(அன்பார்ந்த வலை உறவுகளே ...கருத்துரை எழுதும் போது ,ரோபோ வந்தாலும் ,வழக்கம் போலவே கருத்தை இடுங்கள் !)
''இப்போதெல்லாம் மணத்தக்காளி கீரை கிடைக்கவே இல்லையே ,ஏன் ?''
''எவனோ ஒருத்தன் 'மணத்'தக்காளிக் கீரையை தினமும் சாப்பிட்டா ,திருமணம் தள்ளிப் போகாதுன்னு ஆருடம் சொல்லி இருக்கானாமே!''
வண்டிய திருப்ப சிக்னல் கொடுத்தது தப்பா :)
''பஸ் விபத்து ஆனதுக்கு டிரைவர் ஆன ,நான்தான் காரணம்னு எப்படிச் சொல்றீங்க ,பாட்டி ?''
''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''
கணவன் மனைவியிடம் இப்படிச் சொன்னா என்னாகும் :)
''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''
''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''
''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு சொல்றதே இல்லையே ,ஏன் ?''
''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு தீர்ப்பு வந்திருச்சே !''
|
|
Tweet |
மணத்தக்காளிக்கு இப்படியும் ஒரு மகத்துவமா?
ReplyDeleteநம்மாளு பெயர் வந்த காரணமென்று எதைச் சொன்னாலும் நம்புவானே :)
Deleteஜோக்ஸை ரசித்து, தகவல்களைப் படித்து அறிந்து தமிழ்மண வாக்கிட்டு...
ReplyDeleteஇன்றைக்கு விடைபெறுகிறேன்! நாளை சிந்திப்போம்! (இன்ஷா அல்லா)
ரோபோலாம் வரலங்க....நாளை சிந்திப்போம் இல்லை, சந்திப்போம்!
Deleteரோசக்கார ரோபோ போலிருக்கு,அழையாதார் வீட்டுக்கு வந்ததே தப்புன்னு போயிண்டே:)
Deleteஅதென்ன திடீர்னு இன்ஷா அல்லா?நாம் சந்திப்புக்கு கூகுள் ஆண்டவரின் தயவு போதுமே :)
திருமணம் ஆனவங்க மணத்தக்காளிக் கீரையே இல்லாம பண்றதாச் சொல்லிக்கிறாங்க...!
ReplyDeleteஎதிர்த்து வண்டி வருது... நின்னு பொறுமையா வாங்கன்னு கையை கீழே ஆட்டறதுக்குப் பதிலா... வண்டிய போகச்சொல்லி கைய மேல ஆட்டினா... மேல போகாம...?! எப்படியோ ஒரு கை பாத்திட்டாய்...!
நீங்க மண்ணுங்க முதலாளி ...! பச்ச மண்ணுங்க... அதுவும் களிமண்ணுங்க...!
ரெண்டுபேத்தையும் அமெரிக்காவில செட்டில் ஆகச் சொல்ல வேண்டியதுதான்...!
‘குடிமகனே... பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...’
என்று காவலர் கதையை எப்படியாவது முடிப்பதிலேயே கவர்மெண்ட் கவனமா இருக்குதோ...?! அரசு அன்றே கொல்லும்...!
‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே... அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...’ சொர்க்கம் லோகத்தில்தான் இருக்கு...!
த.ம.2
இரண்டாம் கல்யாணம் ஆயிடுமோன்னு பயமா :)
Deleteநல்ல வேளையாக,கிழவியை மேலோக்கம் அனுப்பாமல் விட்டாரே :)
பச்சை நிற களிமண்ணு இருக்கா :)
செத்தாலும் அரசைக் குறைச் சொல்லலே ,தன்மானச் சிங்கம் :)
குரங்கு மாதிரி பழத்தைப் கையால் தொடாமல் சாப்பிட்டால் சுவர்க்கம் இங்கேதான் :)
அங்கே போய் அரசியல் பண்ண முடியாதே :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
வாழைப் பழச் சூறை ,ரசிக்க முடியுதா :)
Deleteஇப்படி தேவை தானா சொர்க்கம்...?
