13 May 2016

ஞாபகம் வருதா ,அந்த குருவின் லீலைகள் :)

                ''குருவின் மகிமை  என்கிற  புத்தகம்  விற்பனையே ஆகாமல்  எல்லாம் ரிடர்ன்  ஆயிடுச்சே  ,என்ன செய்யலாம் ?''

              ''குருவின் லீலைகள் என்று  தலைப்பை மட்டும் மாற்றி வெளியிடுங்க ,செம சேல்ஸ் ஆகும் !''

 மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் :)         

                ''திருட்டுத் தொழிலை விடப்போறீயா ,ஏண்டா  ?''

               ''பொதுப் பணித் துறையிலே கமிசன் 45சதம் ஆகிப் போச்சு ,மாமூலையும் உயர்த்தியே ஆகணும்னு 'எஜமானர்கள் 'கேட்கிறாங்களே  !''

அப்பன் திருந்தாமல் பிள்ளை திருந்துமா :

           ''திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''

           ''முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''

அக்னி வெயிலினால் வந்த மறதி :)

           ''இப்படிகோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு  வந்திருக்கீங்களே ,கொண்டு போன குடை  என்னாச்சு ?''

           ''இதோ இருக்கே ...கோடை வெயிலை  மறைக்கத்தானே ,அதை கொண்டு போனேன் ?''


இழப்பதற்கு ஒன்றுமில்லையா ,இதை தவிர :)
வெட்டப் பட்டு மடியில் விழும் முடிகளைப் பார்க்கையில் ,,,
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால் 
இன்றைய ஆளும் 'மன்னர்களுக்கு '...
பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?

21 comments:

  1. ஆமாம், தலைப்பில் இருக்கிறது மகிமை!

    கட்டுப்படி ஆகலையோ...

    அடச்சே... இவ்வளவுதானா!!!

    ொ... வெயிலுக்கு தனி குடை, மழைக்குத் தனி குடையா!

    அதானே!

    ReplyDelete
    Replies
    1. கவர்ச்சியா எப்படி தலைப்பு அவரிடம்தான் கேட்கணும் :)

      நொங்கு எடுக்க ஒருவன்,நோகாம திங்க இன்னொருவனா :)

      சான்ஸே இல்லை பிள்ளைத் திருந்த :)

      அவர் நினைப்பு அப்படித்தான்:)

      அதான் ,கத்தரி வெயில்லேயும் அவங்களை அலைய வைக்குது :)

      Delete
  2. Replies
    1. வண்ணமயக் குடையுயையும்தானே :)

      Delete
  3. ‘மன்மத லீலையை வென்றவர்...!’

    அட... திருட்டுப் பய புள்ள... நீ திருட்டுத் தொழிலை விட்டா... 'எஜமானர்கள் ' அதான்...மானங்கெட்டவர்கள் எப்படிப் பிழைப்பது...?

    ‘மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்.’ எனச் சொல்ல வைத்து விட்டாயே...!

    கோடை மழை வருது... கோடை மழை வருது... கோடைமழை குடை கொண்டு வா... இந்தா கோடை வெயில் குடை...!

    முனிவரைப் போல எல்லாம் துறந்து... மக்களுக்காகத் தவசியாக வாழ்கிறேன்... வாழ்க வளமுடன்... டே...! யாரங்கே... மாதம் மும்மாரி பெய்கிறதா...?

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. அவரை வென்றது மன்மத லீலை :)

      உன்னை நம்பி நாலு குடும்பம் இருக்கேடா :)

      குறளின் படி வாழும் வாரிசுகளோ :)

      ஆகா ,குடையே வேண்டாம் நனையுறேன் :)

      அந்த,புரத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் மன்னா :)

      Delete
  4. 01. அருமையான யோசனை
    02. இதுவும் நல்ல யோசனை
    03. வாழைப்பழமா ?
    04. ஹாஹாஹா
    05. கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. காலத்துக்கு ஏற்ற மாதிரி தலைப்பும் இருக்கணுமோ :)
      தொழிலை விடுவதா ,வேண்டாமா :)
      அதுதானே ஈஸியா உரிக்க வருது :)
      நனையும் பொது கூட குடை ஞாபகம் வரலையாமே :)
      ருசி கண்ட பூனை விடுமா :)

      Delete
  5. அருமை ஐயா.இரசித்தேன்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. முடியாட்சி உண்மைதானே :)

      Delete
  6. உண்மைதான் தலைப்பு கவரச்சியாக இருந்தால் புத்தகம் விற்க வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் மட்டுமில்லை ,நம் பதிவுகளின் தலைப்பும் தான் :)

      Delete
  7. சூப்பர்தலைப்பு... விரைவில்“ அடுத்த பதிப்பும் வந்துவிடும் போலிருக்கே...தங்கள் அய்டியாவே அய்டியாதான்

    ReplyDelete
    Replies
    1. லீலை என்ற இரண்டு எழுத்துக்குத்தான் எத்தனை மகிமை :)

      Delete
  8. Replies
    1. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பது உண்மைதானே :)

      Delete
  9. வாழைப்பழ காமெடி சிரித்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இவனெல்லாம் ஒரு அப்பனா என்று கேட்கத் தோணுதே :)

      Delete
  10. Replies
    1. குரு என்பதையே கேவலப் படுத்தி விட்டாரே ,என்ன செய்யலாம் :)

      Delete