11 May 2016

பெண்ணிடம் ,இருட்டிலும் ஒளிர என்னதான் இருக்கு :)

தேர்தல் கமிசன் இதுக்கு என்ன செய்யப் போவுது :)
             ''வீட்டுக் கதவிலே 'அட்வான்ஸ் புக்கிங் செய்யப் படும்'னு  அவர் ஏன் எழுதியிருக்கார் ?''
             ''அவர் வீட்டிலே இருக்கிற ஆறு வோட்டையும் ,அதிகப் பணம் தர்ற கட்சிக்கு மட்டுமே போடுவாராம் !'' 
நல்லாத்தான்யா பயமுறுத்தி வைச்சிருக்காரு :)
          ''பொறந்த வீட்டை நீ மறக்கலைன்னா விபரீதம் ஆயிடும்னு  , உன் வீட்டுக்காரர் மிரட்டுறாரா .ஏண்டி  ?'' 
          ''உனக்கு பொறந்த வீடு ,புகுந்த வீடுன்னா  ,எனக்கும் இருக்கும் வீடு ,இருக்கப் போற வீடுன்னு  ஆயிடுங்கிறாரே !''
பெண்ணிடம் ,இருட்டிலும் ஒளிர என்னதான் இருக்கு  :)
          ''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு ஷேக்ஸ்பியர்  என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார் ?''
          ''அடிக்கடி ஃபியூஸ் பிடுங்கிற  EB ஆபீசர் ஒருத்தர் ,பக்கத்து வீட்டிலேதான் இருக்கார் ,அவரிடம் கேட்டுச் சொல்றேன் !''

மரமண்டைக்கு புரியவே புரியாது :)
           ''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் உண்டான்னு ஏன் கேட்கிறீங்க ?''
           ''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு இருக்கீங்களே !''

19 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உடனே கருத்துரையை 'டோர் டெலிவரி' செய்தமைக்கு நன்றி ஜி :)

      Delete
  2. ஆண் லைன்ல வந்திருக்கார்... ஓவர்...!

    மாப்பிள்ளைக்கு ஏன் புகுந்த வீடு இல்லைன்னு கேக்குறாரு...! ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியா...?

    ஃபியூஸ் போன பல்ப்பு எங்கே இருந்தா என்னவாம்...!?

    பரவாயில்லையே... ‘டெலிவரி’ வசதிகூட உண்டா...? டாக்டர் செலவு மிச்சம்...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,பணப் பட்டுவாடா ஆன் லைனில் செய்தால் மாட்டிக் கொள்வார்களே :)

      அதான் ,இவர் புதிய பாதை வகுத்து விட்டாரே :)

      நம்ம ஆள் அதையும் எரிய வைத்து விடுவாரே :)

      அதுக்கென்ன ,கிளினிங் சார்ஜ் வசூல் செய்தா ,சரியாய் போச்சு :)

      Delete
  3. அருமை நண்பரே
    ரசித்தேன், சிரித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. இரு தேனுக்கும் நன்றி :)

      Delete
  4. தேர்தல் நகைச்சுவை மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இந்த சிரமம் எல்லாம் வேண்டாமென்று கரண்ட்டை ஆப் செய்து பணத்தைக் கொடுக்கிறாங்கலாமே:)

      Delete
  5. 01. அடடே இப்படியுமா இங்கே நானும் எழுதிப் போடலாமா ?
    02. மிரட்டல் வித்தியாசமாக இருக்கே....
    03. ஹாஹாஹா அவருக்கும் தெரியுமோ ?
    04. நியாயமான கேள்விதான்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் மழை பெய்தால் அபுதாபியில் குடை பிடிக்கலாமா :)
      எல்லாம் உற்சாக பானம் செய்ற வேலைதான் :)
      நமக்குத் தெரியலே ,அவருக்கு தெரிந்து இருக்கலாமே :)
      அடிக்கடி இப்படி நியாயத்தைக் கேட்டால் வாய்க்கரிசிதான் விழும் :)

      Delete
  6. சேக்ஸ்பியர் சொன்ன அர்த்தம் ஈபி ஆபிசர்க்கு எப்படி தெரியும்.????அவர் காலத்திலும் இந்த ஆபிசர்தான் பீயூஸ் புடுங்கினாரா...?????

    ReplyDelete
    Replies
    1. தான் மட்டும் ,சேக்ஸ்பியர் சொன்னதன் அர்த்தத்தை உணர்ந்தால் போதாது என்று பொது நலத்துடன் சேவை செய்யும் ஈபி ஆபீசருக்கு தெரியாமல் இருக்காதே :)

      Delete
  7. இருட்டிலும் ஒளிர என்னதான் இருக்குன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா :)

    ReplyDelete
  8. Replies
    1. வாக்கை உடன் போட முடிந்ததா ?இல்லை ,எட்டு போல் சுற்றிக்கொண்டே இருந்ததா :)

      Delete
  9. அனைத்தும் அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. சுடர் முகமும்தானே :)

      Delete