ReplyDeleteஎதை எதை பக்தியாக நினைப்பார்களோ ,தெரியவில்லை :)
Deleteமுதலில் சிரிக்க வைத்தீர்கள். அடுத்து சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteத ம 6
சிந்திக்காமல் வந்தால் சிரிப்பு ,சிந்திக்க வைத்தால் அது சிரிப்புக்குரிய விஷயமில்லைன்னு தோணுதே :)
Deleteசிரித்து ரசித்தேன்.
ReplyDeleteசெவ்வாய்க்கு ராக்கெட் விட்டாலும் செவ்வாய்க் கிழமை விடமாட்டோம் நாள் பாப்போம் இல்ல
செவ்வாய் தோஷம் கழிய செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும் நாம திருந்தவே மாட்டோம் :)
Deleteமனத்தக்காளி அல்சரை போக்கும் மகா மருத்துவம் ஆச்சே.... அதுக்கா வந்த சோதனை.....
ReplyDeleteஅவனவனுக்கு வலி வந்தால்தானே அதோட பலன் தெரியும் :)
Deleteஇரண்டாவது அயிட்டத்தை வாயில் கவ்வ சொல்லணும் ஜி
ReplyDeleteஉடனே பரலோக ப்ராப்தி கிடைக்குமே
தம +
நிகில் குறித்து சில செய்திகள்
அதானே ,நல்ல ஐடியாவா இருக்கே :)
Deleteநிகிலை ,சிறிய வயதில் இருந்தே அறிந்தவன் என்பதால் மிகவும் வேதனைப் பட்டேன் !
நிகில் பவுண்டேசன் மூலமாய் நல்லதோர் சேவையைத் தொடர்ந்து வரும் நண்பர் .சோம .நாகலிங்கம் ,திருமதி .மலர்க்கொடி நாகலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !
பாட்டியின் கவனிப்பு ஹா... ஹா...
ReplyDeleteபாட்டிக்கு கண்ணு ரொம்ப கூர்மைதான் :)
Delete01. ஆஹா இவ்வளவு நாளா இது தெரியாமல் இருந்திட்டேனே...
ReplyDelete02. நியாயமான வார்த்தை
03. இனிமேல் சொல்லவே மாட்டான்
04. இதை அங்கேயா ? கொண்டு போறதூ....
05. கடிதத்திலாவது நல்லது செய்தவருக்கு அஞ்சலி செய்வோம்.
06. அடடே பூவைப் பறிக்கக் அரிவாள் எதற்கு ?
முதல் கல்யாணத்துக்கு மட்டும்தான் இது பலன் அளிக்குமென்று கேள்வி :)
Deleteஓட்டுனரே என்றாலும் தப்பு தப்புதானே :)
நல்ல வேளை.புண்ணாக்கு கொடுக்காம போனாரே :)
நல்ல தலைவர்தான் :)
அஞ்சாமல் இன்னும் குடிப்போர் விழித்துக் கொள்வார்களா:)
உங்களோட லட்சியத் தலைப்புக்கு வந்து விட்டேனா :)
அனைத்தும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteபாட்டியின் சொல்லைத் தட்டாமல் ரசிக்க முடியுதா :)
Deleteஅட! மணத்தக்காளிக்கு அடிச்சிருச்சு யோகம்னு சொல்லுங்க! சிறப்பான நகைச்சுவை பகிர்வு! நன்றி!
ReplyDeleteசமீப காலமா ,நிலவேம்புக்கு அடித்த யோகம் மாதிரியா :)
Deleteகுடிமகன்கள் பாடம் படிக்கத்தானே வேண்டும்!
ReplyDeleteகாலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
காலம் ஒருநாள் மாறும் ,கவலைகள் யாவும் தீருமா :)
Deleteகீரைக்கு வந்த ரோதனை.சிரிப்புதான் ஜீ!
ReplyDeleteஅதை ,தனி மரம் நீங்க சொல்றதே சரி :)
Delete