4 January 2016

ஓடிப் போன மனைவிக்குமா மரியாதை :)

எல்லார்கிட்டேயும் எல்லாமும் சொல்லக் கூடாது :)              

               ''கஷ்டப்பட்டு வேலை  செய்வதை விட இஷ்டப்பட்டு செய்வதே நல்லதுன்னு ,மனைவிகிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''

               ''இனிமேல் சமையலை நீங்களே பார்த்துக்குங்க என்று சொல்றாளே !''

விசுவாசமிக்க இன்ஸ்பெக்டரோ :)
           ''வீட்டிலே நுழைந்தது நாலு கொள்ளைக்காரங்க, ஒருவரை மட்டும் அந்த இன்ஸ்பெக்டர் சுட்டுப் பிடிக்க என்ன காரணம் ?''
           ''மற்ற மூணு பேரும் ஒழுங்கா மாமூல் கொடுக்கிறவங்களாமே!'' 


இவங்க வேலை என்னவாக இருக்கும்:)
                ''அடிக்கடி மந்திரி சபை மாற்றம் பண்றதாலே நம்ம கட்சியிலே புது அணி ஒண்ணு உருவாகி இருக்கா ,சபாஷ்...அணி பேரென்ன ?''
         ''முன்னாள் மந்திரிகள் அணிதான் தலைவா !''
                                                     

                                                               
  1. இந்த தொழில்லே கெட்டிக்காரனா இருந்தென்ன செய்ய:)

  2.                ''அந்தக் கொள்ளைக்காரன் தற்குறி என்றாலும் தொழில்லே கெட்டிக்காரன்னு எப்படி சொல்றீங்க ?''

  3.                      ''ஜெயில் கம்பிகளை எண்ணத் தெரியாதாம் ,ஆனால் எப்படிப்பட்ட  ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவானாமே  !''






  4.                                                           
  5. ஓடிப் போன மனைவிக்குமா   மரியாதை :)

  6.                    ''மனைவி பேரைக் கேட்டா 'காலாவதி''ன்னு
  7. ஏன் சொல்றே ?'' 

                           ''ஓடிப் போன கலாவதியை வேற எப்படிச் சொல்றது?''

                                                            

  வலி நிவாரணி இதைவிட வேறுண்டா:)


பிரசவத்தில்  பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..


சிசுவின் அழுகுரல் ஓசை போக்கியது ...


தாயின்  பிரசவ வலியை !





  •                                      
  • 20 comments:

    1. கஷ்டப்பட்டோ... இஷ்டப்பட்டோ... இப்ப நஷ்டப்பட்டது நான்தான...! நாங்கூட் புதுசா... வேறஏதும் சொல்றாளேன்னு நெனச்சேன்...!

      வேலையில சேர்ந்ததில இருந்து யாரையுமே சுட்டதில்லையாம்... துப்பாக்கிய சோதிச்சு பார்த்திருக்காரு...!

      பதவி மாற்றம் செஞ்சசுனால ஒங்க அணியில இருந்து டி.வி.யில கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக நேர்படப்பேசுறதுக்கு யார் வர்றீங்கன்னு கேக்குறாங்க...?

      படிக்காத மேதை... சட்டத்தையே வளைடச்சிடுவான்...!

      ஓடிப் போன கலாவதி... காலாவதி ஆயிட்டாளா...? பரவாயில்ல... திரும்பி வந்தா காலால் மிதி...!

      மறுபிறவி...! அடுத்து மறுபிறவி எடுக்க இன்னும் பத்துமாதம் காத்திருக்கனுமா...?

      த.ம.2







      ReplyDelete
      Replies
      1. வீட்டிலே நளச் சக்கரவர்த்தி நீங்கள்தானா :)

        அதுவும் வேண்டாதவனை மட்டுமே சுடுது :)

        கவலையில்லாமல் பதில் சொல்லலாம் ,பதவிதான் இல்லையே :)

        அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாமா :)

        மிதி வாங்கணும்னு அவளுக்கு விதியா :)

        மறு பிறவிக்கு எப்படியோ ?அடுத்த சிசுவுக்கு பத்தே மாசம் :)

        Delete
    2. ஹா... ஹா... ஹா...

