16 May 2016

வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா :)

  அரசு ஊழியர்கள் சொல்வார்களா ,வாங்க மாட்டோம் நோட்டு என்று :)               
                 '' தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைக்கப் பட்டுள்ள இந்த பொம்மையை ,தேர்தல் முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தால் நல்லதா ,ஏன் ?''
''காசு வாங்காமல் அங்கே உள்ளவர்களும் மக்களுக்கு சேவை செய்யட்டுமே !''

இந்த  பொருத்தம் அமைவது கஷ்டம் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  சொல்றீங்களே ஏன் ?''
              ''தூக்கத்திலே  கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  போறாங்களே !''
' டிபன் ' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?
          ''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
         ''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா :)
      ''தம்பிகளா ,எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
      ''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் :)
   சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
   சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !

14 comments:

  1. அதான் வயசுப் பயலுக வாய கிண்டிட்டாங்களே
    அப்புறம் ஏன் கிண்டலாமானு கேக்கறது....

    ReplyDelete
    Replies
    1. கிண்டக் கூடாதுன்னுதான் :)

      Delete
  2. ‘காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா... கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே...!’

    ‘தூக்கத்தில் பாதி…தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்...?’

    போட்டுத் தாக்கு... ஏய்... போட்டுத் தாக்கு...!

    ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி... பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க...’ ரோஜாப்பூ ரவிக்கைக்காரி

    பாடங்களைக் கேட்காமலே... தாஸ் தாஸ் என்னப்ப தாஸ் தாஸ்... பாஸ் பாஸ் நீஎப்ப பாஸ் பாஸ்...? சா தீ...!

    த.ம. 1










    ReplyDelete
    Replies
    1. நியாயமான முறையில் கைப்பற்ற நினைத்தால் தவறில்லைதானே :)

      ஒரு பாதிக்கு ஏக்கம் என்றால்தான் பிரச்சினை :)

      டிபன் ஆசைக் காட்டியா போட்டுத் தாக்குவது :)

      ரோஜா என்றாலும் ,ரோஜாப் பூ ரவிக்கைக்காரி என்றாலும் அழகுதான் :)

      இந்த தாஸ் ,எப்பவும் பாஸாக முடியாது :)

      Delete
  3. Replies
    1. தஞ்சாவூர் பொம்மை யாரையோ சுட்டும் விதமாய் இருக்கே :)

      Delete
  4. ரசித்தேன்.அடுத்து தம வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த பின் மனமே வாக்களிக்க மறக்காதே என்று ஊக்கம் தந்ததற்கு நன்றி :)

      Delete
  5. வயசுப் பயலுங்க வாயை கிண்ித்தான் பார்ப்போமே.........

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் ,கோவப்படக்கூடாது ,சரியா :)

      Delete
  6. நல்ல ஜோடிப் பொருத்தம்தான் . அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்ன பொருத்தம் .நமக்குள் இந்த பொருத்தம் என்று தம்பதிகள் பாடிக்கிட்டே நடப்பதாக தெரிகிறது :)

      Delete

  7. 01. வைக்கலாம்தான்... ஆனா..
    02. கடைசி வரைக்கும் இப்படியே..... போகட்டும்
    03. கஷ்டம்தான்...
    04. வாயைக்கொடுக்காமல் போயிருக்கலாம்...
    05. உண்மைதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதியும் ,அரசு ஊழியனும் திருந்த மாட்டான் ,அப்படித்தானே :)
      சுடுகாடுக்குமா :)
      ஐந்தடுக்கில் உள்ளதை தின்பதுமா :)
      பசங்களுக்கு என்ன பதில் சொன்னாரோ :)
      நாளை தெரிந்து விடும் இவர்களின் லட்சணம் :)

      Delete