14 May 2016

காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)

 வானிலை அறிக்கை பொய்யாகலாம் :) 

         ''தேர்தல் அன்று  கன மழைப் பெய்யுமாமே !''
          ''பண மழையும் பெய்யும்னு  சொல்றாங்க !''
            

 

டாக்டரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லக்கூடாது :)
                  ''உங்களைப் பேச முடியாதபடி   டாக்டர் செய்துட்டாரா  ?அவர்கிட்டே நீங்க என்ன சொன்னீங்க ?''
                  ''நர்சை 'சிஸ்டர் 'ன்னு கூப்பிட சிரமமா இருக்குன்னு சொன்னேன் !''
 காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)
                ''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள் 
பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக 
அவளுக்கு தர வேண்டிய சம்பளத்தைத் தர மாட்டேன்னு சொல்றது நியாயமா ?"
           ''ஓடிப் போன பேஷண்ட் கட்ட வேண்டிய பில்லுக்கு ,அது
 சரியா போச்சே !''
புருசனுக்குத்தான் தலையெழுத்து :)
           ''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''
           ''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே 
எனக்கும் கொடுக்கிறாங்களே !''
சத்தமின்றி மூக்கு சிந்துவதும் ஒரு கலையே :)
அடுத்தவர் மூக்கு சிந்துவது மட்டுமே 
அபஸ்வரமாய் கேட்கிறது !

20 comments:

  1. பண மழை வரவை விட கோடை மழை வரவு பற்றிய அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போலவே எல்லோரும் நினைத்தால் மாற்றம் நிச்சயம் :)

      Delete
  2. Replies
    1. புருசனோட தலையெழுத்தைத் தானே:)

      Delete
  3. காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :

    சிரிப்பு தாங்க முடியல....

    ReplyDelete
    Replies
    1. கடனில் ஆரம்பித்த காதல் எங்கே போய் முடியுமோ :)

      Delete
  4. பண மழை தூவி வசந்தமாக வாழ ஊர்வலம் நடக்கின்றது...!

    டாக்டரைத் தவிர வேற எல்லாரும் சிஸ்டர்ன்னுதான் கூப்பிடனுமுன்னு தெரியாதா...?

    "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா" ன்னு பாடும் போது நெனச்சேன்...! என்னோட கிளினிக் டாக்டர் மேட்ரி மோனியாடிச்சே...!

    எஜமானி அம்மா புருசனும் நீயும் ஒன்னாயிருக்கிறது தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்...!

    விடுங்க... மூக்குன்னு இருந்தா சிந்து... பாடித்தான் ஆகனும்...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. வாக்காளர்களுக்கு சேர வேண்டிய 570 கோடி ரூபாய் பிடி பட்டு விட்டதே ,பண மழையும் சந்தேகம்தான் :)

      அதென்ன ,டாக்டருக்கு மட்டும் விதி விலக்கு :)

      ஒண்ணாந் தேதி வரைக்கும் கூட பொறுத்துக் கொள்ள மு டியலியோ :)

      அபாண்டமான குற்றச்சாட்டு சாப்பிட்ட சோறு கூட செரிக்காது :)

      சந்து முனையில் சிந்து பாடுவதை ரசிக்க முடியலையே :)

      Delete
  5. பண மழையை விட கோடை மழையையே அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. டெல்லியில் இருக்கும் உங்களுக்கு சல்லிக் காசு பெயரவும் வழியில்லையே :)

      Delete
  6. 01. இதுவும் நடக்கலாம் ஜி
    02. மனசுக்குள்ளே வைக்க வேண்டிய விசயம்
    03. கணக்கு சரிதான்
    04. அதானே புருசனும் நாமலும் ஒண்ணா ?
    05. காலம் முழுவதும் இப்படித்தானே...

    ReplyDelete
    Replies
    1. நடக்கும் என்பார் நடக்கும் :)
      வாய் விட்டு சொன்னதால் வாயை அடைத்து விட்டாரோ :)
      எல்லாமே கணக்குதானோ :)
      புருசனுக்கு ஒரு வீடு :)
      அது மட்டும் காதில் காதிலே நாராசமாய் விழுதே :)

      Delete
  7. அருமை அருமை இரசித்தேன் நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சத்தமின்றி மூக்கு சிந்துவதும் ஒரு கலையே,இதை ,எந்த கலை கல்லூரியில் கற்க முடியும் :)

      Delete
  8. வியாபார நுணுக்கம் தெரிந்த டாக்டர்

    ReplyDelete
    Replies
    1. கல்வியே வியாபாரம் ஆனபின் ,டாக்டரை சொல்லி என்ன செய்ய :)

      Delete
  9. வட்டி கடை நடத்திறவன் எல்லாம் கிளினிக் நடத்தினால் இப்படித்தான் கூலியும் அம்பேல் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. காசில்லை என்றால் ஒரு கிட்னியை சொல்லாம எடுத்துக்குவாரோ :)

      Delete
  10. டாகடர் ஆபரேஷன் எதுவும் செய்யாமல் இருந்தால் சரி

    ReplyDelete
    Replies
    1. பிரஷர் மட்டும் செக் செய்ய டாக்டர் எதுக்கு :)

      Delete