13 January 2016

'அந்தரங்கம் 'புனிதமானதா :)

 அதிகாலை  தூக்கம் அதிக சுகம்தானே :)             
                   ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது சொல்லக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
           ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே  .அதான் சொல்லலே  ?''

'அந்தரங்கம் 'புனிதமானதா :)

                                     ''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
                                  ''ஆரம்பமே அந்தரத்திலான்னு  யோசனையா இருக்கு !''


இவன் கிரிமினல் லாயரானால்,இவன் காதலி மனைவி ஆகமாட்டாள் !

           ''என் பையன் எதிர்காலத்தில் கிரிமினல் லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
                 '1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !''  

 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BP  ஏறுதா :)              

             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ    கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''

                    ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''



சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)

         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் :)
அதிகாலை உமிழ்நீர் இரைப்பைக்கு நல்லது !
வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !
  1.  

13 comments:

  1. சினப்பெருஞ்சுவரில் இருந்து பார்த்தால் நிலா தெரியும் என்பது அரிய கண்டு பிடிப்பு!
    கடைசி ஆலோசனை நச்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையும் கூட :)
      ஆலோசனை சொல்ற நானே ஒன்றிரண்டைக் கடைப் பிடிக்கமுடியலே :)

      Delete
  2. தினமும் காலை பல் தேய்த்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நீண்ட நாள் வழக்கம் எனக்கு. ஜோக்ஸ் அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதை செய்தாலே போதும் நோய்கள் வராது என்கிறார்கள் ,இயற்கை நல மருத்துவர்கள் :)

      Delete
  3. எங்கயாவது தண்ணி தெளிக்கலைன்னா ஒனக்குத் தூக்கம் வராதா...?

    வாழ்றது நம்ம கையில இல்லன்னு சொல்லுவாங்க... போறது போப்போறோம்... விமானத்தினல போனா... யாரும் ‘மானம் கப்பல் ஏறிடுச்சுன்னு’ சொல்ல முடியாதில்ல...அதுக்குத்தான்...!

    லாயர்... கிரிமி லேயரா வருவான்னு சொல்லுங்க...!

    கல்யாணத்துக்கு முன்னாடியே பஞ்சரா...? பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு அலையப் போறத்துக்கு இது அறிகுறி...!

    எதுக்கு இப்ப... குட்டிச்சுவருக்கிட்ட நின்னுக்கிட்டு கத்திக்கிட்டு இருக்கீங்க...! அப்பளத்தப் பாத்து நிலா தெரியுதுன்னு சொல்றீங்க... மொதல்ல ஒங்க கண்ண டெஸ்ட்டு பண்ணுங்க...!

    அதிகாலை எச்சில் இரைப்பைக்கு நல்லதுன்னு... காலங்காத்தாலையேவா...?!

    த.ம.2





    ReplyDelete
  4. அந்தரங்கம் ! அருமை!

    ReplyDelete
  5. இன்று மாசப்பிறப்புன்னு எழுந்தபின் தானே சொல்ல முடியும் அந்தரத்தில் அந்தரங்கம் இருக்குமா சையான கேள்விதானே கிரிமினல் லாயர்தான் கேட்கவேண்டுமா பீப்பி பீப்பி பங்சரா?சீனப்பெருஞ்சுவர் ஜோக்கா தெரிந்ததுதானே. நல்ல அறிவுரை

    ReplyDelete
  6. நல்லாவே யோசிக்கிறீங்க! அருமையான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. 01. அனுபவம் பேசுது
    02. ஹாஹாஹா ஸூப்பர் கையெழுத்தை வாங்கிட்டு தள்ளி விட்ருவாளோ...
    03. அறிவுக்கொழுந்தூ
    04. அந்த நேரத்துல பீப் பாடலைப் போடலாமே...
    05. தேவகோட்டை எங்க வீட்டு மொட்டை மாடியில நின்று பார்த்தாலும் நிலா தெரியுதே...
    06. நல்ல சிந்தனை ஜி

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை
    த ம 7

    ReplyDelete
  9. அந்த அரங்கிலும் மட்டுமல்ல எந்த அரங்கானாலும் உங்களின் சிரிப்பு மழைதான்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  10. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் ஜி... வாழ்த்துக்கள் த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete