில் நாட்டம் இருந்தால்தானே...

    ReplyDelete
    Replies
    1. குடிக்கச் சொல்லி மனைவி மக்களை டார்சர் செய்தால் ,டார்கெட் கூடத்தானே செய்யும் :)

      நாட்டமா ,மக்கள் கொந்தளித்தால் ஓட்டம் வேண்டுமானால் எடுப்பார்கள் :)

      Delete