26 May 2016

கண்ணுக்கு அழகாய் இருந்தால் மட்டும் போதுமா :)

 தமிழகத்தில் வேறெங்கும் இல்லா கொடுமை :)          
                    ''என்ன  சொல்றீங்க ,வேலூர்லே வெயிலும் ஜாஸ்தி ,பெயிலும் ஜாஸ்தியா ?'' 
                   ''ஆமா ,உச்சபட்ச வெயிலும் அங்கேதான் ,குறைந்த பட்ச தேர்ச்சி விகிதமும் அங்கேதானே !''
சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காதுதான் :)
                ''கூலாய் இருக்கிறதை கைப்பிடி கிளாஸிலும்,சூடாய் இருப்பதை  சாதா கிளாஸிலும் குடிப்பது எனக்கு பிடிக்கலே ,உனக்கு  ?''
                 ''உடம்பை முழுக்க மூடுற சுடிதாரை  வெளிநாட்டு உடைன்னும்  ,இடுப்பை மறைக்காத சேலையே நமது பாரம்பரிய உடைன்னும்  சொல்றது  எனக்கு பிடிக்கலே,என்ன செய்றது  ?''
கண்ணுக்கு  அழகாய் இருந்தால் மட்டும் போதுமா :)         
           ''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டிய சமையலை பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
            ''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''
டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !
             ''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா என்னாகும் ?''
              ''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''
உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?
ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'

15 comments:

  1. Replies
    1. தங்களின் இன்றைய 'அகியோ மொரிட்டோ'பதிவும் அருமை :)

      Delete
  2. டைம்லி! அட, நீலநிறம் வந்து விட்டதே!

    எதிர்மறை ரசனைகள்!

    அனுபவப் பட்டவர் மிரள்கிறார்!

    ஹா... ஹா... ஹா... ஆனா ஒரே சமயத்தில் எப்படிப் போவாங்க ஜி?

    சுவை ஏறிய உதடுகள்!!!

    ReplyDelete
    Replies
    1. நேற்று நீலநிறம் வராத காரணத்தைச் சொல்லியிருந்தேனே !நீலமின்றி பதிவு போட்டால் எனக்கே தூக்கம் வராது :)

      தூக்கமின்றி தவிக்கிறார் முதலாளி ,தூங்கி வழிகிறார் வாட்ச்மேன் ,என்பதைப் போன்றா :)

      கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருப்பவையெல்லாம் நாவுக்கு ருசியாய் இருக்காதுதானே :)

      டைம் டேபிளை வைத்துக்கொண்டா பிள்ளைப் பெறுவார்கள் :)

      இதிலேது ஆரியம் திராவிடம் :)

      Delete
  3. தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு சூரியன்தான் காரணம் என்று தெரிந்ததா...?

    கூலாய் இருப்பது விலை மதிப்பு மிக்கது... தவறியும் விழுந்திடக் கூடாது... கூல் டவுன்...!

    ஆகட்டும் பார்ப்போம்...!

    சுகமா டெலிவரி ஆகாதுன்னு சொல்லுங்க...!


    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும் முத்துக்கிள்ளைகளே...!

    த.ம. 2



    ReplyDelete
  4. என்னப்பா இது வேலூருக்கு வந்த சோதனை ?

    ReplyDelete
    Replies
    1. வருடாவருடம் அக்னிபகவான் மட்டும்தான் சோதிப்பார் ,இப்போ கலைவாணியும் சோதிக்கிறாரே :)

      Delete
  5. வேலூரை வச்சி இப்படியெல்லாம் யோசிக்க உங்களாலேதான் முடியும் ஜி! அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அங்கே அடிக்கிற 108 டிகிரி வெயில் உஷ்ணம் ,இங்கே என்னையும் தாக்குதே :)

      Delete
  6. 01. இந்தக்கணக்கு உங்களுக்கு எப்படி தெரியும் ஜி ?
    02. இது பாரம்பரியமான விசயமாச்சே...
    03. உண்மைதானே... தலைப்பே சரியில்லையே...
    04. நியாயமான கேள்விதான்.
    05. காரியம் நடந்தால் சரிதான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்திலேயே அதிக வெயில் எப்போதும் அங்கேதான் என்பது தெரிந்த விஷயம்தான்,இப்போது நடந்த +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடைசி இடம் என்று புள்ளி விவரம் வெளியாகி உள்ளதே :)

      கவர்ச்சியான பாரம்பரிய விஷயமா இருக்கே :)

      பார்த்தால் மட்டும் போதுமா :)

      தபால் டெலிவரி இப்போ 'முக்கி'யம் இல்லாம போயிடுச்சே :)

      நல்ல காரியம் நடப்பது நல்லதுதானே :)

      Delete
  7. Replies
    1. வேலூர் ஒற்றுமை சரிதானே :)

      Delete
  8. கண்ணு அழகை ரசிக்கத்தானே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது...திடிரென்று அது கருத்தை ரசிக்குமா...??

    ReplyDelete
    Replies
    1. காலில் அடிபட்டாலும் கண்தான் அழுகிறது ,எப்படி :)

      Delete