8 May 2016

கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா :)

                ''வெளியே தெரியாம இருந்த தலைவர் 'கீப்'போட பெயர் , இப்போ எப்படி தெரிந்தது ?''
               ''வேட்பு மனுத் தாக்கலில் ,மாற்று வேட்பாளரா  கீப்பை  நிற்கச் செய்திருக்கிறாரே  !''
தூக்கத்தைக் கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான் :)
            ''நிறைய  பேருக்கு கடனைக் கொடுத்திட்டு ,தூக்கமே வரலேன்னு புலம்பிகிட்டே இருந்தீங்களே ,இப்போ எப்படி ?''
            ''நிம்மதியா இருக்கேன் ,கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே !''
முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி :)
          ''டார்லிங் ,மேனேஜருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
       '' உங்க ஆபீஸ் நண்பர்கள்  கொடுத்த பரிசுப் பொருளிலே நாலைந்து ஜால்ரா இருக்கே  !''
கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா :)
          ''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
          ''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''
ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !
கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 
தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...
வளைகாப்பு இன்றியே பெற்ற 
பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !
தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...
காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?

20 comments:

  1. ‘கீப்’ இட் அப்...! தலைவரே...! உயிருக்கு உலை வைத்துக் கொண்டாரோ...?

    கடன் கொடுத்தவன்...தூங்கமா இருப்பான்... ‘யான் பெற்ற இன்பம் பெருக ...!’

    என்னப் பிடுச்ச மாதிரி... மேனேஜயும் பிடுச்சிடாதே...!

    வருங்கால ‘வைப்’பு நிதி நல்லா இருக்குமுன்னு சொல்லுங்க...!

    ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்...!’

    த.ம. 2











    ReplyDelete
    Replies
    1. எவ்வ ள(வ்)வு துணிச்சல் இருந்தா ,பெண்டாட்டி ,பிள்ளைகளை மறந்து கீப்புக்கு முதல்இடம் கொடுத்திருப்பார் :)

      ஒரேயடியா தூங்க வைத்து விடக் கூடும் ,கடன் கொடுத்தவர்கள் :)

      தொடர்பு எல்லை மீறக்கூடாது :)

      நிகழ்காலமே சிறப்பாயிருக்கும் போது சொல்லவா வேணும் :)

      கை சூப்புவது ,அப்படி தொடர்வதாய் தெரியவில்லையே :)

      Delete
  2. ஓகே, கீப் இட் அப்னு சொல்லிடுவோம்!!!!

    அனைத்தையும் ரசித்தேன்ஜி!

    ReplyDelete
    Replies
    1. நம்ம உத்தரவுக்கா அவர் காத்திருக்கிறார் :)

      Delete
  3. 01 அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே... ?
    02. ஆக மொத்தம் கடன்தான் வாழ்க்கை
    03. ஜால்ரா கிராக்கிகளா... ?
    04. அங்கேயும் வைக்கலாமோ...
    05. அருமையான வரிகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. இருக்க வேண்டிய தகுதியில் இதுவும் ஒன்றா :)
      ஆனாலும் நிம்மதியா இருக்காரே :)
      ஒரிஜினல் ஜால்ராக்கள் :)
      அங்கே வைப்பது ஈசி ,எடுப்பது கடினம் :)
      கைவிலங்குகளுக்கு பற்றாக்குறையாகி விடுமா :)

      Delete
  4. 01. இதெல்லாம் இல்லேன்னா -அரசியலே இல்லை!..
    02. அடுத்தவனைச் சுரண்டுனா தான் நிம்மதி - பல பேருக்கு!..
    03. ஜால்ரா தான் வாழ்க்கை ஆகிப் போச்சு!.. அதுக்கு மேல என்ன பேச்சு!..
    04. ஒய்பா.. வைப்பா?.. நல்லா கேட்டீங்களா?...
    05. நாலு பேரைப் புடிச்சி நொங்கி எடுத்துட்டா - சரியாப் போயிடும்..

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகுதி ...நாடு முன்னேறிடும் :)
      வாழ்க்கையே சுரண்டல் மயம்தானா :)
      மானம் கெட்ட ஜால்ராக்கள் பெருகிவிட்டார்கள் :)
      அதிலும் ஒரு சந்தேகம் ,வைப்பா ,கீப்பா :)
      கேட்டா வியாக்கியானம் செய்வார்கள் ,ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்று :)

      Delete
  5. கடன் பாட்டார் நெஞ்சம் போல் என்பதெல்லாம் அந்தக்காலம் !கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்பதே இந்தக்காலம்!

    ReplyDelete
    Replies
    1. இந்த கஷ்டம் எதுக்கு ?கடன் வாங்கவும் வேண்டாம் ,கொடுக்கவும் வேண்டாம் :)

      Delete
  6. ரசித்தேன்! சிரித்தேன்! நன்றிஜி!

    ReplyDelete
    Replies
    1. கலங்கிய இலங்கை வேந்தனை ரசிக்க முடியுதா :)

      Delete
  7. 'அரசியல்ல..' கவுண்டமணி ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. எது எது சகஜமா போச்சு பார்த்தீங்களா ?இதுக்குதான் சொல்றாங்க ,அரசியல் சாக்கடைன்னு :)

      Delete
  8. தலைவருக்கு மட்டும்தானா கீப் இருக்கு ?
    கடன் வாங்கிக் கொண்டு கொடுத்தவனின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு
    இருந்தாலும் நண்பர்கள் இப்படியா போட்டுக் கொடுப்பது
    ஒய்ப்புக்கும் வைப்புக்கும் சின்ன வித்தியாசம் தானே
    கணவனுக்கு கர்ப்பம் தரிக்காமலேயே வளைகாப்பா .

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ,கீப் இல்லாத தலைவர் யாருன்னு கேட்காம போனீங்க :)
      எவ்வளவு நாள்தான் இவரே , தூக்கமின்றி தவிப்பது :)
      மூணு முழம் தானா :)
      செய்தால் தவறில்லைதானே :)

      Delete
  9. கரிகிட்டா சொல்லீடிங்களே...கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்ன்னு

    ReplyDelete
    Replies
    1. என்னால் வைச்சுக்க முடியாதே தவிர ,சொல்லவுமா வராது :)

      Delete
  10. வளைகாப்பு.... நடந்தால் நல்லது!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு நாள் நட்சத்திரம் மண்டபம் பார்க்கணுமா என்ன :)

      Delete