29 May 2016

மங்கை ,மாலுமிகளை கரை சேர்ப்பாளா :)

'மூஷிக வாகனன் ' கோவிச்சுக்குவாரே :)
             ''என் பைக்லே ' பிள்ளையார் துணை 'ன்னு  போட்டுக்கக் கூடாதா ,ஏன் ?''
              ''பிள்ளையாரே எலி வாகனத்தில் போகும் போது உனக்கு பைக்கா  ?''
அதெப்படி குடிகாரங்க வாயிலே மட்டும்   ழகரம்  சரியா வருகிறது :)
              ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு சொன்னதுக்கா ,போலீஸ் உன்னைப் பிடிச்சிகிட்டாங்க ?''
            ''ழகரத்தை  சரியா உச்சரித்ததால்  குடிச்சு இருப்பேன்னு சந்தேகப் பட்டுட்டாங்க!''
இந்த 'கோச் 'சடையான் ' உலக கோப்பை வெல்வாரா :)
           ''உங்க கபடி 'கோச் 'சை ரஜி னி ரசிகர்னு எப்படி சொல்றே ?''
            ''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''
பதிலைக் கேட்டு  ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
              ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
              ''அதிலேயே எழுதி இருக்கும் !''
மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா :)
என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று ...
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

16 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ழகரம் ,என் சந்தேகம் சரிதானே :)

      Delete
  2. Replies
    1. பைக்கில் உருளும் குடும்பத்தையும் தானே :)

      Delete
  3. ஆறுபடைவீடுகளில் அருள்புரியும் ஆறுமுகனே! இப்ப பைக்லே பிள்ளையார்களைத் துணைக்கு அழைத்து வந்தாயோ...?!

    குடிச்சிருந்தா ‘ழ’கரம் சிறப்பாக வந்து விழும்...! என்ன மக்கழே நான் சொல்றது...?

    இவரை ஆதரித்தவர் எந்த சடையப்ப வள்ளலோ...?!

    பிராக்டிகலா திங் பண்ணிப் பாருங்க...!

    ஒளிக்கற்றைகளுள் ஒன்று அவளுடையது... மற்றொன்று...?!

    த.ம. 3




    ReplyDelete
    Replies
    1. இவர் பிள்ளையார் அப்பனாச்சே :)

      மக்கழே என்ற வார்த்தையைக் கேட்டு நாளாச்சே :)

      இரட்டை சடையப்ப வள்ளலா இருக்கும் :)

      மயங்கி எழுந்த பின் பண்ணட்டும் :)

      என்னவளுக்கு இரு விழிச் சுடராச்சே :)

      Delete
  4. எனக்கும் தெரியல ஜீ....இரு ஒளிக்கற்றைகள் எப்படி வரும் ........

    ReplyDelete
    Replies
    1. மாலுமியிடம் கேட்டேன் ,அழகிய இரு விழிகளில் இருந்து அது வந்தது என்று சொன்னாரே :)

      Delete
  5. Replies
    1. படத்தைப் பார்த்துதானே :)

      Delete
  6. 01. கேள்வி நியாயமாகத்தான் இருக்கு.
    02. தமிழ் பேச முடியாமல் போகுமோ..
    03. நல்ல கண்டுபிடிப்பு
    04. இதுவும் நல்ல பதில்தான்
    05. ஆஹா அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. பைக்கில் இருப்பது பெண்டாட்டி பிள்ளைகள்தானா :)
      ழகரம் மட்டுமே சிறப்பாய் பேச வருமோ :)
      பிழைக்கத் தெரிந்த கோச்:)
      விவரமான பயபிள்ளயாச்சே :)
      இருட்டிலும் வெளிச்சம் தெரியுதா :)

      Delete
  7. மிக ரசித்தேன் சகோதரா.......
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கே சிறப்பான ழகரம் படுற பாட்டைப் பார்த்தீங்களா :)

      Delete
  8. ழகரத்தையும், கோச்சையும் மிகவும் ரசித்தோம்..ஜி

    ReplyDelete
    Replies
    1. (மாசக்)கடைசியில் வந்து ரசித்தமைக்கு நன்றி :)

      Delete