30 May 2016

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)

இங்கே கிடைக்காதுன்னா வேறெங்கே கிடைக்கும் :)             
               ''விஜய் மல்லையா பெங்களூர்காரர்னு சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே  ?''
            ''நீதிபதி குமாரசாமி அங்கே இருக்கிறதை மறந்துட்டு ,இந்தியாவில் எனக்கு நீதி கிடைக்காதுன்னு சொல்லியிருக்காரே !''
ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)
            ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை, எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
             ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''
அப்படி  என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?
       '' மூக்குக்கு மேலே கோபம்  வரும் சரி ,உங்க மனைவிக்கு  அதுக்கும் மேலே  கோபம் வருதா ,எப்படி ?''
        ''நெற்றி மஞ்சள் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''
ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பாரோ ?
            '' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக்  கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப்  போறீங்க ?''
             ''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன்  !''
பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS நினைவுக்கு வருகிறாரா  ?
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

24 comments:

  1. நீதிபாதி சாமி... இப்ப இல்லையே... அதச் சொல்லலையே...! ஒங்களோட மல்லுக்கட்ட முடியல...! பதி பக்தி எப்படி இருக்குன்னு படத்தில பாத்திங்களா...? இப்பத்தான் பாதுகாப்பு... கைக்காப்பு எல்லாம் எதுக்கு...?

    ‘நைட் டூட்டிக்கு வர்றேன்னு...’ அவுங்க மனைவிக்கிட்ட சொன்னதச் சொல்றாரு...! நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கிட்டீஙக...!

    இதுக்குத்தான் மஞ்சள் பத்திரிக்கை... பொட்டெல்லாம் பார்க்கக்கூடாது... கண் சிவந்தால் மண் சிவக்கும்...நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே...!

    சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி...! மீண்டும் கோகிலா இல்லத்திற்கு ‘கோகிலா 2’-ன்னு வைக்கலாமே...!

    பாவத்தோடு பாடிய (டி.)எம்.எஸ்... எங்கே...! இப்பொழுது பாடுபவர்கள் பாவம்...! ‘பாவமும் புண்ணியமும்...’

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. அட அவர் இல்லேன்னா என்ன ?அவரை மாதிரி ஆயிரம் பேர் :)

      நீங்க சொல்றதுதான் எனக்கு தப்பா படுது:)

      கல்யாண அழைப்பிதழும் மஞ்சளாத்தான் இருக்கு ,பார்க்கக்கூடாதா:)

      ஒரு கோகிலாவிடம் படும்பாடே போதும்னு நினைச்சிட்டார் போலிருக்கு :)

      அவர்கள் பாவமா ,கேட்கிற நாம பாவமோ :)

      Delete
  2. Replies
    1. நெற்றிக்கண் சிவந்ததை ரசீத்தீர்களா :)

      Delete
  3. மஞ்சள் ஹஹா...
    மீண்டும் கோகிலா:)
    நம் முன்னோர்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள் தான்

    தம +1

    ReplyDelete
    Replies
    1. மஞ்சளிலே நீ கொடுத்தாய் குங்குமம்னு பாடலாமோ :)
      பொருத்தம் சரிதானே :)
      அதனால்தான்,அவர்கள் நம் முன்னோர்கள் :)

      Delete
  4. மஞ்சள் ஹஹா...
    மீண்டும் கோகிலா:)
    நம் முன்னோர்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள் தான்

    தம +1

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் கோகிலாவின் பாதிப்பா ,மீண்டும் வந்துள்ள இந்த கருத்துரை :)

      Delete
  5. சீரியசா இருந்தாலும் சிரித்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நீதியே ,சிரிப்பாய் சிரிக்குதே :)

      Delete
  6. 01. அதானே நம்புற மாதிரி இல்லையே.... ?
    02. இதுவும் வாஸ்தவம்தான்.
    03. ஈஸ்மென்ட் கலராக இருக்குமோ... ?
    04. நல்ல யோசனைதான்.
    05. நிச்சயமாக அவர்கள் புண்ணியவான்களே... இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் ஜி

    ReplyDelete
    Replies
    1. காசிருந்தா இந்தியாவில் வாங்க முடியாததும் இருக்கா :)
      ஒருவேளை இவரும் பாதிக்கப் பட்டிருப்பாரோ :)
      நெற்றியில் சினிமாவா தெரியும் :)
      யோசனை வரத்தானே செய்யும் ,தீபா மனதில் இருக்கும் வரை :)
      நல்ல வேலை ,போய் சேர்ந்தார்கள் :)

      Delete
  7. ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் நல்ல மேனேஜர் ...!!!

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினை வந்தால் ஆளைத் தேடி அலைய முடியாதே :)

      Delete
  8. ரசித்தேன் ஜி. என் கணினி மறுபடி படுத்துகிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்னையாய் இருக்கும் என்று படுகிறது. பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. கணினி பிரச்சினை என்றால் ,நம்மை போன்றவர்களுக்கு ஹார்ட்டே நின்னமாதிரி ஆயிடுதே:)

      Delete
  9. Replies
    1. இவ்வளவு ஜாலியான மனிதர் அவர் ,ரசிக்க முடியுதா :)

      Delete
  10. முதலும், மீண்டும் கோகிலா அஹஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. கோகிலாவை அவரால் மட்டுமல்ல ,நம்மாலும் மறக்க முடியலியே :)

      Delete
  11. மூக்குக்கு மேலே கோபம் நெற்றிக்கண் ஆகியதோ?

    ReplyDelete
    Replies
    1. அரிய கண்டுபிடிப்பு தானே அய்யா ,இது :)

      Delete
  12. கொலைவெறிப்பாடல் கேட்காதவர்கள் புண்ணியவான்களே))) ரசித்தேன் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. வந்த வேகத்தை விட போன வேகம் அதிகம் அந்த பாடலுக்கு :)

      Delete