      இப்படியும் ஒரு கடமை உணர்ச்சியா!

      அப்படியே நீக்கப்பட்டோர் சங்கம், இனோவா திருப்பிக் கொடுக்காதோர் சங்கம்லாமும் அமைச்சுடலாமே!

      தொழில் நேர்த்திக்கு படிப்பறிவு அவசியமில்லை!

      ஹா..... ஹா.... ஹா.... ஹா...

      அருமை.

      ReplyDelete
      Replies
      1. வாயைக் கொடுத்துட்டு மாட்டிகிட்டாரா:)

        ஆனால் மாமூல் அதை தடுக்குதே :)

        இன்னோவாவுக்கு நல்ல விளம்பரம் தமிழ் நாட்டில் மட்டுமே :)

        அனுபவ மேதையாச்சே அவர் :)

        இவனுக்கு மட்டும்தான் அவள் காலாவதியாகி போனாள்:)

        அழுகுரலும் தாய்க்கு அமிர்தமாகுமோ :)

        Delete
    3. Replies
      1. கலகவதி என்று கூட சொல்வாரோ :)

        Delete
    4. Replies
      1. இது சரியான வலி நிவாரணி தானே :)

        Delete
    5. அவர் கஷ்டப்பட்டு செய்ததை இவர் இஷ்டப்பட்டு செய்கிறார் என்று மனைவிக்குத் தெரிந்து விட்டதே படிப்பு இல்லாவிட்டால் என்ன தொழில் தெரிந்திருக்கிறதே கலாவதி காலாவதி சொற்சிலம்பம் மற்றதையும் ரசித்தேன்

      ReplyDelete
      Replies
      1. கஷ்டமும் இஷ்டமும் இனி தெரிந்து விடும் :)
        கம்பி எண்ணத் தெரியாட்டி என்னா,பணம் பண்ணத் தெரியுதே :)
        ஆகா ,சொற்சிலம்பம் ஆட தமிழில்தான் எத்தனை சொற்கள் :)

        Delete
    6. 01. வாயைக்கொடுத்து வாங்கி கொண்டான்.
      02. சட்டம் தன் கடமையை செய்யும்
      03. நேர்மையானவர்களாக இனியாவ’’தூ’’..........
      04. உழைப்பே உயர்வு தரும்.
      05. அருமை ஜி

      ReplyDelete
      Replies
      1. சரியான நுணல் வாயனோ :)
        ஆனால் இவர் கடமையை செய்த மாதிரி தெரியலியே :)
        இனிமேலா ,நடக்கவே நடக்காது :)
        திருடுவதும் உழைப்பா :)
        காலாவதியை மறந்து விட்டீர்களே :)

        Delete
    7. ஹஹஹாஹ்....

      கலாவதி காலாவதி ஹஹ்ஹஹ்ஹ்

      ரசித்தோம் ஜி

      ReplyDelete
      Replies
      1. கலாவதி திரும்ப வந்தாலும் ஏற்றுக்க மாட்டார் போலிருக்கே :)

        Delete
    8. அனைத்தையும் ரசித்தேன்.....

      ReplyDelete
      Replies
      1. குறிப்பா ,பிரசவ வலியையும்தானே :)

        Delete
    9. // ''ஓடிப் போன கலாவதியை வேற எப்படிச் சொல்றது?''//

      மனைவி பெயரை,
      பனுமதி,
      பனுமாதி,
      பானுமாதி...
      என்றெல்லாம் எழுதுபவரிடம் விசு கலாட்டா செய்வாரே, குடும்பம் ஒரு கதம்பம் படத்தில்? அது நினைவில் வந்தது...

      ReplyDelete
      Replies
      1. என் மனைவி நான் காலை எங்கே வேண்டுமானாலும் போடுவேன் என்று விசு சாருக்கு முன்னாடியே யாரோ சொன்னதாக நினைவு :)

        Delete
    10. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

      - சாமானியன்

      எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
      http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

      ReplyDelete
      Replies
      1. இரட்டிப்பு நன்றி ,காரணம் ..நீங்கள் வாழ்த்து சொன்ன இன்று ,ஜோக்காளி தமிழ் மண முதல்வன் ஆகி விட்டானே :)

        Delete